என் மலர்
புதுச்சேரி

அ.ம.மு.க.அணி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்த காட்சி.
அ.ம.மு.க.அணி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்
- புதுவை அ.ம.மு.க. மாநில அணி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வில்லியனூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
- வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் ஆகியோர் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
புதுவை அ.ம.மு.க. மாநில அணி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வில்லியனூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும் தெற்கு மாநில செயலாளருமான யூ.சி. ஆறுமுகம், வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் ஆகியோர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கட்சி வெற்றிக்கு பாடுபடுவது, பூத் கமிட்டி அமைப்பது, வார்டு நிர்வாகிகள் நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நந்தகோபால், ஜெ.பேரவை செயலாளர் காண்டீபன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்கள் சுதாகர், கபிரியேல், தொழிற்சங்க பேரவை செயலாளர் சுரேஷ், இலக்கிய அணி செயலாளர் பாலு, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்சன், மாணவர் அணி செயலாளர் ஜெகதீஷ், இளைஞர் பாசறை செயலாளர் இளம்வழுதி ஆகியோர் கலந்து கொண்டனர்.






