என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை பெறவேண்டும்
- மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
- அகில இந்திய அளவிலான கலந்தாய்வு தேதிகள் குறித்து மருத்துவ கலந்தாய்வு கமிட்டி விரைவில் அறிவிக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில மாணவர்-பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா கவர்னருக்கு கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
பக்கத்து மாநிலங்களில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்பிற்கு அந்தந்த மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் இதுவரை புதுவை மாநிலத்தில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பங்கள் கூட பெற வில்லை என்பது மாணவர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதாரத்துறை செ ன்டாக் மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகள் மற்றும் மாணவர் சேர்க்கையின் போது பின்பற்றப்படும் நடைமுறைகளை சென்டாக் நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும். அகில இந்திய அளவிலான கலந்தாய்வு தேதிகள் குறித்து மருத்துவ கலந்தாய்வு கமிட்டி விரைவில் அறிவிக்க வேண்டும்.
எனவே புதுவை அரசு, சுகாதாரத்துறை, சென்டாக் நிர்வாகம் காலதாமதமின்றி மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பெற்று தரவரிசை பட்டியலை
வெளியிட்டு கலந்தாய்வை நடத்த வேண்டும். இருமாநிலங்களில் அரசு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மீது புதுவை அரசு கடுமை யான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






