என் மலர்
புதுச்சேரி
- மருத்துவ மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.
- சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம் மற்றும் ஆனந்த ஆசிரமம் மாணவ - மாணவிகள் கலந்துக் கொண்டனர்.
புதுச்சேரி:
அகில உலக யோகா தினத்ைத முன்னிட்டு புதுவை கடற்கரை சாலையில் ஸ்ரீ பாலாஜி வித்தியாபீத் பல்கலைகழகம் மற்றும் மொர்ஜீதேசாய் பல்கலைகழகம் மற்றும் புதுவை யோகா சிகிச்சை பள்ளியின் சார்பில் யோகா செயல் முறை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மருத்துவ மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.
நிகழ்சியினை ஸ்ரீ பாலாஜி வித்தியாபீத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் பிஸ்வாஸ் தொடங்கி வைத்தார். யோகா சிகிச்சை பள்ளியின் இயக்குனர் பேராசிரியர் டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி யோகா செயல் முறை விளக்கமளித்தார்.
இதில் ஸ்ரீ பாலாஜி வித்தியாபீத் பல்கலைகழகத்திலுள்ள 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மற்றும் இந்தியன் யோகா சங்கம், சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம் மற்றும் ஆனந்த ஆசிரமம் மாணவ - மாணவிகள் கலந்துக் கொண்டனர்.
முடிவில் யோகா சிகிச்சை பள்ளியின் இயக்குனர் பேராசிரியர் டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி நன்றி கூறினார்.
- மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்று 5 இடத்தை பிடித்துள்ளனர்.
- மாணவர்களின் விடா முயற்சியாலும், கற்க வேண்டும் என்ற ஆர்வத்தாலும் இப்பயிற்சி வகுப்பானது மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை, மங்கலக்ஷ்மி நகர் ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், இந்த வருடம் (2022-2023) மொத்தம் 90 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். அதில் 86 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
மேலும் நீட் தேர்வு எழுதிய கவுஷிக்கா - 640, தீபக்-587, அப்துல் அபீப் - 518, நிரஞ்சனா - 500, இளங்கோவன் - 487 ஆகிய 5 மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்று 5 இடத்தை பிடித்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தனதியாகு பொன்னாடை போர்த்தியும், மலர்க்கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் பாராட்டினார்.
இதுகுறித்து ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தனதியாகு கூறியதாவது:-
ஆல்பா பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும், பாடப் பிரிவின் அடிப்படையில் நீட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நீட் சிறப்பு வகுப்பிற்கான அந்தந்த துறை நிபுணர்கள் சென்னை மற்றும் ஹைதராபாத்திலிருந்து வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரி யர்களின் கடின உழைப்பா லும் ஊக்கத்தினாலும், மாணவர்களின் விடா முயற்சியாலும், கற்க வேண்டும் என்ற ஆர்வத்தாலும் இப்பயிற்சி வகுப்பானது மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- செல்வகணபதி எம்.பி. திறந்து வைத்தார்
- மனநல மருத்துவர் பாலன் பொன்மணி ஸ்டீபன் அலமேலு சிறப்பு அறையையும் திறந்து வைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரியாங் குப்பத்தை அடுத்த மணவெளி திலகர் வீதியில் அரிச்சுவடி மனநல மையம் இயங்கி வருகிறது.
இந்த மனநல மையத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவில் செல்வகணபதி எம்.பி. கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி புதிய கட்டிடத்தின் கல்வெட்டை திறந்து வைத்தார். சபா நாயகர் ஏம்பலம் செல்வம், அரிச்சுவடி மனநல மையத்தில் மேலாண்மை இயக்குனரின் அறையை திறந்து வைத்தார்.
முன்னாள் எம்.பி. பேராசி ரியர் ராமதாஸ் மருத்துவர் அறையையும், முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் அலமேலு பெண்கள் சிறப்பு கவுன்சிலிங் அறையை திறந்து வைத்தார்.
