என் மலர்
நீங்கள் தேடியது "Bridge Competition"
- நெதர்லாந்தில் வருகிற 31-ந் தேதி முதல் ஆகஸ்டு 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
- செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்ட கிராம மக்கள் நேரிலும் சமூக வளைதளத்திலும் பாராட்டி வருகின்றனர்.
புதுச்சேரி:
18-வது உலக சப்ஜூனியர் சாம்பியன்ஷிப் பிரிட்ஜ் போட்டி நெதர்லாந்தில் வருகிற 31-ந் தேதி முதல் ஆகஸ்டு 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியில் புதுச்சேரி மாநிலம் பாகூர் கொம்யூன் மதிகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி பாலசுப்புரமணியன் என்பவரின் 12-ம் வகுப்பு மாணவன் விக்னேஷ்வரன் (வயது16) மற்றும் பாகூர் தொகுதி குருவிநத்தம் பகுதியை சேர்ந்த ஜோதிபாசு மகன் அதியமான் (வயது 16) ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இவர்களுக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்ட கிராம மக்கள் நேரிலும் சமூக வளைதளத்திலும் பாராட்டி வருகின்றனர்.






