என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ஒரு டன்னுக்கும் மேலான பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகள் அகற்றப்பட்டன.
    • மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜ மற்றும் கனகன் ஏரி தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவுண்டன் பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் 2 மணி நேரம் குளம், ஏரி இயற்கைச் சார்ந்த பகுதி களில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் முதல் நிகழ்ச்சியாக கனகன் ஏரியில் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒரு டன்னுக்கும் மேலான பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகள் அகற்றப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் 50 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இப்பணியை மேற்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியை புதுச்சேரி மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜ மற்றும் கனகன் ஏரி தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி யின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆசிரியை ஜெயந்தி செய்திருந்தார். 

    • குளவி கொட்டியதால் காயம் அடைந்த பொது மக்கள் மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றனர்.
    • அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு பழைய ஏரியில் 100 நாள் திட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இன்று காலை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு இருந்த விஷக் குளவிகள் வேலை செய்து கொண்டிருந்த பெண்களை துரத்தி துரத்தி கொட்டியது.

    இதில் பலரும் மயங்கி விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து குளவி கொட்டியதால் காயம் அடைந்த பொது மக்கள் மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றனர்.

    அங்கு 30-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது அதன் பிறகு அவர்கள் வீடு திரும்பி னர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை இன்று ஏற்பட்டது.

    • விநாயகாமிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் நடைபெற்றது,
    • அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்பு முடித்தவர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவ னத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் வேலைவாய்ப்பு துறை சார்பில் சுகாதாரத் தொழிலில் வளர்ந்து வரும் பாதைகள் என்ற தலைப்பில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் டீன் டாக்டர் செந்தில் குமார் வழிகாட்டு தலின்படி இயக்குனர் பொறுப்பு ஆன்ட்ரூ ஜான் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக சென்னை ராமச்சந்திரா மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கதிரியக்கவியல் துணை பேராசிரியர் துளசிதாஸ் கலந்து கொண்டு, ஒவ்வொரு துறை சார்ந்த மாணவர்களுக்கும் இளங்கலை படிப்பிற்கு பிறகு மாணவர்கள் எந்தெந்த துறையில் வேலைவாய்ப்பினை பெறலாம் மற்றும் உயர்கல்வி எங்கெங்கெல்லாம் வாய்ப்புள்ளது என்பதை குறித்து விரிவாக பேசினார்.

    மேலும் அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்பு முடித்த வர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதனை பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டின் உள்ள தேர்வுக்கான விதிமுறைக ளையும் விளக்கி பேசினார். தொடர்ந்து மாணவர்கள், தங்களது சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட 3-ம் ஆண்டு படிக்கும் மாண வர்கள் மற்றும் பயிற்சி பெற்றுவரும் மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. முடிவில் வேலைவாய்ப்பு துறையின் ஒருங்கி ணைப்பா ளர் வளர்மதி நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கல்லூரியின் நிர்வாக அதிகாரி சந்துரு, வேலை வாய்ப்புத்துறை உறுப்பி னர்கள் சந்தோஷ், தமிழ்

    செல்வன், சங்கமித்ரா ஆகியோர் செய்திருந்தனர்.

    • சிகிச்சை பலனின்றி சத்தியமூர்த்தி உயிரிழந்தார். அவரது மனைவி வனிதா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
    • மாட்டின் மீது ேமாதாமல் இருக்க பஸ் டிரைவர் திடீர் பிரேக் போட்டார். இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து பைபாஸ் சாலையின் தடுப்பு கட்டையில் ஏறி இறங்கியது.

    புதுச்சேரி:

    புதுவை சேதராப்பட்டு பழைய காலனியைச் சேர்ந்த வர் சத்தியமூர்த்தி (வயது 40). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் பழங்குடியினர் விடுதலை இயக்கத்தின் மாநில துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். மேலும் இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் ஒப்பந்ததாரராகவும் இருந்து வந்தார்.

    இவரது மனைவி வனிதா. இவர்கள் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள ஜவகர் நகரில் வசித்து வருகின்றனர்.

    நேற்று இரவு தம்பதியி னர் காரில் புதுச்சேரிக்கு சென்று பொருட்களை வாங்கி கொண்டு திருச்சிற்றம் பலம் கூட்ரோடுக்கு வந்து கொண்டிருந்தனர்.

    பட்டானூர் டோல்கேட் அருகே சென்ற போது திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி நோக்கி சென்ற தனியார் பஸ் வந்தது. அப்போ ஒரு மாடு சாலை யின் குறுக்கே சென்றது. மாட்டின் மீது ேமாதாமல் இருக்க பஸ் டிரைவர் திடீர் பிரேக் போட்டார். இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து பைபாஸ் சாலையின் தடுப்பு கட்டையில் ஏறி இறங்கியது.

