என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பா.ஜனதா ஆளும் மாநில முதலமைச்சர்களின் ஊழல்கள் மீது மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன்?
    • புதுவையில் பா.ஜனதாவை புல்லு பூண்டு தெரியாத அளவிற்கு ஒழித்து விட வேண்டும்

    புதுச்சேரி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி இழப்பு, நீதி மறுப்பை கண்டித்து புதுவை காங்கிரஸ் கட்சி சார்பில் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுவை காங்கிரஸ் கட்சி தலைவரும் எம்.பி-யுமான வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி பேசியதாவது:-

    கடந்த 9 ஆண்டு கால மத்திய பா.ஜனதா  ஆட்சியில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காங்கிரஸ் மீது பிரதமர் மோடி ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், பா.ஜனதா ஆளும் மாநில முதலமைச்சர்களின் ஊழல்கள் மீது மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன்?

    மாநில அந்தஸ்திற்காகத்தான் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்தோம் என கூறிய ரங்கசாமி இப்போது அதுபற்றி வாய் திறப்பதில்லை. புல்லட் ரெயில் போல புதுவை வளர்ச்சி பெறுவதாக கவர்னர் தமிழிசை கூறுகிறார். ஆனால் முதல்-அமைச்சர் நிதி இல்லை என அதிருப்தி தெரிவிக்கிறார்.

    புதுவை பொதுப்பணி துறையில் பணிகள் ஒதுக்குவதற்காக 20 சதவீதம் கமிஷனாக பெறப்படுகிறது, உரிமை வழங்குவதில் பார் ஒன்றுக்கு ரூ 20 லட்சம் கமிஷன் பெறப்படுகிறது, முதல்-அமைச்சருக்கு உண்டான பங்கு வந்துவிடுகிறது.

    புதுவையில் நில, வீடு அபகரிப்பில் தனி நபர்கள் தான் ஈடுபட்டு வந்தார்கள். தற்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களே ஈடுபட்டு வருகிறார்கள், எனவே வீட்டை பூட்டிவிட்டு யாரும் வெளியே சென்று விடாதீர்கள். வீட்டிற்கு உள்ளே பா.ஜனதா காரன் புகுந்து வீட்டை அபகரித்து கொள்வான்.

    வேலை இல்லா திண்டாட்டத்தால் டாக்டர்கள், என்ஜினியர்கள் கஞ்சா விற்க்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளளனர்.

    கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2 லட்சம் வாக்கு வாக்கு வித்தியாசத்தில் வைத்தியலிங்கத்தை வெற்றி பெற வைத்தது போல் வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளரை 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    2026-ல் சட்டமன்றத் தேர்தல் வரை முதல் அமைச்சர் ரங்கசாமி தாங்க மாட்டார். அவர் வேலையை பாஜகவினர் முடித்து விடுவார்கள். அதனால் 2024-ல் நாடாளுமன்றத் தேர்தலுடன் புதுவை சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

    அதனால் நாம் ஒற்றுமையுடன் இருந்தால் புதுவையில் பா.ஜனதாவை புல்லு பூண்டு தெரியாத அளவிற்கு ஒழித்து விட வேண்டும்

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், சீனியர் துணை தலைவர் தேவதாஸ், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
    • அகில இந்திய அளவிலான கலந்தாய்வு தேதிகள் குறித்து மருத்துவ கலந்தாய்வு கமிட்டி விரைவில் அறிவிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மாணவர்-பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா கவர்னருக்கு கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    பக்கத்து மாநிலங்களில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்பிற்கு அந்தந்த மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் இதுவரை புதுவை மாநிலத்தில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பங்கள் கூட பெற வில்லை என்பது மாணவர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சுகாதாரத்துறை செ ன்டாக் மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகள் மற்றும் மாணவர் சேர்க்கையின் போது பின்பற்றப்படும் நடைமுறைகளை சென்டாக் நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும். அகில இந்திய அளவிலான கலந்தாய்வு தேதிகள் குறித்து மருத்துவ கலந்தாய்வு கமிட்டி விரைவில் அறிவிக்க வேண்டும்.

