search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஏ.சி. காரில் உலா வரும் அமைச்சர்களுக்கு புதுவை மக்களின் கஷ்டம் தெரியவில்லை
    X

    கோப்பு படம்.

    ஏ.சி. காரில் உலா வரும் அமைச்சர்களுக்கு புதுவை மக்களின் கஷ்டம் தெரியவில்லை

    • வைத்திலிங்கம் எம்.பி. கடும் தாக்கு
    • அதில் ஒரு வீட்டில் உள்ள அனைத்து வசதிகளும் உள்ளன.

    புதுச்சேரி:

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விலைவாசி உயர்வு கடுமையாக இருப்பதுதான் மிக பெரிய வருத்தம். கவர்னர் தமிழிசை பேசிய ஆடியோகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். தக்காளி விலை உயர்வு சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது. எல்லா காய்கறிகளின் விலைகளும் உயர்ந்துள்ளது. மட்டனை விட காய்கறி விலை அதிகமாக உள்ளது. காய்கறி இல்லாமல் எப்படி சமைக்க முடியும்?

    இந்த அரசு இதுகுறித்து எதுவும் பேசவில்லை. நிர்மலா சீதாராமன் எதுவும் பேசவில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி மத்திய நிதி அமைச்சரிடம் புதுவைக்கு எந்த திட்டத்தையும் கேட்கவில்லை.

    காலாப்பட்டு மீனவர்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு ஏதாவது நிதி கேட்பார் என நினைத்தேன். ஆனால் கேட்கவில்லை. கடல் அரிப்புக்கு எந்த திட்டமும் இந்த அரசிடம் இல்லை. பொதுப்பணித்துறையில் வரைபடம் போட கூட ஆள் இல்லை. புதுவையில் மின் வெட்டு இல்லாத நாளே இல்லை. இது அரசாங்கத்திற்கு தெரியவில்லை. ஏ.சி. காரிலேயே ஆட்சியாளர்கள் செல்வதால் மக்கள் கஷ்டம் அவர்களுக்கு தெரிவதில்லை. அதிலும் மிக பெரிய கார் வைத்துள்ளார்கள். அதில் ஒரு வீட்டில் உள்ள அனைத்து வசதிகளும் உள்ளன.

    முதல அமைச்சர், அமைச்சர்கள் கார் கண்ணாடிகை கூட கீழே இறக்குவது இல்லை. இதனால் மக்கள் பிரச்சனை அவர்களுக்கு தெரிவதில்லை. இவர்களை விட கவர்னர் மோசம். மதுகடைகள் சாராயக்கடைகளை மட்டுமே திறந்து வருகிறார். மக்கள் வெளியில் வந்து போராட்டம் நடத்தினால்தான் இதற்கு விடியல் வரும் என்ற காரணத்தினால் தான் இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. மாநில அரசாங்கத்தை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் தொடரும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×