மேலும் புதுவை பொது சுகாதார இணை இயக்குனர் முரளி, சமூக நல அறையையும், மனநல மருத்துவர் பாலன் பொன்மணி ஸ்டீபன் அலமேலு சிறப்பு அறையையும் திறந்து வைத்தனர்.
தொடர்ந்து மனநல மருத்துவர் அன்புதுரை, மருந்தியல் நிபுணர் அசோகன், பொதுநல மருத்துவர் அரவிந்தன் ஆகியோர் மையத்தின் சிறப்பு அறைகளை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் சத்தியமூர்த்தி, மருத்துவர் நவசக்தி, கட்டிட வடிவமைப்பளார் குபேந்திரன், என்ஜினீயர் இளங்கோ, தணிகாசலம், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரெஞ்சி சிட்டி தலைவர் சதீஷ்குமார், பொருளாளர் சரவணன் மற்றும் சாதிக், தேவராஜ், ரவிச்சந்திரன், செந்தில், உதயகுமார், ராம்பிரகாஷ், ஜஸ்டின், ஏழுமலை வாசன், ராமச்சந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு மைய இயக்குனர் டாக்டர் இளவழகன் சால்வை அணிவித்தும், பழக்கூடை, நினைவு பரிசு மற்றும் துளசி செடி வழங்கினார்.
முன்னதாக ஆத்திசூடி சிறப்பு பள்ளி தாளாளர் டாக்டர் சத்தியவண்ணன் அனைவரையும் வரவேற்றார். அரிச்சுவடி ஹெல்த் டிரஸ்டி அரசமாதேவி ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரிச்சுவடி மற்றும் ஆத்திசூடி ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
- அரசு அலுவலகங்களை குறிவைத்து கைவரிசை
- கோர்ட்டு வளாகத்தில் எப்போதும் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக இருந்தும் மர்ம வாலிபர் துணிகரமாக செல்போனை திருடிச்சென்றது ஊழியர்க ளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
புதுச்சேரி:
புதுவை தலைமை தபால்நிலையத்தில் சம்பவத்தன்று பணிபுரியும் பெண் ஊழியர், தனது மொபைல் போனை மேஜை மீது வைத்துவிட்டு வாடிக்கையாளர் கேட்ட விண்ணப்பத்தை தேடிய போது செல்போன் திருடு போனது.
அங்கிருந்த சி.சி.டி.வி.யை ஆய்வு செய்ததில் ஊழியர் மேஜை மீது வைத்திருந்த செல்போனை வாடிக்கையாளர் வரிசையில் நின்ற வெள்ளை சட்டை அணிந்த டிப்டாப் வாலிபர் தனது கையில் வைத்திருந்த வெள்ளை பேப்பரை மொபைல்போன் மீது வைத்து திருடிச்சென்றது தெரியவந்தது.
இந்த செல்போன் திருடும் வீடியோ சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பெரியகடை போலீசார் செல்போன் திருடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு இதே நபர் புதுவை கோர்ட்டில் தனி அதிகாரி பிரிவில் பணியாற்றும் பெண் ஊழியரிடமும் இதே முறையில் செல்போன் திருடியுள்ளார். இதுகுறித்து சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்தபோது வெள்ளை சட்டை அணிந்த நபர் தபால் நிலையத்தில் கைவரிசை காட்டியது போல் கையில் பேப்பருடன் வந்து பெண் ஊழியர் அசந்திருந்த சமயத்தில் அவரது செல்போனை திருடிச்சென்றது பதிவாகியிருந்தது. கோர்ட்டு வளாகத்தில் எப்போதும் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக இருந்தும் மர்ம வாலிபர் துணிகரமாக செல்போனை திருடிச்சென்றது ஊழியர்க ளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த 2 திருட்டிலும் ஈடுபட்டது ஒரே நபர் என தெரியவந்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அரசு அலுவலகங்களை தேர்வு செய்து ஊழியர்கள் செல்போனை குறிவைத்து திருடும் நபரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
- சிகாமணி இல்லாததால் அவரது குடும்பத்தினரிடம் வாழுமுனி தகராறு செய்தார்.