    எனவே புதுவை அரசு, சுகாதாரத்துறை, சென்டாக் நிர்வாகம் காலதாமதமின்றி மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பெற்று தரவரிசை பட்டியலை

    வெளியிட்டு கலந்தாய்வை நடத்த வேண்டும். இருமாநிலங்களில் அரசு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மீது புதுவை அரசு கடுமை யான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவர்களுக்கு தெரு நாய்களின் உளவியல், பண்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது அவைகளுக்கு வெறி நோய் தடுப்பு ஊசி செலுத்தும் நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படும்.

    புதுச்சேரி:

    இந்தியா அறக்கட்டளை என்ற அரசு சாரா நிறுவனம் மற்றும் பள்ளி கல்வி துறையுடன் இணைந்து ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு தெரு நாய்களின் உளவியல், பண்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது அவைகளுக்கு வெறி நோய் தடுப்பு ஊசி செலுத்தும் நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படுவதற்கு கருத்துரு அளிக்க உழவர் கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள், தெருநாய்களுக்கு உணவு அளிப்பவர்கள் 7598171674 என்ற நகராட்சி வாட்ஸ் ஆப்எண்ணில் பதிவு செய் து கொள்ளுமாறு உழவர் கரை நகராட்சி அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    • மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனரும் முதல்வருமான வெங்கடாசலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கல்லூரி வளாகத்தில் மரக் கன்றுகள் நட்டனர்.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் எஸ்.எம்.வி பள்ளியில் குரு பூர்ணிமா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் தக்ஷஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனருமான தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன் , செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனரும் முதல்வருமான வெங்கடாசலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    எஸ்.எம்.வி பள்ளியின் முதல்வர் அனிதா சாந்தகுமார் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்ச்யில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன்கள் அன்புமலர் மற்றும் அறிவழகர்,

    ஆராய்ச்சி மற்றும் மேம்பட்டு துறையின் டீன் வேல்முருகன், வேலை வாய்ப்புத் துறை அதிகாரி கைலாசம், ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் முதல்வர் மனோகரன், கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டீன் முத்துலட்சுமி, அலைட் ஹெல்த் சயின்ஸ் டீன் டாக்டர் கோபால், வேளாண்மை மற்றும் தோட்டக்கலையின் டீன் முகமது யாசின், பிசியோதெரபி டீன் சிதம்பரம், சட்டக் கல்வித்துறை டீன் சந்திரசேகர் மற்றும் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், எஸ்.எம்.வி. பள்ளியின் துணை முதல்வர் இமானுவேல் மரி ஜோசப் செல்வம் மற்றும் பள்ளியின் நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கல்லூரி வளாகத்தில் மரக் கன்றுகள் நட்டனர்.

    • பயனாளிகளுக்கு பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதையும் பயனாளிகளிடம் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
    • பயனாளிகள் ஒவ்வொருக்கும் தலா ரூ.30 ஆயிரம் வீதம் உதவித் தொகைக்கான ஆணையை

    புதுச்சேரி:

    மத்திய அரசின் ராஜீவ் காந்தி திட்டத்தின் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவர் இறந்தோருக்கு அரசு உதவித்தொகைக்கு உப்பளம் தொகுதியில் இருந்து 25 பயனாளிகள் விண்ணப்பித்து இருந்தனர்.

    இந்நிலையில் பயனாளிகள் ஒவ்வொருக்கும் தலா ரூ.30 ஆயிரம் வீதம் உதவித் தொகைக்கான ஆணையை உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி வழங்கினார்.

    பயனாளிகளுக்கு பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதையும் பயனாளிகளிடம் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜி, ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, தி.மு.க பிரமுகர் நோயல், கிளை செயலாளர்கள் செல்வம், காளப்பன் விநாயகம், ராகேஷ், கோபி, ராஜி, பாஸ்கல், மோரிஸ், ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் இது அறிமுகமாகிறது.
    • பயனடையும் குழந்தையின் பெற்றோர் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் புதுவையில் குடியிருந்து இருக்கவேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்குவது, பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்கள் பெயரில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்வது, கியாஸ் சிலிண்டர் மானியமாக ரூ.300 வழங்குவது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

    இதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு மாதம் நிதியுதவி வழங்கப்பட்டது.

    அதன்பின் புதிய பயனாளிகளை கண்டறிய விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு பயனாளிகளை கண்டறிந்து மீண்டும் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

    இதேபோல் கியாஸ் சிலிண்டர் மானியம், பெண் குழந்தைகள் பெயரில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்வது போன்ற திட்டங்களை செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதில் தற்போது பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் இது அறிமுகமாகிறது.

