search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசியல் அமைப்பு கடமைகளை செய்ய கவர்னர் தவறுகிறார்
    X

    கோப்பு படம்.

    அரசியல் அமைப்பு கடமைகளை செய்ய கவர்னர் தவறுகிறார்

    • முன்னாள் எம்.பி. ராமதாஸ் கண்டனம்
    • புதுவை கவர்னர் உள்ளாட்சி தேர்தல்களை நடத்தாமல் சட்ட கடமையிலிருந்து தவறி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள், 40, 243, அரசியலமைப்பு சட்டத்திருத்தங்கள் 73, 74, புதுகிராம மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துச் சட்டம் 1973, புதுவை நகராட்சி சட்டம் 1973 ஆகியவை, புதுவையில், அரசு, கிராம பஞ்சாயத்துக்களையும், நகர மன்றங்களையும் அமைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கு 29 பணிகளையும், நகர மன்றங்களுக்கு 18 பணி களையும் பிரித்துத் தர வேண்டும் என குறிப்பிடுகிறது.மேலும் இவற்றுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். நிதிக் குழு அமைக்க வேண்டும் என கூறுகின்றன. இதை செயல்படுத்த வேண்டியது கவர்னரின் கடமை. ஆனால் புதுவை கவர்னர் உள்ளாட்சி தேர்தல்களை நடத்தாமல் சட்ட கடமையிலிருந்து தவறி வருகிறார்.

    கடந்த 55 ஆண்டுகளில்(1968-2023) ஒரே ஒரு முறை 2006-ல் மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. மீண்டும் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் புதுவையில் அடித்தள ஜனநாயகம் மலர முடியாமல் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. மத்திய அரசிடம் இருந்தும் மத்திய நிதிக்குழுவிடம் இருந்தும் உள்ளாட்சி மானியங்கள் பெற முடியவில்லை.

    உள்ளாட்சிகளை மையமாகக் கொண்ட மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட முடிய வில்லை. இதில் பணியாற்ற வேண்டிய ஆயிரத்து 74 உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற முடியவில்லை. அரசியல் அமைப்பு கடமைகளை செய்ய தவறிய கவர்னரின் போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது.

    தன்னுடைய கடமை தவறிய போக்கினை அவர் புதுவை மக்களுக்கு உடனடி யாக விளக்க வேண்டும். தவறினால் அவர் மீது பதவி நீக்கம் உட்பட நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி அல்லது நீதிமன்றத்தை அணுக வேண்டிய அவசியம் ஏற்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×