    மேலும் சத்தியமூர்த்தி ஓட்டி வந்த கார் மீது பஸ் வேகமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த சத்தியமூர்த்தி அவரது மனைவி வனிதா இருவரும் இடுபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனின் ஆம்புலன்ஸ் வாகனம் வந்து இருவரையும் மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு ஏற்றி சென்றது. அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

     சிகிச்சை பலனின்றி சத்தியமூர்த்தி உயிரிழந்தார். அவரது மனைவி வனிதா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

    இதற்கிடையே பஸ் ேமாதியதில் சாலையின் குறுக்கே சென்ற மாடும் இறந்தது. இந்த சம்பவம் குறித்து ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • மதுக்கடை சப்ளையர் குடித்த பீருக்கு ராஜசேகரிடம் பணம் கேட்டார்.
    • இதுகுறித்து புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி புது சாரம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் உத்தரவேலு (வயது 47). இவர் அரியாங் குப்பம்- காக்கையன்தோப்பு பகுதியில் மது கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று சுப்பையா நகர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்ற காந்தி இந்த மதுக்கடைக்கு வந்தார். அவர் காசு கொடுக்காமல் பீர் வாங்கி குடித்தார்.

    இதையடுத்து மதுக்கடை சப்ளையர் குடித்த பீருக்கு ராஜசேகரிடம் பணம் கேட்டார். அப்போது ராஜ சேகர் உள்ளூரில் இருக்கும் என்னிடம் வெளியூரிலிருந்து வந்து தொழில் செய்யும் நீங்கள் பணம் கேட்கிறீர்களா? உங்களுக்கு எவ்வ ளவு தைரியம் இருந்தால் என்னிடம் பணம் கேட்பீர்கள் என வாக்கு வாதம் செய்தார்.

    மேலும் உங்கள் அனைவரையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி ராஜசேகர் தனது கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் மதுபான கடை யில் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார்.

    மேலும் மேஜை, நாற்காலி உள்ளிட்ட அங்குள்ள பொருட்களையும் அடித்து உடைத்து சூறையாடி விட்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • மத்திய தேர்வாணையம் வரை கோப்பு அனுப்பி காலியிடங்களை நிரப்ப தேவையில்லை. மாநில அரசே முடிவு செய்து, பேராசிரியர் பணியி டங்களை நிரப்ப முடியும்.
    • இந்த நிறுவனத்தை இயக்குவதில் காலம் தாழ்த்துவது தமிழுக்கு செய்யும் துரோகம் என தமிழ் அறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 1986-ம் ஆண்டு முதல் இயங்குகிறது.

    மானிடவியல் இலக்கியம், பண்பாடு, கவிதை ஆய்வு செய்து ஆவணப்படுத்தலில் இந்த நிறுவனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழ் தொடர்பான முக்கிய ஆவணங்களை உலகளாவிய அளவில் கொண்டு செல்லும் வகையில் பல நூல்களை வெளி யிட்டுள்ளது.

    26 அறக்கட்டளை இருக்கைகள் அமைக்கப் பட்டு சொற்பொழிவுகளும் நூல்களாக்கப்பட்டுள்ளன.

    பிறமாநிலத்திலிருந்து வரும் கவர்னர் தொடங்கி அதிகாரிகள் வரையில் உள்ளோருக்கும், வெளிநாட்டவருக்கும் தமிழ் கற்று தரும் பணியிலும் ஈடுபட்டனர். ஆனால் இந்த சூழல் தற்போது தலைகீழாக மாறியுள்ளது.

    இந்நிறுவனத்தில் இலக்கியம், மொழியியல், பண்பாட்டு இயல் என 3 துறைகளும், ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிறந்த நூல்கள் இடம் பெற்ற நூலகமும் உள்ளது. இங்கு, 12 பேராசிரியர்கள் படிப்படியாக ஓய்வு பெற்ற போதும் பணியிடத்தை நிரப்பவில்லை. மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் சொசைட்டியா கதான் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் மத்திய தேர்வாணையம் வரை கோப்பு அனுப்பி காலியிடங்களை நிரப்ப தேவையில்லை. மாநில அரசே முடிவு செய்து, பேராசிரியர் பணியி டங்களை நிரப்ப முடியும்.

    பேராசிரியர் பணியிடத்தில் முதல் கட்டமாக 6 இடங்களை நிரப்ப கூட்டம் நடத்தி பல ஆண்டுகளாகியும் செயல்படுத்தவே இல்லை.