- கொலை செய்து விடுகிறேன் பார் என்று மிரட்டி விட்டு சென்று விட்டார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அனந்த புரம் பாரதிவீதியை சேர்ந்த வர் சிகாமணி (வயது35). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாழுமுனி என்ப வருக்கும் கோவில் பிரச்சினை சம்பந்தமாக கடந்த 1½ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று சிகாமணி அப்பகுதியில் நடந்த மாதவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டி ருந்தார். அந்த விழாவுக்கு வாழுமுனியும் சென்றிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் ஆத்திரம் அடங்காத வாழுமுனி அன்று இரவு சிகாமணியின் வீட்டுக்கு சென்றார். அங்கு சிகாமணி இல்லாததால் அவரது குடும்பத்தினரிடம் வாழுமுனி தகராறு செய்தார்.
அந்த நேரத்தில் சிகாமணி ஓட்டலில் டிபன் வாங்கி கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சிகாமணியை வழிமறித்த வாழுமுனி அங்கு கிடந்த விறகு கட்டையை எடுத்து சிகாமணியை சரமாரியாக தாக்கினார். இதனால் வலி தாங்காமல் சிகாமணி அலறல் சத்தம் போட்டார்.
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அதனை பார்த்த சிகாமணி வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து கொலை செய்து விடுகிறேன் பார் என்று மிரட்டி விட்டு சென்று விட்டார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த சிகாமணி புதுவை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து வில்லி யனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- கென்னடி எம்.எல்.ஏ. நகராட்சி அதிகாரியிடம் மனு
- பொதுமக்களின் சுப நிகழ்ச்சிகளுக்காக கல்யாண மண்டபம் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நகராட்சிக்கு சொந்தமான குபேர் மண்டபம் உள்ளது.
இந்த மண்டபத்தை ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் புரணமைக்க இந்த நிதி ஆண்டில் டெண்டர் விட வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கேட்டிருந்தார்.
இக்கோரிக்கையை ஏற்று டெண்டர் விடப்பட்டு 2024 கட்டுமான பணி முடித்து தரப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கென்னடி எம்.எல்.ஏ.விடம் உறுதி அளித்தார். ஆனால் டெண்டர் இன்னும் விடப்படவில்லை. இது சம்பந்தமாக பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் சத்தியமூர்த்தியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து மனு அளித்தார்.
மனுவில் விரைவில் டெண்டர் வைத்து பணியை தொடங்க நடவடிக்கை எடுப்பதோடு உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் சுப நிகழ்ச்சிகளுக்காக கல்யாண மண்டபம் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
நிகழ்ச்சியின் போது தொகுதி துணை செயலாளர் ராஜி, கிளை செயலாளர்கள் செல்வம் ராகேஷ், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் இருதயராஜ், மரி ஆகியோர் உடன் இருந்தனர்.
- வீட்டின் உரிமையாளர் உடனே அந்த குடிநீர் குழாயை கழற்றி பார்த்தார்.
- இதனால் இந்த பிரதான குடிநீரை சமையலுக்கு பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.
புதுச்சேரி:
காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் சுமார் 1400 வீடுகள் உள்ளன, இந்த வீடுகளுக்கு 2 குடிநீர் தேக்க தொட்டி வழியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதில் பிள்ளைச்சாவடி பகுதி வீடுகளுக்கு செல்லும் குடிநீர் மிகவும் துர்நாற்றத்துடனும் கலங்களாகவும் வருவதாக கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் ஒரு வீட்டில் திடீரென குடிநீர் குழாய் அடைபட்டு தண்ணீர் வரவில்லை. வீட்டின் உரிமையாளர் உடனே அந்த குடிநீர் குழாயை கழற்றி பார்த்தார்.
