என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தொடர்ந்து வழங்கப்பட்ட ‘டாஸ்க்’ செய்து முடித்தவுடன் அடுத்தடுத்து ரூ.175, ரூ.225 வங்கி கணக்கில் பணம் வந்தது.
    • கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பதால் ரூ.4 லட்சம் டெபாசிட் செய்தால் தான் பணத்தை எடுக்க முடியும் என தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சசிதரன் (வயது 23). இவர் புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த 3-ந்தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    அதில் 3 ஓட்டல்களுக்கு 'ரேட்டிங்' கொடுத்தால் ரூ.150 சம்பாதிக்கலாம் என்று ஒரு 'டாஸ்க்' வழங்கப்பட்டது.

    அதை செய்ததும் ரூ.150-ஐ பெறுவதற்கு டெலிகிராம் மூலமாக லிங்க் வந்தது. அந்த இணைப்பில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் சசிதரன் பதிவிட்டார். உடனே அவரின் வங்கி கணக்கில் ரூ.150 வரவு வைக்கப்பட்டது.

    அவருக்கு தொடர்ந்து வழங்கப்பட்ட 'டாஸ்க்' செய்து முடித்தவுடன் அடுத்தடுத்து ரூ.175, ரூ.225 வங்கி கணக்கில் பணம் வந்தது. மேலும் ரூ.ஆயிரம் டெபாசிட் செய்து ரூ.1,300 பெற்றிருக்கிறார். தொடர்ந்து ஆன்லைன் மற்றும் வங்கி கணக்கு மூலமாக 23 முறை ரூ.7 லட்சத்து 78 ஆயிரத்து 232 செலுத்தினார்.

    அதன்பின் அவரது வங்கி கணக்கில் ரூ.13 லட்சத்து 44 ஆயிரத்து 384 இருப்பு உள்ளதாக காட்டியது. அந்த தொகையை சசிதரனால் எடுக்க முடியவில்லை. அப்போது அவரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருந்தது.

    இதுபற்றி கேட்டபோது கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பதால் ரூ.4 லட்சம் டெபாசிட் செய்தால் தான் பணத்தை எடுக்க முடியும் என தெரிவித்தனர்.

    அதன் பின்னரே அவர்கள் பணம் மோசடி செய்திருப்பது சசிதரனுக்கு தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'ஆன்லைனில் யாரும் முதலீடு செய்ய வேண்டாம். புதுவையில் நாளுக்கு நாள் ஆன்லைனில் முதலீடு செய்து பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழக்கிறார்கள். இதில் படித்தவர்கள் தான் அதிக பேர் ஏமாறுகிறார்கள் என்பது வேதனைக்குரியது.

    ஆன்லைனில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருகிறோம், கூடுதல் வட்டி தருகிறோம் என்று சொன்னால் பொதுமக்கள் நம்ப வேண்டாம்' எனக்கூறினர்.

    • மகேஷ்குமார் பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் பாலியல் ரீதியான தொந்தரவுகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
    • புகாரின் மீது புதுவை மாவட்ட ஊரக வளர்ச்சி நிறுவன திட்ட அதிகாரி ராஜேந்திரன் நடவடிக்கை எடுத்து மகேஷ்குமாரை சஸ்பெண்டு செய்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திட்ட இணைப்பு ஒருங்கிணைப்பாளராக பணி புரிந்து வருபவர் மகேஷ்குமார்.

    இவர் அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் பாலியல் ரீதியான தொந்தரவுகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மகேஷ்குமாரின் தொல்லையால் பெண் ஊழியர் ஒருவர் மயக்கமடைந்து காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இது தொடர்பாக அலுவலகத்தில் பணிபுரியும் 10-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் குலோத்துங்களை சந்தித்து மகேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர்.

    இந்த புகாரின் மீது புதுவை மாவட்ட ஊரக வளர்ச்சி நிறுவன திட்ட அதிகாரி ராஜேந்திரன் நடவடிக்கை எடுத்து மகேஷ்குமாரை சஸ்பெண்டு செய்துள்ளார். காரைக்கால் வட்டார வளர்ச்சி அதிகாரி வழங்கிய உண்மை அறிக்கையின் அடிப்படையில் திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஷ்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக உத்தரவில் கூறியுள்ளார்.

    • வைத்திலிங்கம் எம்.பி. கடும் தாக்கு
    • அதில் ஒரு வீட்டில் உள்ள அனைத்து வசதிகளும் உள்ளன.