    பேராசிரியர்கள் மாணவர்கள் என யாரும் தற்போது இல்லை. இந்த நிறுவனத்தை இயக்குவதில் காலம் தாழ்த்துவது தமிழுக்கு செய்யும் துரோகம் என தமிழ் அறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    அவர்கள் மேலும் கூறியதாவது:-

    பல ஆண்டுகளாக மொழியியல் பண்பாட்டு நிறுவனத்தில் பிரச்சினை நீடித்து வருகிறது. கடந்த 2021 ஏப்ரல் 5-ந் தேதி கவர்னர் தமிழிசை நேரில் சென்று இந்த நிறுவனத்தை ஆய்வு செய்தார். பின்னர், 6 பேராசிரியர காலியிடங்களை நிரப்பி, நிறுவனம் வெளியிட்ட அனைத்து நூல்களையும் மின்னணு நூல்களாக மாற்றவும், நிறுவன வளர்ச்சிக்கு அத்தனை வசதிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்தார்.

    ஆனால் கவர்னர் தமிழிசை கூறிய ஏதும் நடக்கவில்லை. உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படவேண்டிய மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் கலை பண்பாட்டுதுறையின் கீழ் செயல்படுவதுதான் விநோதம். காலதாமதமின்றி மீண்டும் பொலிவுடன் நிறுவனத்தை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு தமிழ் அறிஞர்கள் கூறினர்.

    • மையத்தின் துணை தலைவர் மனோபாலன் மற்றும் சிறப்பு கராத்தே பயிற்சியாளர் நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • பா.ஜனதா நெல்லி தோப்பு தொகுதி சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .

    புதுச்சேரி:

    புதுச்சேரி அஷோக் கராத்தே அசோசியேஷன் சார்பில் பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மக்கள் சேவை மையத்தின் நிறுவனத் தலைவரும், முன்னாள் ராணுவ வீரருமான டாக்டர் சசிக்குமார் தலைமை தாங்கினார். மையத்தின் துணை தலைவர் மனோபாலன் மற்றும் சிறப்பு கராத்தே பயிற்சியாளர் நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜனதா கூட்டுறவு பிரிவு தலைவரும் உப்பளம் தொகுதி பொறுப்பாளருமான வெற்றிச் செல்வம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் புதுச்சேரி சமூக பேரமைப்பு கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் இளங்கோவன், அன்பே சிவம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவி ஜெயந்தி ராஜவேல் மற்றும் பா.ஜனதா நெல்லி தோப்பு தொகுதி சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .

    நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மக்கள் சேவை மையத்தின் பொறுப்பாளர்கள் முத்து, மணிகண்டன் பாலா, மற்றும் சிறப்பு பயிற்சியாளர்கள் ஷர்வின்,கோபி, ஜீவரத்தினம், கார்த்தி, பரத், கோபிகா ஷர்மிளா, யுவராஜ் மற்றும் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • சந்தேகம் அடைந்த போலீசார், அந்த கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் 4 பேர் போலீசாரின் பிடியில் சிக்கினர்.
    • பிடிப்பட்ட தேவநாதனுக்கும், கோனேரிக்குப்பத்தை சேர்ந்த உலகநாதனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் கோனேரிகுப்பம் சுடுகாடு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது போலீஸ் வாகனத்தை கண்டதும் அங்கு பதுங்கியிருந்த கும்பல் ஓட்டம் பிடித்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் 4 பேர் போலீசாரின் பிடியில் சிக்கினர். 3 பேர் தப்பியோடி விட்டனர்.

    பிடிபட்டவர்களிடம் சோதனை செய்தபோது, நாட்டு வெடிகுண்டு, 2 கத்திகள், மிளகாய்பொடி ஆகியவை இருப்பதை கண்டுஅதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து 4 பேரையும் போலீஸ்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கூடப்பாக்கம் ரைஸ்மில் தெருவை சேர்ந்த தேவநாதன் (18), கமலேஷ் (19), அகரம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் நள்ளிரவில் கொள்ளையடிக்க திட்டம் திட்டியதும் தெரியவந்தது.

    மேலும் பிடிப்பட்ட தேவநாதனுக்கும், கோனேரிக்குப்பத்தை சேர்ந்த உலகநாதனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. எனவே உலகநாதனை கொலைசெய்ய சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு, மிளகாய் பொடி, 2 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய கூடப்பாக்கத்தை சேர்ந்த ராமு, தீனா, கவுதம் ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    எதிராளியை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு, கத்திகளுடன் பதுங்கியிருந்த கும்பலை போலீசார் தக்க நேரத்தில் கைது செய்ததால் கொலை சம்பவம் தடுக்கப்பட்டது. இந்த சம்பவம் வில்லியனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழ் ஒளி சிலையை வைப்பதற்கு அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
    • தமிழ் ஒளியின் அறக்கட்டளை தலைவர் சட்ட திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம் அவர் பிறந்த சாமிப்பிள்ளை தோட்டம் கிடங்கள் அம்மன் கோவிலில் நடந்தது.