அப்போது குடிநீர் குழாயின் உள்ளே பாம்பு தோல் அடைத்துக் கொண்டிருந்தது பார்த்து திடுக்கிட்டார்.
குடிநீர் குழாயில் பாம்பு தோல் அடைத்துக் கொண்டிருந்தை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இந்த பிரதான குடிநீரை சமையலுக்கு பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.
உடனடியாக பிள்ளைச் சாவடி குடிநீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி குடியிருப்பு மக்கள் நகராட்சி மற்றும் சுகாதாரத் துறைக்கு முன் வைத்துள்ளனர்.
- 200 மாணவர்கள் பங்கேற்பு
- தற்காப்புக் கலைகளின் முக்கியத்துவம் மற்றும் நோக்கம் குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார்.
புதுச்சேரி:
விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி யின் நுண்கலை அமைப்பு சார்பில் மாணவ, மாணவிக ளுக்கான தற்காப்பு கலை பயிற்சி பட்டறை நடைபெற்றது.
பயிற்சி பட்டறையில் பங்கேற்ற மாணவர்களை கல்லூரி டீன் டாக்டர் செந்தில்குமார் வாழ்த்தினார். நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இயக்குனர் (பொறுப்பு) ஆண்ட்ரூ ஜான் சில்வர்ஸ்டர் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக வீர ஆஞ்சநேயர் கலைக்கூட பயிற்சி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனர் அரவிந்த் தற்காப்புக் கலைகளின் முக்கியத்துவம் மற்றும் நோக்கம் குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து சிலம்பம், வர்ம அடிமுறை உட்பட்ட தற்காப்பு நுட்பங்கள் குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் 11 பயிற்சியாளர்கள் தற்காப்பு கலைகளை செய்து காட்டினர். இதில் சுமார் 200 மாணவர்கள் பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அலுவலக நிர்வாகி சந்துரு, நுண்கலை அமைப்பு ஒருங்கிணைப்பா ளர் டாக்டர் சவிதா, உள்தர உறுதிசெல் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் அய்யம்மா மற்றும் நுண்கலை அமைப்பு உறுப்பினர்கள் டாக்டர் நிவேதா, தமிழ்செல்வன் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
- அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் சாந்தாதேவி முன்னிலை வகித்தார்.
- பிரச்சினைகள் குறித்து பல்வேறு விளக்கங்களை போலீசாரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.
புதுச்சேரி:
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஒற்றுமை என்ற அமைப்பின் ஒரு அங்கமாக மாணவர்களி டையே காவல்துறையின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் திருபுவனை போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
திருபுவனை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வரவேற்று பேசினார்.
கூட்டத்திற்கு திருவண்டார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் சாந்தாதேவி முன்னிலை வகித்தார்.
பள்ளி மாணவ-மாணவி கள் இந்த விழிப்புணர்வு கலந்தாய்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமுதாயத்தில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பல்வேறு விளக்கங்களை போலீசாரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.
- அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல்
- செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் திட்டம் 2017-ல் தொடங்கப்பட்டது. கடல் அரிப்பு இயற்கை நிகழ்வு.
புதுச்சேரி:
புதுவை கடற்கரை தலைமை செயலகம் எதிரில் செயற்கை கடல் மணல்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடற்கரை சாலை டூப்ளே சிலை அருகே அருகே கடலில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: ஆண்டுதோறும் சிறிதளவு கடல் அரிப்பு இருக்கும். இந்த ஆண்டு அதிக கடல் அரிப்பு உள்ளது.
இதுகுறித்து கடல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்து ஆய்வு செய்ய கூறியுள்ளோம். செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் திட்டம் 2017-ல் தொடங்கப்பட்டது. கடல் அரிப்பு இயற்கை நிகழ்வு.
ஒரு இடத்தில் மணல் எடுத்தால் அடுத்த இடத்தில் சேரும். இடிந்து விழுந்த பழைய துறைமுக பாலம் முழுவதுமாக இடத்து கப்பல் வருகை, சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய துறைமுகத்துறை இத்திட்டத்துக்கு நிதி தர ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்தார்.