    புதுச்சேரி:

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விலைவாசி உயர்வு கடுமையாக இருப்பதுதான் மிக பெரிய வருத்தம். கவர்னர் தமிழிசை பேசிய ஆடியோகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். தக்காளி விலை உயர்வு சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது. எல்லா காய்கறிகளின் விலைகளும் உயர்ந்துள்ளது. மட்டனை விட காய்கறி விலை அதிகமாக உள்ளது. காய்கறி இல்லாமல் எப்படி சமைக்க முடியும்?

    இந்த அரசு இதுகுறித்து எதுவும் பேசவில்லை. நிர்மலா சீதாராமன் எதுவும் பேசவில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி மத்திய நிதி அமைச்சரிடம் புதுவைக்கு எந்த திட்டத்தையும் கேட்கவில்லை.

    காலாப்பட்டு மீனவர்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு ஏதாவது நிதி கேட்பார் என நினைத்தேன். ஆனால் கேட்கவில்லை. கடல் அரிப்புக்கு எந்த திட்டமும் இந்த அரசிடம் இல்லை. பொதுப்பணித்துறையில் வரைபடம் போட கூட ஆள் இல்லை. புதுவையில் மின் வெட்டு இல்லாத நாளே இல்லை. இது அரசாங்கத்திற்கு தெரியவில்லை. ஏ.சி. காரிலேயே ஆட்சியாளர்கள் செல்வதால் மக்கள் கஷ்டம் அவர்களுக்கு தெரிவதில்லை. அதிலும் மிக பெரிய கார் வைத்துள்ளார்கள். அதில் ஒரு வீட்டில் உள்ள அனைத்து வசதிகளும் உள்ளன.

    முதல அமைச்சர், அமைச்சர்கள் கார் கண்ணாடிகை கூட கீழே இறக்குவது இல்லை. இதனால் மக்கள் பிரச்சனை அவர்களுக்கு தெரிவதில்லை. இவர்களை விட கவர்னர் மோசம். மதுகடைகள் சாராயக்கடைகளை மட்டுமே திறந்து வருகிறார். மக்கள் வெளியில் வந்து போராட்டம் நடத்தினால்தான் இதற்கு விடியல் வரும் என்ற காரணத்தினால் தான் இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. மாநில அரசாங்கத்தை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் தொடரும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உருளையன்பேட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாநில, மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
    • மண்ணெண்ண விலையோ மரண அடி கொடுக்கிறது” என்று அவ பேசிய ஆடியோவை ஒளிபரப்பினர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராஜா திரையரங்கம் அருகே விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அப்போது காய்கறிக ளுக்கும் சிலிண்டருக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செய்து நூதன போராட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தி ற்கு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ஆனந்தபாபு நடராஜன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்தியலிங்கம் எம்.பி, சீனிய்ர் தலைவர் தேவதாஸ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஷாஜகான் முன்னாள் துணை சபாநாயகர் பாலன், மாநில பொதுச்செயலாளர் திருமுருகன், வழக்கறிஞர் பிரிவு தலைவர் மருது பாண்டியன், உருளையன்பேட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாநில, மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

    நிகழ்ச்சியில் புதுவை கவர்னர் தமிழிசை சில வருடங்களுக்கு முன்பு விலை ஏற்றம் பற்றி பேசிய ஆடியோ "டீசல் விலை திடுக்கிட வைக்கிறது பெட்ரோல் விலை பயமுறுத்துகிறது கியாஸ் விலை கவலைப்பட வைக்கிறது. மண்ணெண்ண விலையோ மரண அடி கொடுக்கிறது" என்று அவ பேசிய ஆடியோவை ஒளிபரப்பினர்.

    • மகாபலிபுரம் மாநாட்டில் வலியுறுத்த அமைச்சர் முடிவு
    • கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மகாபலி புரத்தில் நடைபெறும் மீனவர்களுக்கான மாநாட்டில் அமைச்சர் லட்சுமி நாராயணன் வலியுறுத்த முடிவு செய்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் உயர்மட்ட குழு கூட்டம் பொதுப்பணித் துறை அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது.

    அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துறையின் செயலாளர் நெடுஞ்செழியன், இணை இயக்குனர் தெய்வசிகாமணி, மற்றும் அதிகாரிகள் மீரா சாகீப், கோவிந்தசாமி, நட ராஜன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுவை அரசு சார்பில் மீனவர்களுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மற்றும் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    மத்திய, மாநில அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன.

