என் மலர்
நீங்கள் தேடியது "Social Justice Council"
- பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்களை நியமித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சமூக நீதிப் பேரவையின் கூட்டம் ராஜா நகர் பெரியார் படிப்பகத்தில் நடந்தது.
நிறுவன தலைவர் முன்னாள் அமைச்சர் விசுவநாதன் தலைமை வகித்தார். திராவிடர் கழகத் தலைவர். சிவ.வீரமணி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கீதநாதன் பணிகள் குறித்து பேசினார். கூட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் அன்பரசன், சமூக நீதிப் பேரவை தமிழ்ச்செல்வன், காட்டுநாயக்கன் சங்கத் தலைவர் சுரேஷ், திராவிடர் கழகம் சிவராஜ், விடுதலை வாசகர் வட்டம் தலைவர் நடராஜன், சமூக நீதிப் பேரவை எல்லை சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்களை நியமித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை இந்த கல்வியாண்டில் பெற வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் மூலம் மாணவர்க ளுக்கு வழங்கப்பட்ட கடன், வட்டி, அசல் தள்ளுபடி ரத்து செய்ய வேண்டும்.
சி.பி.எஸ்.இ பாடத்தி ட்டத்தை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். கட்டாயம் தமிழ் இடம்பெற அரசாணை வெளியிட வேண்டும். குடிசைமாற்று வாரிய வீடுகளுக்கு இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும். கல்வித்துறையில் பாரபட்சமின்றி இடமாற்றம் செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் மாநில தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.
- அவருக்கு பல்வேறு சமூக அமைப்பினர் பாராட்டுகளை தெரிவித்தனர்.
தொண்டி
தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் இந்தியா அமைப்பின் சர்வதேச செய்தியாளர் கூட்டம் ஜம்முவில் அதன் இந்திய இயக்குநர் சர்கார் பாட்னாவி தலைமையில் நடைபெற்றது. இதில் 16 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அமைதி தூதர் விருது டாக்டர் ஷாஹிதா பர்வீனுக்கு வழங்கப்பட்டது.
அகில இந்திய தேசிய செயலாளர் சுந்தரம், மாநில சட்ட செயலாளர் ஜெயராமன், மாநில தலைவர் பாரீஸ், தேசிய செயலர் பர்வீஸ் மாலிக், தேசிய ஆலோசகர் டாக்டர் சுதிர் கத்யால், பொதுச்செயலாளர் லலித்கய், உதவி தலைவர் ரேணு பாலா, குல்தீப், டாக்டர் ஷாரிக் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நாட்டின் வளர்ச்சி, அமைதி மற்றும் சகோரத்துவத்தை மீட்டெடுப்பது சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது. இதில் அமைப்பின் மாநில தலைவராக தொண்டியை அடுத்த நம்புதாளையைச் சேர்ந்த பாரீஸ் தேர்ந்தெ டுக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு சமூக அமைப்பினர் பாராட்டுகளை தெரிவித்தனர்.






