என் மலர்
புதுச்சேரி
- விவசாய தொழிலாளர் சங்கம் கோரிக்கை
- 100 நாள் வேலையின்போது இறக்கும் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை விவசாய தொழிலாளர் சங்க பேரவைக்கூட்டம் பனையடிக்குப்பம் கிராமத்தில் நடந்தது.
மகேஷ்வரி தலைமை வகித்தார். சுதா, ரெஜினா முன்னிலை வகித்தனர். வேலை அறிக்கையை பழனிவேல் தாக்கல் செய்தார். விவசாய தொழிலாளர் சங்க தேசிய துணைத்தலைவர் ராமமூர்த்தி, மாநில துணை செயலளார் சேதுசெல்வம், பொதுச்செயலாளர் விஜயபாலன், பாகூர் தொகுதி நாராயணன், தொகுதிக்குழு உறுப்பினர் கங்காதரன், அகில இந்திய தலித் உரிமை இயக்கம் ஓம்பிரகாஷ் மற்றும் கிராம சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஊரக வேலை திட்டத்தை ஆண்டு முழுவதும் வழங்கி நாட்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர் நலவாரியத்தை செயல்படுத்தி உறுப்பினர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க வேண்டும். 100 நாள் வேலையின்போது இறக்கும் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
ரேஷன்கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும். பனையடிகுப்பம் கிராமத்துக்கு இலவச மனைப்பட்டா என அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பெண் தொழிலாளர்கள் சங்கத்தில் சேர்ந்தால் வேலை தர மாட்டோம் என நிர்வாகத்தால் மிரட்டப்படுகின்றனர்.
- மதுபான ஆலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு சட்டப்படி அளிக்க வேண்டிய பாதுகாப்பை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில ஏ.ஐ.யூ.டி.யூ.சி தலைவர் சங்கரன், செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் பெண் தொழிலாளர்களுக்கு ஆலை நிர்வாகம் சட்டபூர்வ பாதுகாப்பை அளிப்பதில்லை. குறிப்பாக மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் பெண் தொழிலாளர்களுக்கு நிர்வாகம் தொழிலாளர் நல சட்டங்களில் கண்டுள்ள சலுகைகளை, உரிமைகளை அளிப்பதில்லை. பெண் தொழிலாளர்கள் சங்கத்தில் சேர்ந்தால் வேலை தர மாட்டோம் என நிர்வாகத்தால் மிரட்டப்படுகின்றனர்.
இந்த ஆலைகள் மீது புகார் கூறினால் தொழிலாளர் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளது. தொழிற்சாலை வாகனங்களில் ஆய்வுக்கு செல்வதால் அதிகாரிகளின் மீதான நம்பக்தன்மை கேள்விக் குறியாகிறது.
இந்த நிலையில் மேலும் 5 மதுபான ஆலைகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளது. இந்த ஆலைகளில் சட்டப்படி வசதிகளை செய்துதர எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் பெற வேண்டும். மதுபான ஆலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு சட்டப்படி அளிக்க வேண்டிய பாதுகாப்பை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
- மத்திய நிதி மந்திரியிடம் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் வலியுறுத்தல்
- புதுவை மாநிலத்தில் ரேசன் கடைகள் மூலம் மாநில திட்டத்தின் கீழ் அரிசி வழங்க அனுமதிக்க வேண்டும்.
புதுச்சேரி:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் ரூ 1 கோடிக்கு மேல் மாநிலத்திற்குள் வணிகம் செய்பவர்களுக்கு ஜி.எஸ்.டி. தளர்வு அளிக்கப்படுகிறது. ஆனால் சிறிய பரப்பளவை கொண்ட புதுவையில் வணிகர்கள் மாநிலத்திற்குள் ரூ 1 கோடி வணிகம் செய்வது சாத்தியமற்றது, அதனால் அவர்கள் பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்கின்றனர். புதுவை மாநிலத்தில் வணிகம் செய்பவர்களுக்கு நாடு முழுவதும் வணிகம் செய்யவும் அதில் ஜி.எஸ்.டி. தளர்வும் அளிக்க வேண்டும்.
புதுவை மாநிலத்தில் போதுமான அளவு தொழிற்சாலைகள் இல்லாததால் 10 லட்சம் மக்கள் தொகையில் 1 லட்சம் பேர் ஊரக வளர்ச்சித் துறை மூலம் வழங்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலைக்கு செல்கின்றனர்.
அதில் வழங்கப்படும் ரூ. 293 வருமானத்தை வைத்து அவர்கள் வாழவேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
இவ்வாறு சென்றால் அவர்களின் வாழ்வாதாரம் உயராமல் அவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் மட்டுமே வாழ முடியும். அவர்களின் வாழ்வா தாரத்தை உயர்த்த சலுகைகள் வழங்கி புதிய தொழிற்சாலைகளை திறக்க ஊக்குவித்தால் அவர்கள் மூலம் புதுவை மக்களும் வாழ்வில் வளர்ச்சி அடைவார்கள். மேலும் புதுவை மாநிலத்தில் ரேசன் கடைகள் மூலம் மாநில திட்டத்தின் கீழ் அரிசி வழங்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு சாய்.ஜெ.சரவணன்குமார் மனுவில் கூறியுள்ளார்.