    தற்போது புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் எந்திரம் பொருத்திய மற்றும் எந்திரம் பொருத்தாத படகுகள் என 4 ஆயிரத்து 599 படகுகள் உள்ளன. இவற்றுடன் ஆழ் கடல் மீன்பிடித்தலை ஊக்குவிக்க தேவையான படகுகள், உபகரணங்கள் வாங்க மத்திய அரசிடம் நிதி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    அனைத்து மீனவ கிராமங்களிலும் மத்திய, மாநில அரசு மூலம் மீனவர்க ளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை விளக்கி மீன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அதிகாரிகளை அமைச்சர் லட்சுமி நாராயணன் வலியுறுத்தினார்.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மகாபலி புரத்தில்  நடைபெறும் மீனவர்களுக்கான மாநாட்டில் அமைச்சர் லட்சுமி நாராயணன் வலியுறுத்த முடிவு செய்துள்ளார்.

    இந்த மாநாட்டில் மத்திய மீன்வளத்துறை மந்திரி புருசோத்தமன் ரூபாலா, மத்திய இணை மந்திரிகள் எல். முருகன், சஞ்சிவ் குமார் பல்யான் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதுச்சேரி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
    • விஷபூச்சிகளின் நடமாட்டத்தால் விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பு தன்மையற்ற இடமாக இந்த மைதானம் உள்ளது.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதி மதகடிப்பட்டில் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். 10 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த பள்ளியில் 6 ஏக்கர் பரப்பில் பள்ளி கட்டிடங்களும், 4 ஏக்கர் பரப்பில் விளையாட்டு மைதானமும் அமை யப்பெற்ற பள்ளியாகும்.

    கிராமப்புற பள்ளிகளில் அதிக நிலப்பரப்பை கொண்டு செயல்படும் இந்த பள்ளியில் ஆண்டு தோறும் புதுச்சேரி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

    இந்த பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானம் தற்போது புதர் மண்டி மைதானம் முழுவதும் குப்பைகள் நிரம்பி அகற்றப்படாமல் உள்ளதால் விஷ பாம்புகள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளது.

    மைதானத்தில் விளையாடும் பள்ளி மாண வர்கள் சில நேரங்களில் பாம்புகளை கண்டு அஞ்சு நடுங்கி ஓட்டம் பிடிக்கி றார்கள். இதனால் சில நேரங்களில் மாணவர்கள் விளையாட ஆர்வம் இல்லாமல் உள்ளனர். மேலும் இந்த மைதானத்தில் தினந்தோறும் காலை, மாலையும் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்கின்ற னர்.

    அதோடு பல்வேறு விளையாட்டு துறைகளை சேர்ந்த இளைஞர்கள் முழுநேர பயிற்சியிலும் ஈடுபடுகின்றனர். ஆனால் விஷபூச்சிகளின் நடமாட்டத்தால் விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பு தன்மையற்ற இடமாக இந்த மைதானம் உள்ளது.

    இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு அங்குள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்க ளின் பெற்றோர்கள், விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் வேலையாட்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • வாய்க்கால்களை சரி செய்வது, சாலைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை காமராஜர் வேளாண் அறிவியல் பெங்களூரு தேசிய வேளாண் பூச்சி பணியகம் சார்பில் உயிரியல் முறையில் மரவள்ளி மாவு பூச்சி மேலாண்மை புதிய ஒட்டுண்ணி அனா கைரஸ் லோப்பசி வயல் வெளி வெளியீட்டு விழா நடந்தது.

    புதுவையை அடுத்த சந்தை புதுக்குப்பம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் அனா கைரஸ் லோப்பசி ஒட்டுண்ணியை மரவள்ளி வயலில் வெளியிட்டு விவசாயிகளுக்கு வழங்கினார்.

    பெங்களூரு தேசிய வேளாண் பூச்சிவளர் பணியகம் மூத்த விஞ்ஞானி சம்பத்குமார் ஒட்டுண்ணியை எவ்வாறு வயல் வெளியில் விடுவது என்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் பேசியதாவது:-

    புதுவையில் 100 நாள் வேலை திட்டத் தில் பணிபுரியும் வேலையாட்கள் குளங்களை தூர் வாருவது, வாய்க்கால்களை சரி செய்வது, சாலைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

    இதனால் விவசாய பணிகளுக்கு வேலையாட்கள் கிடைக்காமல் பெரிதளவு பாதிக்கப்பட்டது.