    இந்த திட்டத்தை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயல்படுத்துகிறது.

    இந்த திட்டத்தில் பயனடையும் குழந்தையின் பெற்றோர் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் புதுவையில் குடியிருந்து இருக்கவேண்டும்.

    17.3.2023-க்கு பிறகு பிறந்த குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம். குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம் வங்கி அல்லது அஞ்சல் நிலையத்தில் டெபாசிட் செய்யப்படும். 21 ஆண்டுகள் கழித்து அந்த பணம் வழங்கப்படும். இந்த திட்டமானது விரைவில் அமலுக்கு வர உள்ளது.

    • புதுவை மக்களும், இந்திய மக்களும் குடியேறி அந்தந்த நாடுகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு வாழ்கின்றர்.
    • பிரான்சு நாட்டை சேர்ந்த பாவாடை கலியபெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை அருங்காட்சியகத்தில் புதுவை- பிரெஞ்சு இடையிலான 300 ஆண்டுக்கும் மேலான உறவை நினைவூட்டும் அஞ்சல் தலை கண்காட்சி நடக்கிறது.

    7-ந் தேதி தொடங்கிய கண்காட்சி வருகிற 17-ந் தேதி வரை நடக்கிறது. நாள்தோறும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை கண்காட்சியை பார்வை யிடலாம். பிரான்சிலும், பிரான்சின் பிற உறவு தேசங்களிலும், புதுவை மக்களும், இந்திய மக்களும் குடியேறி அந்தந்த நாடுகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு வாழ்கின்றர்.

    அதேபோல பிரான்ஸ் மக்கள் இந்தியாவில் புதுவை உள்பட பல மாநிலத்தில் வாழ்கின்றனர். இரு நாடு உறவை போற்ற பிரான்ஸ் தேசிய விடுதலை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதை பெருமை ப்படுத்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டு ள்ளது. இருநாடு உறவுகளை பிரதிபலிக்கும் தபால் தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி முன்னாள் நீதிபதி டேவிட் அன்னுசாமி வாழ்த்துரையுடன் தொடங்கியது. பிரான்சு நாட்டை சேர்ந்த பாவாடை கலியபெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கல்வெட்டு ஆய்வாளர் வில்லியனூர் வெங்கடேசன், மற்றும் அமைப்பாளர்கள் பார்வையிட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அருங்காட்சியக இயக்குநர் அறிவன் தலைமை யில் ஒருங்கிணைப்பாளர் மனோ ரஞ்சினி திருநாவுக்கரசு செய்திருந்தார்.

    • எதிர்கட்சி தலைவர் சிவா கேள்வி
    • மது அதிகாரம் இல்லாத போது மாநில அந்தஸ்தை கையில் எடுப்பதும் பிறகு அதை கிடப்பில் போடுவதும் எந்த விதத்தில் நியாயம்?

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நிதி பிரச்சினை சம்பந்த மாக எந்த அறிவிப்பும் செய்யாமல் மத்திய நிதி மந்திரி சென்றது புதுவை மக்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் பெஸ்ட் புதுவை என சொல்லி சென்றார்.

    ஆனால் அவர் சொல்லி விட்டுச் சென்ற இந்த 2 ஆண்டில் ஒர்ஸ்ட் புதுவையாக மாறியுள்ளது.

    இப்படி ப்பட்ட சூழலில் வரும் பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு மத்திய மந்திரிகள் புதுவைக்கு படையெடுத்து அரசு பணத்தில் நலத்திட்டம் என்ற போர்வையில் தேர் தல் பிரச்சார கூட்டத்தை தொடங்கி யுள்ளனர்.

    10 லட்சம் வாக்காளர்கள் கொண்ட புதுவை மாநிலத்தில் லட்சத்து 41 ஆயிரம் பயனாளிகளுக்கு கடன் உதவி அளிக்கப்பட்டது என்றால் தொகுதிக்கு எவ்வளவு பயனாளிகளுக்கு எந்தெந்த திட்டத்தில் எவ்வளவு தொகை கடனாக வழங்கப்பட்டது என்பதை அரசு விளக்க வேண்டும்.

