என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yoga performance"

    • மருத்துவ மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.
    • சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம் மற்றும் ஆனந்த ஆசிரமம் மாணவ - மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

    புதுச்சேரி:

    அகில உலக யோகா தினத்ைத முன்னிட்டு புதுவை கடற்கரை சாலையில் ஸ்ரீ பாலாஜி வித்தியாபீத் பல்கலைகழகம் மற்றும் மொர்ஜீதேசாய் பல்கலைகழகம் மற்றும் புதுவை யோகா சிகிச்சை பள்ளியின் சார்பில் யோகா செயல் முறை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மருத்துவ மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

    நிகழ்சியினை ஸ்ரீ பாலாஜி வித்தியாபீத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் பிஸ்வாஸ் தொடங்கி வைத்தார். யோகா சிகிச்சை பள்ளியின் இயக்குனர் பேராசிரியர் டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி யோகா செயல் முறை விளக்கமளித்தார்.

    இதில் ஸ்ரீ பாலாஜி வித்தியாபீத் பல்கலைகழகத்திலுள்ள 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மற்றும் இந்தியன் யோகா சங்கம், சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம் மற்றும் ஆனந்த ஆசிரமம் மாணவ - மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

    முடிவில் யோகா சிகிச்சை பள்ளியின் இயக்குனர் பேராசிரியர் டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி நன்றி கூறினார்.

    ×