என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மரத்தில் கார் மோதி வக்கீல் சாவு
    X

    அக்‌ஷய் பிரேம் குமார்

    மரத்தில் கார் மோதி வக்கீல் சாவு

    • வீட்டிற்கு வந்தும் அக்‌ஷய் பிரேம்குமார் விபத்து நடந்தது குறித்து யோசனை செய்துள்ளார்.
    • நெஞ்சு வலிப்பது போல இருந்ததால் காலை 7 மணிக்கு தனது தந்தையிடம் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை வைசியால் வீதியை சேர்ந்தவர் பிரேம்குமார். நேரு வீதியில் கடை வைத்துள்ளார். இவரது மகன் அக்ஷய் பிரேம் குமார் (வயது 25). சட்டம் பயின்ற இவர் பிரல வக்கீலிடம் பயிற்சி பெற்று வந்தார்.

    தந்தையிடம் அதிகாலை சென்னை புறப்பட்டு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    அதன்படி காலை 4 மணிக்கு பிரேம்குமார் தனது காரில் சென்னைக்கு புறப்பட்டார். காரை அவரே ஓட்டி சென்றுள்ளார். காமராஜர் சாலை பெரியார் சிலை அருகில் கார் சென்ற போது ஒரு மரத்தில் எதிர்பாராவிதமாக மோதியது.

    இதில் காரின் முன்பக்கம் சேதமடைந்தது. அக்ஷய் பிரேம் குமாருக்கு மூக்கில் மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர் தனது தந்தைக்கு போன் செய்து விபரத்தை கூறியுள்ளார். உடனே பிரேம்குமார் விரைந்து வந்து மகனை புதுவை காந்தி வீதியில் உள்ள தனியார் மருத்து வமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டார். வீட்டிற்கு வந்தும் அக்ஷய் பிரேம்குமார் விபத்து நடந்தது குறித்து யோசனை செய்துள்ளார். இதனால் அவருக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. நெஞ்சு வலிப்பது போல இருந்ததால் காலை 7 மணிக்கு தனது தந்தையிடம் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.

    மீண்டும் அதே தனியார் மருத்துவமனைக்கு மகனை பிரேம்குமார் அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து புதுவை போக்குவரதது போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×