- பணத்தை திருப்பி கேட்ட போது தாக்கி கொலை மிரட்டல்
- தகாத வார்த்தைகளால் திட்டிய ரமேஷ் என்னிடமே பணத்தை திருப்பி கேட்கி றாயா? என்று கூறி வடிவேலுவை தாக்கினார்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே மதகடிப்பட்டு பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேலு (வயது44). தொழிலாளி.
இவர் தனது உறவினரின் மகனுக்கு அரசு வேலை வாங்கி தரக்கோரி கலித்தீர்த்தாள்குப்பம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் கடந்த
2018-ம் ஆண்டு ரூ.2 லட்சம் கொடுத்தார். ஆனால் ரமேஷ் அரசு வேலை வாங்கி தரவில்லை.
இதையடுத்து கொடுத்த பணத்தை பலமுறை திருப்பி கேட்டும் ரமேஷ் கொடுக்க வில்லை. இந்தநிலையில் நேற்று மாலை மதகடிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் ரமேஷ் நின்றுக்கொண்டிருந்தார். இதுபற்றி அறிந்த வடிவேலு தனது நண்பர் அருணாச்சலம் என்பவருடன் சென்று ரமேசிடம் பணத்தை திருப்பி கேட்டார். அப்போது தகாத வார்த்தைகளால் திட்டிய ரமேஷ் என்னிடமே பணத்தை திருப்பி கேட்கி றாயா? என்று கூறி வடிவேலுவை தாக்கினார்.
மேலும் இனிமேல் பணத்தை திருப்பி கேட்டால் கூலிபடையை வைத்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ரமேஷ் திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- முன்னாள் எம்.பி. ராமதாஸ் கண்டனம்
- புதுவை கவர்னர் உள்ளாட்சி தேர்தல்களை நடத்தாமல் சட்ட கடமையிலிருந்து தவறி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள், 40, 243, அரசியலமைப்பு சட்டத்திருத்தங்கள் 73, 74, புதுகிராம மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துச் சட்டம் 1973, புதுவை நகராட்சி சட்டம் 1973 ஆகியவை, புதுவையில், அரசு, கிராம பஞ்சாயத்துக்களையும், நகர மன்றங்களையும் அமைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கு 29 பணிகளையும், நகர மன்றங்களுக்கு 18 பணி களையும் பிரித்துத் தர வேண்டும் என குறிப்பிடுகிறது.மேலும் இவற்றுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். நிதிக் குழு அமைக்க வேண்டும் என கூறுகின்றன. இதை செயல்படுத்த வேண்டியது கவர்னரின் கடமை. ஆனால் புதுவை கவர்னர் உள்ளாட்சி தேர்தல்களை நடத்தாமல் சட்ட கடமையிலிருந்து தவறி வருகிறார்.
கடந்த 55 ஆண்டுகளில்(1968-2023) ஒரே ஒரு முறை 2006-ல் மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. மீண்டும் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் புதுவையில் அடித்தள ஜனநாயகம் மலர முடியாமல் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. மத்திய அரசிடம் இருந்தும் மத்திய நிதிக்குழுவிடம் இருந்தும் உள்ளாட்சி மானியங்கள் பெற முடியவில்லை.
உள்ளாட்சிகளை மையமாகக் கொண்ட மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட முடிய வில்லை. இதில் பணியாற்ற வேண்டிய ஆயிரத்து 74 உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற முடியவில்லை. அரசியல் அமைப்பு கடமைகளை செய்ய தவறிய கவர்னரின் போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது.
தன்னுடைய கடமை தவறிய போக்கினை அவர் புதுவை மக்களுக்கு உடனடி யாக விளக்க வேண்டும். தவறினால் அவர் மீது பதவி நீக்கம் உட்பட நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி அல்லது நீதிமன்றத்தை அணுக வேண்டிய அவசியம் ஏற்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






