என் மலர்
புதுச்சேரி

ஊழியர்களின் செல்போன்களை திருடிச் செல்லும் வாலிபர்
ஊழியர்களின் செல்போன்களை திருடிச் செல்லும் வாலிபர்
- அரசு அலுவலகங்களை குறிவைத்து கைவரிசை
- கோர்ட்டு வளாகத்தில் எப்போதும் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக இருந்தும் மர்ம வாலிபர் துணிகரமாக செல்போனை திருடிச்சென்றது ஊழியர்க ளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
புதுச்சேரி:
புதுவை தலைமை தபால்நிலையத்தில் சம்பவத்தன்று பணிபுரியும் பெண் ஊழியர், தனது மொபைல் போனை மேஜை மீது வைத்துவிட்டு வாடிக்கையாளர் கேட்ட விண்ணப்பத்தை தேடிய போது செல்போன் திருடு போனது.
அங்கிருந்த சி.சி.டி.வி.யை ஆய்வு செய்ததில் ஊழியர் மேஜை மீது வைத்திருந்த செல்போனை வாடிக்கையாளர் வரிசையில் நின்ற வெள்ளை சட்டை அணிந்த டிப்டாப் வாலிபர் தனது கையில் வைத்திருந்த வெள்ளை பேப்பரை மொபைல்போன் மீது வைத்து திருடிச்சென்றது தெரியவந்தது.
இந்த செல்போன் திருடும் வீடியோ சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பெரியகடை போலீசார் செல்போன் திருடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு இதே நபர் புதுவை கோர்ட்டில் தனி அதிகாரி பிரிவில் பணியாற்றும் பெண் ஊழியரிடமும் இதே முறையில் செல்போன் திருடியுள்ளார். இதுகுறித்து சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்தபோது வெள்ளை சட்டை அணிந்த நபர் தபால் நிலையத்தில் கைவரிசை காட்டியது போல் கையில் பேப்பருடன் வந்து பெண் ஊழியர் அசந்திருந்த சமயத்தில் அவரது செல்போனை திருடிச்சென்றது பதிவாகியிருந்தது. கோர்ட்டு வளாகத்தில் எப்போதும் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக இருந்தும் மர்ம வாலிபர் துணிகரமாக செல்போனை திருடிச்சென்றது ஊழியர்க ளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த 2 திருட்டிலும் ஈடுபட்டது ஒரே நபர் என தெரியவந்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அரசு அலுவலகங்களை தேர்வு செய்து ஊழியர்கள் செல்போனை குறிவைத்து திருடும் நபரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.






