search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
    X

    விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் நடந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் டாக்டர் துளசி தாசுக்கு இயக்குனர் பொறுப்பு ஆன்ட்ருஜான் நினைவு பரிசு வழங்கினார்.

    வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

    • விநாயகாமிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் நடைபெற்றது,
    • அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்பு முடித்தவர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவ னத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் வேலைவாய்ப்பு துறை சார்பில் சுகாதாரத் தொழிலில் வளர்ந்து வரும் பாதைகள் என்ற தலைப்பில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் டீன் டாக்டர் செந்தில் குமார் வழிகாட்டு தலின்படி இயக்குனர் பொறுப்பு ஆன்ட்ரூ ஜான் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக சென்னை ராமச்சந்திரா மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கதிரியக்கவியல் துணை பேராசிரியர் துளசிதாஸ் கலந்து கொண்டு, ஒவ்வொரு துறை சார்ந்த மாணவர்களுக்கும் இளங்கலை படிப்பிற்கு பிறகு மாணவர்கள் எந்தெந்த துறையில் வேலைவாய்ப்பினை பெறலாம் மற்றும் உயர்கல்வி எங்கெங்கெல்லாம் வாய்ப்புள்ளது என்பதை குறித்து விரிவாக பேசினார்.

    மேலும் அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்பு முடித்த வர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதனை பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டின் உள்ள தேர்வுக்கான விதிமுறைக ளையும் விளக்கி பேசினார். தொடர்ந்து மாணவர்கள், தங்களது சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட 3-ம் ஆண்டு படிக்கும் மாண வர்கள் மற்றும் பயிற்சி பெற்றுவரும் மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. முடிவில் வேலைவாய்ப்பு துறையின் ஒருங்கி ணைப்பா ளர் வளர்மதி நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கல்லூரியின் நிர்வாக அதிகாரி சந்துரு, வேலை வாய்ப்புத்துறை உறுப்பி னர்கள் சந்தோஷ், தமிழ்

    செல்வன், சங்கமித்ரா ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×