    இதன் காரணமாக தற்போது 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் வேலையாட்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இது சம்பந்தமாக முதல்- அமைச்சர் ரங்கசாமியிடம் பேசி விரைவில் முடிவு அறிவிக்கப்படும்.

    இவ்வாறு தேனீ.ஜெயக்குமார் பேசினார்.

    நிகழ்ச்சியில் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் சிவசுப்பிரமணியன், பெங்களூரு தேசிய வேளாண் பூச்சி வள அமைவகம் முதன்மை விஞ்ஞானி சிவக்குமார், சைலேஷா வேளாண் அறிவியல் நிலைய. பூச்சிகள் வல்லுநர் விஜயகுமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்

    • இதனை நம்பி கணேசன் தனது பணம் மற்றும் நண்பர்களிடமிருந்து பெற்ற பணத்தை சேர்த்து ரூ.35 லட்சத்தை ராம லிங்கத்திடம் அளித்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி குமரேசன், சந்தோஷ்குமார் மற்றும் ராமலிங்கம் ஆகிய 3 பேர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே திருக்காஞ்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் கணேசன் (வயது52). இவர் நெட்டப்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். அதே தொழிற்சாலையில் நெட்டப்பாக்கம் போலீஸ் வீதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரும் வேலை பார்த்து வருகிறார். ஒரே இடத்தில் இருவரும் வேலை பார்த்து வந்ததால் இவர்கள் அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வது வழக்கம்.

    இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு ராமலிங்கம் தனக்கு தெரிந்த நாகர் கோவில் ஆண்டாள் குளம் பகுதியை சேர்ந்த குமரேசன் (45) மற்றும் கேரள மாநிலம் இடிக்கி மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார்(46) ஆகியோர் மூலம் காரைக்காலில் தனியார் கல்லூரி ஒன்று விலைக்கு உள்ளதாக கணேசனிடம் தெரிவித்தார்.

    அந்த கல்லூரியை விலைக்கு வாங்கினால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் ராமலிங்கம் கூறினார். இதனை நம்பி கணேசன் தனது பணம் மற்றும் நண்பர்களிடமிருந்து பெற்ற பணத்தை சேர்த்து ரூ.35 லட்சத்தை ராம லிங்கத்திடம் அளித்தார்.

    அந்த பணத்தை ராம லிங்கம் குமரேசன் மற்றும் சந்தோஷ்குமாரிடம் வழங்கி யதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் கல்லூரியை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு ராமலிங்கத்திடம் பலமுறை கணேசன் கேட்டார்.

    அதற்கு கணேசன் பல்வேறு காரணங்களை கூறி இழுத்தடித்து வந்தார்.

    இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த கணேசன் இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி குமரேசன், சந்தோஷ்குமார் மற்றும் ராமலிங்கம் ஆகிய 3 பேர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

    • பள்ளி, கல்லுாரி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் வகையில் பெட்டிக்கடைகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
    • குறைந்த பணத்தில் அதிக போதை என்பதால், கஞ்சா சாக்லேட்டுக்கு அதிக கிராக்கி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு அடித்தளமாக கஞ்சா விளங்குகிறது. கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைஞர்கள், வேலைக்கு செல்லாமல் வாழ்க்கையை தொலைத்து, ரவுடிகளாக வலம் வருகின்றனர்.

    நாள் முழுவதும் போதையில் மிதக்கும் இளைஞர்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியாமலேயே கொடூரமான குற்றங்களில் சர்வ சாதாரணமாக ஈடுபடுகின்றனர். குற்றங்களுக்கு ஆரம்ப புள்ளியாக திகழும் கஞ்சாவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு, புதிதாக பொறுப்பேற்றுள்ள டி.ஜி.பி. சீனிவாஸ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, கஞ்சா விற்பனை கும்பலை தேடி தேடி கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் இறங்கி உள்ளனர்.

