என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    25 பயனாளிகளுக்கு உதவித் தொகை ஆணை-கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
    X

    25 பயனாளிகளுக்கு உதவித் தொகை ஆணையை கென்னடி எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.

    25 பயனாளிகளுக்கு உதவித் தொகை ஆணை-கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்

    • பயனாளிகளுக்கு பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதையும் பயனாளிகளிடம் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
    • பயனாளிகள் ஒவ்வொருக்கும் தலா ரூ.30 ஆயிரம் வீதம் உதவித் தொகைக்கான ஆணையை

    புதுச்சேரி:

    மத்திய அரசின் ராஜீவ் காந்தி திட்டத்தின் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவர் இறந்தோருக்கு அரசு உதவித்தொகைக்கு உப்பளம் தொகுதியில் இருந்து 25 பயனாளிகள் விண்ணப்பித்து இருந்தனர்.

    இந்நிலையில் பயனாளிகள் ஒவ்வொருக்கும் தலா ரூ.30 ஆயிரம் வீதம் உதவித் தொகைக்கான ஆணையை உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி வழங்கினார்.

    பயனாளிகளுக்கு பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதையும் பயனாளிகளிடம் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜி, ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, தி.மு.க பிரமுகர் நோயல், கிளை செயலாளர்கள் செல்வம், காளப்பன் விநாயகம், ராகேஷ், கோபி, ராஜி, பாஸ்கல், மோரிஸ், ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×