என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    உலக சாம்பியன்ஷிப் பிரிட்ஜ் போட்டிக்கு மாணவர்கள் நெதர்லாந்து பயணம்
    X

    உலக சப்ஜூனியர் சாம்பியன்ஷிப் பிரிட்ஜ் போட்டியில் விக்னேஷ்வரன், அதியமான் பங்கேற் உள்ளனர்.

    உலக சாம்பியன்ஷிப் பிரிட்ஜ் போட்டிக்கு மாணவர்கள் நெதர்லாந்து பயணம்

    • நெதர்லாந்தில் வருகிற 31-ந் தேதி முதல் ஆகஸ்டு 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
    • செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்ட கிராம மக்கள் நேரிலும் சமூக வளைதளத்திலும் பாராட்டி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    18-வது உலக சப்ஜூனியர் சாம்பியன்ஷிப் பிரிட்ஜ் போட்டி நெதர்லாந்தில் வருகிற 31-ந் தேதி முதல் ஆகஸ்டு 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியில் புதுச்சேரி மாநிலம் பாகூர் கொம்யூன் மதிகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி பாலசுப்புரமணியன் என்பவரின் 12-ம் வகுப்பு மாணவன் விக்னேஷ்வரன் (வயது16) மற்றும் பாகூர் தொகுதி குருவிநத்தம் பகுதியை சேர்ந்த ஜோதிபாசு மகன் அதியமான் (வயது 16) ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

    இவர்களுக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்ட கிராம மக்கள் நேரிலும் சமூக வளைதளத்திலும் பாராட்டி வருகின்றனர்.

    Next Story
    ×