என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குடிநீர் குழாயில் இருந்து வந்த பாம்பு தோல்
    X

    குடிநீர் குழாயில் இருந்து வந்த பாம்பு தோல்.

    குடிநீர் குழாயில் இருந்து வந்த பாம்பு தோல்

    • வீட்டின் உரிமையாளர் உடனே அந்த குடிநீர் குழாயை கழற்றி பார்த்தார்.
    • இதனால் இந்த பிரதான குடிநீரை சமையலுக்கு பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் சுமார் 1400 வீடுகள் உள்ளன, இந்த வீடுகளுக்கு 2 குடிநீர் தேக்க தொட்டி வழியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதில் பிள்ளைச்சாவடி பகுதி வீடுகளுக்கு செல்லும் குடிநீர் மிகவும் துர்நாற்றத்துடனும் கலங்களாகவும் வருவதாக கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் ஒரு வீட்டில் திடீரென குடிநீர் குழாய் அடைபட்டு தண்ணீர் வரவில்லை. வீட்டின் உரிமையாளர் உடனே அந்த குடிநீர் குழாயை கழற்றி பார்த்தார்.

    அப்போது குடிநீர் குழாயின் உள்ளே பாம்பு தோல் அடைத்துக் கொண்டிருந்தது பார்த்து திடுக்கிட்டார்.

    குடிநீர் குழாயில் பாம்பு தோல் அடைத்துக் கொண்டிருந்தை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இந்த பிரதான குடிநீரை சமையலுக்கு பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.

    உடனடியாக பிள்ளைச் சாவடி குடிநீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி குடியிருப்பு மக்கள் நகராட்சி மற்றும் சுகாதாரத் துறைக்கு முன் வைத்துள்ளனர்.

    Next Story
    ×