    புதுவையை சிறந்த மாநிலமாக மாற்ற சிரமமாக உள்ளது என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்- அமைச்சர் தமது வேதனையை சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

    இப்போதாவது முதல்- அமைச்சர் உணர்ந்து கடிதத்தின் மூலம் வெளிப்படுத்தியது வரவேற்கத் தக்கது.

    ஆனால் அதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் உள்ள மாநில அந்தஸ்து குறித்து அந்த கடித்தத்தில் குறிப்பிடாதது

    ஏன்? மாநில அரசு அதிகாரத்திற்கு மாநில அந்தஸ்து தேவை என அடிக்கடி தனது குமுறலை வெளிப்படு த்தியவர் ரங்கசாமி தான்.

    கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப் பட்ட மாநில அந்தஸ்து தீர்மானம் இன்னும் கவர்னர் மாளிகையில் தூங்குகிறது. இதற்கு என்ன அர்த்தம். தமது அதிகாரம் இல்லாத போது மாநில அந்தஸ்தை கையில் எடுப்பதும் பிறகு அதை கிடப்பில் போடுவதும் எந்த விதத்தில் நியாயம்?

    தேசிய ஜனநாயக கூட்டணியின் நோக்கம் என்ன? புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுப்பதா? இல்லையா? இதற்கு முதல்- அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

    • செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், சீனுவாசன், பெரியமார்க்கெட் வியாபாரிகள் பலர் ஆர்ப்பாட்ட த்தில் பங்கேற்றனர்.
    • தனியார் அடிக்காசு வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி நகரக்குழு சார்பில் நேருவீதி- காந்தி வீதி சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கட்சியின் நகர செயலாளர் மதிவாணன் தலைமை வகித்தார். சீனியர் தலைவர் முருகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம் கண்டன உரையாற்றினார். செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், சீனுவாசன், பெரியமார்க்கெட் வியாபாரிகள் பலர் ஆர்ப்பாட்ட த்தில் பங்கேற்றனர்.

    4 ஆயிரம் குடும்பங்க ளுக்கு வாழ்வாதாரமாக உள்ள பெரிய மார்க்கெட்டை சீர்குலைக்கக் கூடாது. கட்டுமான பணிகளை படிப்படியாக செய்ய வேண்டும். மார்க்கெட்டில் குடிநீர், கழிப்பிட வசதி செய்ய வேண்டும். நெல்லித்தோப்பு மார்க்கெட் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்.

    முத்தியால்பேட்டை மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். சன்டே மார்க்கெட் வியாபாரிகளிடம் தனியார் அடிக்காசு வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • சம்பவத்தன்று இந்த டிராக்டர் மற்றும் டிராக்டர் பெட்டியை யாரோ திருடி சென்று விட்டனர்.
    • திருடப்பட்ட டிராக்டர் மற்றும் டிராக்டர் பெட்டியின் மதிப்பு ரூ.5 லட்சமாகும். அந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி

    புதுவை அரும்பார்த்த புரத்தை அடுத்த, முத்து பிள்ளைபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 45). பொதுப்பணித்துறை காண்டிராக்டர்.

    கடந்த ஆண்டு தவளக்குப்பத்தை அடுத்த டி.என்.பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் நடந்த பணிக்காக ராஜா தனக்கு சொந்தமான டிராக்டரை நிறுத்தி வைத்து இருந்தார்.

    சம்பவத்தன்று இந்த டிராக்டர் மற்றும் டிராக்டர் பெட்டியை யாரோ திருடி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் கரிக்கலாம்பக்கம் அருகே தமிழக பகுதியான கீழ் குமாரமங்கலத்தை சேர்ந்த ஜல்லி மணல் வியாபாரி சுந்தர் என்ற தனசேகரன் ராஜாவுக்கு போன் செய்து உனது டிராக்டரை இன்ஸ்சூரன்ஸ் பதிவு முடிந்து விட்டது. இன்னும் ஏன்? புதுப்பிக்கவில்லை என கேட்டார்.

