என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
கோவில் பிரச்சினையில் வியாபாரி மீது தாக்குதல்
- சிகாமணி இல்லாததால் அவரது குடும்பத்தினரிடம் வாழுமுனி தகராறு செய்தார்.
- கொலை செய்து விடுகிறேன் பார் என்று மிரட்டி விட்டு சென்று விட்டார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அனந்த புரம் பாரதிவீதியை சேர்ந்த வர் சிகாமணி (வயது35). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாழுமுனி என்ப வருக்கும் கோவில் பிரச்சினை சம்பந்தமாக கடந்த 1½ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று சிகாமணி அப்பகுதியில் நடந்த மாதவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டி ருந்தார். அந்த விழாவுக்கு வாழுமுனியும் சென்றிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் ஆத்திரம் அடங்காத வாழுமுனி அன்று இரவு சிகாமணியின் வீட்டுக்கு சென்றார். அங்கு சிகாமணி இல்லாததால் அவரது குடும்பத்தினரிடம் வாழுமுனி தகராறு செய்தார்.
அந்த நேரத்தில் சிகாமணி ஓட்டலில் டிபன் வாங்கி கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சிகாமணியை வழிமறித்த வாழுமுனி அங்கு கிடந்த விறகு கட்டையை எடுத்து சிகாமணியை சரமாரியாக தாக்கினார். இதனால் வலி தாங்காமல் சிகாமணி அலறல் சத்தம் போட்டார்.
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அதனை பார்த்த சிகாமணி வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து கொலை செய்து விடுகிறேன் பார் என்று மிரட்டி விட்டு சென்று விட்டார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த சிகாமணி புதுவை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து வில்லி யனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.