    இந்நிலையில் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் வகையில் பெட்டிக்கடைகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

    வடமாநிலங்கள் பலவற்றில் குடிசை தொழில்போல் கஞ்சா சாக்லேட்களை தயாரிக்கப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வரும் தொழிலாளர்கள் மொத்தமாக கஞ்சா சாக்லேட்களை வாங்கி வந்து, ஒரு சாக்லேட் ரூ.10-க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    இதனை சாப்பிடுபவர்கள் 3 மணி நேரத்திற்கு போதையில் மிதக்கின்றனர். குறைந்த பணத்தில் அதிக போதை என்பதால், கஞ்சா சாக்லேட்டுக்கு அதிக கிராக்கி உள்ளது.

    சாதாரண பெட்டிக்கடையில் மற்ற சாக்லேட்டுகளுடன் கஞ்சா சாக்லேட்டும் சர்வ சாதாரணமாக டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக சமூக அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். இதையடுத்து புதுச்சேரி போலீசார் பெட்டி கடைகளில் கஞ்சா சாக்லேட்டுகளை சப்ளை செய்யும் வடமாநில தொழிலாளர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • நெதர்லாந்தில் வருகிற 31-ந் தேதி முதல் ஆகஸ்டு 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
    • செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்ட கிராம மக்கள் நேரிலும் சமூக வளைதளத்திலும் பாராட்டி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    18-வது உலக சப்ஜூனியர் சாம்பியன்ஷிப் பிரிட்ஜ் போட்டி நெதர்லாந்தில் வருகிற 31-ந் தேதி முதல் ஆகஸ்டு 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியில் புதுச்சேரி மாநிலம் பாகூர் கொம்யூன் மதிகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி பாலசுப்புரமணியன் என்பவரின் 12-ம் வகுப்பு மாணவன் விக்னேஷ்வரன் (வயது16) மற்றும் பாகூர் தொகுதி குருவிநத்தம் பகுதியை சேர்ந்த ஜோதிபாசு மகன் அதியமான் (வயது 16) ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

    இவர்களுக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்ட கிராம மக்கள் நேரிலும் சமூக வளைதளத்திலும் பாராட்டி வருகின்றனர்.

    • சாலை விபத்தில் சுகந்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
    • இந்த நிலையில் சுகந்திக்கு மீண்டும் தலையில் பாதிப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே நல்லவாடு தெற்கு வீதியை சேர்ந்தவர் மணி. மீனவர். இவரது மூத்த மகள் சுகந்தி(வயது35). இவருக்கும் காரைக்காலை சேர்ந்த நாகமுத்து என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த ஆண்டு காரைக் காலில் ஏற்பட்ட சாலை விபத்தில் சுகந்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.இந்த நிலையில் சுகந்திக்கு மீண்டும் தலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற  காரைக்காலில் இருந்து சுகந்தி நல்லவாட்டில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார்.

    பின்னர் பயண களைப்பாக உள்ளதாக கூறி சுகந்தி படுக்கை அறைக்கு தூங்க சென்றார். சிறிது நேரம் கழித்து அவரது தாய் முத்து லட்சுமி படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது சுகந்தி மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுகந்தியை தூக்கில் இருந்து மீட்டு ஆட்டோவில் தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுகந்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது தந்தை மணி கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • அதே பகுதியை சேர்ந்த வாலிபர் சரத்பாபு என்பவர் வெங்கடேசனை மது குடிக்க அழைத்தார்.
    • இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை உடையார் தோட்டம் ஏழை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது55). பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஆரோக்கியமேரி. இவர் கடந்த 3 ஆண்டுகளாக பிரான்சில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    இவர்கள் வில்லியனூர் பெரியபேட்டில் உள்ள வெங்கடேசனின் மாமியார் வீட்டில் தங்கி வசித்து வருகிறார்கள். வெங்கடேசன் தனது தாய் அஞ்சலையுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை வெங்கடேசன் அங்குள்ள கோவில் அருகே நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் சரத்பாபு என்பவர் வெங்கடேசனை மது குடிக்க அழைத்தார். அதற்கு வெங்கடேசன் மறுத்துவிட்டார்.

    இதையடுத்து சரத்பாபு மது குடிக்க வரவில்லை என்றால் தனக்கு மது குடிக்க பணம் தரவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். ஆனால் வெங்கடேசன் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சரத்பாபு அங்கு கிடந்த தடியை எடுத்து வெங்கடேசனை சரமாரியாக தாக்கினார். அதோடு கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் திரண்டு வரவே சரத்பாபு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்பாபுவை தேடி வருகிறார்கள்.

    ×