    அப்போது திருடு போன டிராக்டரை பற்றி சுந்தர் கேட்டதால் அவர் மீது ராஜாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் ராஜா குமாரமங்கலத்துக்கு சென்று சுந்தரிடம் கேட்டபோது உனது டிராக்டரை திருடி அதை கடலூர் பகுதியில் ரூ.80 ஆயிரம் அடமானம் செய்து வைத்திருப்பதாக சுந்தர் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா இதுபற்றி தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.அதன் பெரில் போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் மற்றும் டிராக்டர் பெட்டியை திருடி அடகு வைத்த சுந்தர் என்ற தனசேகரனை கைது செய்தனர். திருடப்பட்ட டிராக்டர் மற்றும் டிராக்டர் பெட்டியின் மதிப்பு ரூ.5 லட்சமாகும். அந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • புதுவை சைபர் கிரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை
    • மோதிலால் கொடுத்த புகாரை ஏற்றுக் கொண்டு சைபர் கிரைம் போலீசார் அந்த ஆன்லைன் நிறுவனத்தின் கணக்கை முடக்கியுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால் பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர் மோதிலால். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வந்த விலை குறைவாக மிகத் தரமாக இருப்பது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தை பார்த்து 2 ட்ராக் பேண்ட்களை ஆர்டர் செய்தார்.

    பொருள் வீட்டுக்கு வந்தவுடன் ரூ.ஆயிரத்து 100 பணத்தை கொடுத்து விட்டு கொரியரில் வந்த பார்சலை பிரித்து பார்த்தார்.

    அவர் ஆர்டர் செய்த பேன்டிற்கும், நிறத்திற்கும், தரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத ஒரே ஒரு பேண்ட் கொரியரில் வந்தது.

    அந்த நிறுவனத்திற்கு பல்வேறு வகையில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆர்டர் செய்யும் போது பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள பொருளை திருப்பி அனுப்ப அனைத்து வசதிகளும் உள்ளது என்று தெரிவித்திருந்தனர்.

    ஆனால் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆதாரங்களுடன் அந்த இளைஞர் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். ஆனால் இணைய வழி போலீசார் ஆன்லைன் நிறுவனத்தை தொடர்பு கொள்ள முயன்றும் இயலவில்லை. இதனால் மோதிலால் கொடுத்த புகாரை ஏற்றுக் கொண்டு சைபர் கிரைம் போலீசார் அந்த ஆன்லைன் நிறுவனத்தின் கணக்கை முடக்கியுள்ளனர்.

    இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது:-

    ஆன்லைனில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி எந்த பொருளையும் ஆர்டர் செய்ய வேண்டாம். ஆன்லைனில் கவர்ச்சி கரமான விளம்ப ரத்தை கொடுக்கும் பெரும்பாலான நிறு வனங்கள் பொது மக்களை ஏமாற்றுகின்றன. நம்பிக்கையுடைய ஒரு சில நிறுவனங்களில் மட்டும் ஆன்லைன் பொருட்களை வாங்குங்கள்.

    பொதுமக்களை ஏமாற்றும் மேற்படி ஆன்லைன் நிறுவனங்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் சம்பந்தமான புகார்களை தெரிவிக்க 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    • பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்களை நியமித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
    • அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சமூக நீதிப் பேரவையின் கூட்டம் ராஜா நகர் பெரியார் படிப்பகத்தில் நடந்தது.

    நிறுவன தலைவர் முன்னாள் அமைச்சர் விசுவநாதன் தலைமை வகித்தார். திராவிடர் கழகத் தலைவர். சிவ.வீரமணி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கீதநாதன் பணிகள் குறித்து பேசினார். கூட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் அன்பரசன், சமூக நீதிப் பேரவை தமிழ்ச்செல்வன், காட்டுநாயக்கன் சங்கத் தலைவர் சுரேஷ், திராவிடர் கழகம் சிவராஜ், விடுதலை வாசகர் வட்டம் தலைவர் நடராஜன், சமூக நீதிப் பேரவை எல்லை சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்களை நியமித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை இந்த கல்வியாண்டில் பெற வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் மூலம் மாணவர்க ளுக்கு வழங்கப்பட்ட கடன், வட்டி, அசல் தள்ளுபடி ரத்து செய்ய வேண்டும்.

    சி.பி.எஸ்.இ பாடத்தி ட்டத்தை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். கட்டாயம் தமிழ் இடம்பெற அரசாணை வெளியிட வேண்டும். குடிசைமாற்று வாரிய வீடுகளுக்கு இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும். கல்வித்துறையில் பாரபட்சமின்றி இடமாற்றம் செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×