என் மலர்
நீங்கள் தேடியது "Manakula Vinayagar SMV School"
- மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனரும் முதல்வருமான வெங்கடாசலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கல்லூரி வளாகத்தில் மரக் கன்றுகள் நட்டனர்.
புதுச்சேரி:
மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் எஸ்.எம்.வி பள்ளியில் குரு பூர்ணிமா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தக்ஷஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனருமான தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன் , செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனரும் முதல்வருமான வெங்கடாசலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்.எம்.வி பள்ளியின் முதல்வர் அனிதா சாந்தகுமார் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்ச்யில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன்கள் அன்புமலர் மற்றும் அறிவழகர்,
ஆராய்ச்சி மற்றும் மேம்பட்டு துறையின் டீன் வேல்முருகன், வேலை வாய்ப்புத் துறை அதிகாரி கைலாசம், ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் முதல்வர் மனோகரன், கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டீன் முத்துலட்சுமி, அலைட் ஹெல்த் சயின்ஸ் டீன் டாக்டர் கோபால், வேளாண்மை மற்றும் தோட்டக்கலையின் டீன் முகமது யாசின், பிசியோதெரபி டீன் சிதம்பரம், சட்டக் கல்வித்துறை டீன் சந்திரசேகர் மற்றும் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், எஸ்.எம்.வி. பள்ளியின் துணை முதல்வர் இமானுவேல் மரி ஜோசப் செல்வம் மற்றும் பள்ளியின் நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கல்லூரி வளாகத்தில் மரக் கன்றுகள் நட்டனர்.