    இக்கூட்டத்தில் கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழாவை ஒரு வார காலம் சிறப்பாக அரசு நடத்த கோருவது, தமிழ் ஒளி சிலையை வைப்பதற்கு அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    ஆலோசனை கூட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கவிஞர் கலியபெருமாள் வாழ்த்தி பேசினர்.

    கூட்டத்தில் தேவி திருவளவன், , அரிகிருஷ்ணன், சாமிப்பிள்ளை தோட்டம் தலைவர் பார்த்திபன் குமார், மனோ, காஞ்சி கலைச்செல்வன், தஞ்சை ஜகத்குரு, சுந்தர், அருள், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தமிழ் ஒளியின் அறக்கட்டளை தலைவர் சட்ட திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

    • நகராட்சி அதிகாரி பிரபாகரன் , அன்னை அறக்கட்டளை நிறுவன தலைவர் சிவா ஆகியோர் பங்கேற்றனர்.
    • துணை செயலாளர் மனோஜ், இளைஞர் அணி பாலாஜி, கதிர், ப்ரீத்தீவு, இசை,முத்து மற்றும் ஊர் பஞ்சாயத்தாரர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் நேதாஜி நகரில் உள்ள நேதாஜி நகர் விளையாட்டு கழகம் சார்பில் மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டு போட்டி நடைபெற்றது .

    இதில் உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் ஆகியோர் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பரிசு கோப்பை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நகராட்சி அதிகாரி பிரபாகரன் , அன்னை அறக்கட்டளை நிறுவன தலைவர் சிவா ஆகியோர் பங்கேற்றனர்.

    மேலும் தி.மு.க. ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு , திராவிடர் கழகம் காளி, தி.மு.க. கிளைச் செயலாளர் ராகேஷ், துணை செயலாளர் மனோஜ், இளைஞர் அணி பாலாஜி, கதிர், ப்ரீத்தீவு, இசை,முத்து மற்றும் ஊர் பஞ்சாயத்தாரர்கள் கலந்து கொண்டனர்.

    • மத்திய மந்திரியிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி கோரிக்கை
    • சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

    புதுச்சேரி:

    மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை மந்திரி சஞ்சீவ்குமார் பல்யான் நேற்று புதுவைக்கு வந்தார்.

    சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

    அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி, புதுவை மாநிலத்தில் கடற்கரை கிராமங்களில் கடுமையான கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் 45 மீனவ கிராமங்கள் அடுத்தடுத்து பாதிக்கப் பட்டுள்ளது.

    எனவே கடல் அரிப்பை முற்றிலும் தடுக்க மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு செயலர் நெடுஞ்செழியன், தலைமை பொறியாளர் பழனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • திருமணம் செய்து கொண்டு தனது தம்பி ஜெயந்தனுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.
    • ஆத்திரமடைந்த ராஜேஷ் மற்றும் அவரது நண்பர் சுபாஷ் ஆகிய இருவரும் சேர்ந்து ஜெயந்தனை கையாளும், தடியாலும் தாக்கினர்.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே மதகடிப்பட்டு பாளையம் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த வர் ஜெயந்தன்(வயது24). டிரைவர் வேலை செய்து வருகிறார். இவரது அண்ணன் விக்னேஷ். இவர் திருமணம் செய்து கொண்டு தனது தம்பி ஜெயந்தனுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.

    கடந்த 8 மாதத்துக்கு முன்பு விக்னேஷ் குடும்ப சூழ்நிலை காரணமாக ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார். ஆனால் அந்த பணத்தை விக்னேஷ் திரும்ப கொடுக்கவில்லை. இதனால் ராஜேசுக்கும், விக்னேசுக்கும் தகராறு இருந்து வந்தது.

    மேலும் நேற்று இரவு ஜெயந்தன் வீட்டில் இருந்த போது ராஜேசும் அவரது நண்பர் சுபாசும் ஜெயந்தன் வீட்டுக்கு வந்தனர். அப்போது விக்னேஷ் வாங்கிய பணத்தை ஜெயந்த னிடம் கேட்டனர். அதற்கு ஜெயந்தன் அந்த பணத்தை தனது அண்ணனிடம் வாங்கி கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

    இதனால் ராஜேசுக்கும், ஜெயந்தனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ் மற்றும் அவரது நண்பர் சுபாஷ் ஆகிய இருவரும் சேர்ந்து ஜெயந்தனை கையாளும், தடியாலும் தாக்கினர்.

    இதுகுறித்து ஜெயந்தன் திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×