என் மலர்
புதுச்சேரி

உப்பளம் தொகுதி பொறுப்பாளருமான வெற்றிச்செல்வம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுதி பொருட்கள் வழங்கப்பட்ட காட்சி.
மாணவர்களுக்கு நோட்டு-புத்தகம்
- பிரதமர் மோடியின் தாயார் பிறந்தநாளையொட்டி நடைபெற்றது.
- இதில் சாதனையாளர் பரத்ராஜ், ரதிவர்தினி, பிரஜித், தமிழரசன் மற்றும் கிளை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா கட்சியின் மாநில கூட்டுறவு அமைப்பாளரும், முதலியார்பேட்டை கேந்திர பொறுப்பாளர் மற்றும் உப்பளம் தொகுதி பொறுப்பாளருமான வெற்றிச்செல்வம் தலைமையில் அவரது இல்லத்தில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது.
மேலும் பிரதமர் மோடியின் தாயார் பிறந்தநாளையொட்டி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுதி பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் மூத்த தொழிற்சங்க தலைவர் கந்தசாமி, கிளை நிர்வாகிகள் ஆனந்தன், பலராமன், மணி, ஓவியர் பாஸ்கரன், சாதனையாளர் பரத்ராஜ், ரதிவர்தினி, பிரஜித், தமிழரசன் மற்றும் கிளை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






