என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தற்காப்பு கலை பயிற்சி பட்டறை
    X

    கிருமாம்பாக்கம் விநாயகாமிஷன் அலைடு ஹெல்த் சைன்ஸ் கல்லூரியில் தற்காப்பு கலை பயிற்சி பட்டறை தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    தற்காப்பு கலை பயிற்சி பட்டறை

    • 200 மாணவர்கள் பங்கேற்பு
    • தற்காப்புக் கலைகளின் முக்கியத்துவம் மற்றும் நோக்கம் குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார்.

    புதுச்சேரி:

    விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி யின் நுண்கலை அமைப்பு சார்பில் மாணவ, மாணவிக ளுக்கான தற்காப்பு கலை பயிற்சி பட்டறை நடைபெற்றது.

    பயிற்சி பட்டறையில் பங்கேற்ற மாணவர்களை கல்லூரி டீன் டாக்டர் செந்தில்குமார் வாழ்த்தினார். நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இயக்குனர் (பொறுப்பு) ஆண்ட்ரூ ஜான் சில்வர்ஸ்டர் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக வீர ஆஞ்சநேயர் கலைக்கூட பயிற்சி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனர் அரவிந்த் தற்காப்புக் கலைகளின் முக்கியத்துவம் மற்றும் நோக்கம் குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார்.

    தொடர்ந்து சிலம்பம், வர்ம அடிமுறை உட்பட்ட தற்காப்பு நுட்பங்கள் குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் 11 பயிற்சியாளர்கள் தற்காப்பு கலைகளை செய்து காட்டினர். இதில் சுமார் 200 மாணவர்கள் பயனடைந்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அலுவலக நிர்வாகி சந்துரு, நுண்கலை அமைப்பு ஒருங்கிணைப்பா ளர் டாக்டர் சவிதா, உள்தர உறுதிசெல் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் அய்யம்மா மற்றும் நுண்கலை அமைப்பு உறுப்பினர்கள் டாக்டர் நிவேதா, தமிழ்செல்வன் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×