search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தரம்குறைந்த பொருள் அனுப்பி மோசடி ஆன்லைன் நிறுவன கணக்கு முடக்கம்
    X

    கோப்பு படம்.

    தரம்குறைந்த பொருள் அனுப்பி மோசடி ஆன்லைன் நிறுவன கணக்கு முடக்கம்

    • புதுவை சைபர் கிரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை
    • மோதிலால் கொடுத்த புகாரை ஏற்றுக் கொண்டு சைபர் கிரைம் போலீசார் அந்த ஆன்லைன் நிறுவனத்தின் கணக்கை முடக்கியுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால் பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர் மோதிலால். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வந்த விலை குறைவாக மிகத் தரமாக இருப்பது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தை பார்த்து 2 ட்ராக் பேண்ட்களை ஆர்டர் செய்தார்.

    பொருள் வீட்டுக்கு வந்தவுடன் ரூ.ஆயிரத்து 100 பணத்தை கொடுத்து விட்டு கொரியரில் வந்த பார்சலை பிரித்து பார்த்தார்.

    அவர் ஆர்டர் செய்த பேன்டிற்கும், நிறத்திற்கும், தரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத ஒரே ஒரு பேண்ட் கொரியரில் வந்தது.

    அந்த நிறுவனத்திற்கு பல்வேறு வகையில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆர்டர் செய்யும் போது பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள பொருளை திருப்பி அனுப்ப அனைத்து வசதிகளும் உள்ளது என்று தெரிவித்திருந்தனர்.

    ஆனால் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆதாரங்களுடன் அந்த இளைஞர் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். ஆனால் இணைய வழி போலீசார் ஆன்லைன் நிறுவனத்தை தொடர்பு கொள்ள முயன்றும் இயலவில்லை. இதனால் மோதிலால் கொடுத்த புகாரை ஏற்றுக் கொண்டு சைபர் கிரைம் போலீசார் அந்த ஆன்லைன் நிறுவனத்தின் கணக்கை முடக்கியுள்ளனர்.

    இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது:-

    ஆன்லைனில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி எந்த பொருளையும் ஆர்டர் செய்ய வேண்டாம். ஆன்லைனில் கவர்ச்சி கரமான விளம்ப ரத்தை கொடுக்கும் பெரும்பாலான நிறு வனங்கள் பொது மக்களை ஏமாற்றுகின்றன. நம்பிக்கையுடைய ஒரு சில நிறுவனங்களில் மட்டும் ஆன்லைன் பொருட்களை வாங்குங்கள்.

    பொதுமக்களை ஏமாற்றும் மேற்படி ஆன்லைன் நிறுவனங்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் சம்பந்தமான புகார்களை தெரிவிக்க 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×