என் மலர்
நீங்கள் தேடியது "drunken liquor"
- மதுக்கடை சப்ளையர் குடித்த பீருக்கு ராஜசேகரிடம் பணம் கேட்டார்.
- இதுகுறித்து புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை வலை வீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி புது சாரம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் உத்தரவேலு (வயது 47). இவர் அரியாங் குப்பம்- காக்கையன்தோப்பு பகுதியில் மது கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று சுப்பையா நகர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்ற காந்தி இந்த மதுக்கடைக்கு வந்தார். அவர் காசு கொடுக்காமல் பீர் வாங்கி குடித்தார்.
இதையடுத்து மதுக்கடை சப்ளையர் குடித்த பீருக்கு ராஜசேகரிடம் பணம் கேட்டார். அப்போது ராஜ சேகர் உள்ளூரில் இருக்கும் என்னிடம் வெளியூரிலிருந்து வந்து தொழில் செய்யும் நீங்கள் பணம் கேட்கிறீர்களா? உங்களுக்கு எவ்வ ளவு தைரியம் இருந்தால் என்னிடம் பணம் கேட்பீர்கள் என வாக்கு வாதம் செய்தார்.
மேலும் உங்கள் அனைவரையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி ராஜசேகர் தனது கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் மதுபான கடை யில் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார்.
மேலும் மேஜை, நாற்காலி உள்ளிட்ட அங்குள்ள பொருட்களையும் அடித்து உடைத்து சூறையாடி விட்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை வலை வீசி தேடி வருகின்றனர்.






