என் மலர்
புதுச்சேரி

காரத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்த காட்சி.
கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
- மையத்தின் துணை தலைவர் மனோபாலன் மற்றும் சிறப்பு கராத்தே பயிற்சியாளர் நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- பா.ஜனதா நெல்லி தோப்பு தொகுதி சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .
புதுச்சேரி:
புதுச்சேரி அஷோக் கராத்தே அசோசியேஷன் சார்பில் பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மக்கள் சேவை மையத்தின் நிறுவனத் தலைவரும், முன்னாள் ராணுவ வீரருமான டாக்டர் சசிக்குமார் தலைமை தாங்கினார். மையத்தின் துணை தலைவர் மனோபாலன் மற்றும் சிறப்பு கராத்தே பயிற்சியாளர் நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜனதா கூட்டுறவு பிரிவு தலைவரும் உப்பளம் தொகுதி பொறுப்பாளருமான வெற்றிச் செல்வம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் புதுச்சேரி சமூக பேரமைப்பு கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் இளங்கோவன், அன்பே சிவம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவி ஜெயந்தி ராஜவேல் மற்றும் பா.ஜனதா நெல்லி தோப்பு தொகுதி சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மக்கள் சேவை மையத்தின் பொறுப்பாளர்கள் முத்து, மணிகண்டன் பாலா, மற்றும் சிறப்பு பயிற்சியாளர்கள் ஷர்வின்,கோபி, ஜீவரத்தினம், கார்த்தி, பரத், கோபிகா ஷர்மிளா, யுவராஜ் மற்றும் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.