கல்யணசுந்தரம் எம்.எல்.ஏ.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமனை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து அளித்த மனுவில், காலாப்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மீனவ கிராமங்கள் கடல் அரிப்பால் அதிக அளவில் பாதிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை யை முன்வைத்தார்.
- மாநில இளைஞரணி துணை செயலாளர் சங்கீதபிரியன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஒலிம்பிக் வீரர் விஷாலை மதகடிபட்டில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை அணி வித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி:
ஜெர்மனியில் நடை பெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பவர் லிப்டிங் விளையாட்டுப் போட்டியில் 4 வெள்ளி பதக்கங்களை பெற்று புதுவையை சேர்ந்த இளம் வீரர் விஷால் இந்தியா விற்கும் புதுவைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இந்த இளைஞரை பாராட்டும் வகையில் புதுச்சேரி மாநில பா.ம.க. கட்சியின் அமைப்பாளர் கணபதி தலைமையில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஒலிம்பிக் வீரர் விஷாலை மதகடிபட்டில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை அணி வித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் புதுவைமாநில வன்னியர் சங்க செயலாளர்கள் நாகப்பன், நரசிம்மன், ராஜசேகர், மாலா தங்கமணி, மாநில துணை அமைப்பாளர் வடிவேல், மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் திருபுவனை தொகுதி பொறுப்பாளர் சரவணன், இளைஞரணி கலைச்செல்வம், மாநில இளைஞரணி துணை செயலாளர் சங்கீதபிரியன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மத்திய அரசு அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- புதுச்சேரிக்கு நிதி அதிகாரம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று புதுச்சேரிக்கு வந்தார். இதனை தொடர்ந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், தலைமை செயலர் மற்றும் அரசு செயலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
மத்திய அரசு அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அத்திட்டங்களை செயல்படுத்துவதில் புதுச்சேரி மாநிலம் முன் உதாரணமாக எப்போதும் திகழ வேண்டும். கடந்த 4 மாதங்களில் 4 ஆயிரம் பயனாளிகள் மத்திய அரசு திட்டங்களில் புதுச்சேரி அரசு சேர்த்துள்ளது. விடுப்பட்ட பயனாளிகளையும் இத்திட்டங்களில் சேர்க்க வேண்டும்.
அடுத்த ஓராண்டிற்குள் மத்திய அரசு திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும். புதுச்சேரியில் பழங்குடியினர் குறைவாக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் அதிக அளவில் உள்ளனர்.
அவர்களிடம் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்த்து பயனடைய செய்ய வேண்டும்.
புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்க்க வேண்டும். புதுச்சேரிக்கு நிதி அதிகாரம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து பிரதமர், உள்துறை அமைச்சகத்திடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- மத்திய நிதி மந்திரியிடம் அ.தி.மு.க. மனு
- அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க சுமார் ரூ.500 கோடி அளவிற்கு கூடுதல் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். தனி கணக்கு தொடங்கப்பட்ட கடந்த 2007-ம் ஆண்டுக்கு முன் வழங்கப்பட்ட கடன் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். 15-வது மத்திய நிதி குழுவிலோ, அல்லது அடுத்து வரும் 16-வது மத்திய நிதி குழுவிலோ புதுவையை சேர்க்க வேண்டும்.
இதனால் புதுவைக்கு கூடுதலாக சுமார் ரூ.1500 கோடி மத்திய அரசின் நிதி சட்டப்படி கிடைக்கும். சுற்றுலாவை மேம்படுத்தவும், மாநி லத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசு ரூ.3 ஆயிரம் கோடி சிறப்பு நிதியை வழங்க வேண்டும்.
அரசு சார்பு நிறுவனங்கள் மீண்டும் செயல்படவும், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க சுமார் ரூ.500 கோடி அளவிற்கு கூடுதல் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
10 ஆண்டுகள் நடத்தப்படாத உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்
நஷ்டமில்லாமல் இயங்கும் மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை முழுமையாக கைவிட வேண்டும். ஒவ்வொரு நிதி யாண்டிலும் 10 சதவீதம் அளவிற்கு கூடுதலாக மத்திய அரசு புதுவை மாநிலத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும். வேலை வாய்ப்பை பெருக்க ராணுவ தளவாட உற்பத்தி தொழி ற்சாலை, மற்றும் மத்திய அரசின் தொழிற்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும்
இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
சந்திப்பின் போது அ.தி.மு.க. மாநில இணைசெயலாளர்கள் திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன், மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன் ஆகியோர் உடனிருந்தனர்.
- கணவன்-மனைவி மீது புகார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் லோகாம்பிகை (வயது58). இவர் தனது வீட்டின் எதிரே வாழை மரம் வளர்த்து வருகிறார்.
சம்பவத்தன்று அந்த வாழை மரத்தை மாடு மேய்ந்து சேதப்படுத்தியது. இதனை கண்ட லோகாம்பிகை அந்த மாட்டை விரட்டி விட்டு யாருடைய மாடு என்று விசாரித்து கொண்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த அச்சுதன் மேனன் மற்றும் அவரது மனைவி அன்பரசி ஆகியோர் லோகாம்பிகையை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை கல்லால் தாக்கினர்.
இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அதிகார பீடத்தில் உள்ளவர்கள் நில வணிகர்கள் என்பதால் மோசடிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
- விடுதலைக்கு பிறகு மாநில அரசிடம் இருந்த மொத்த அரசு புறம்போக்கு நிலங்கள், தற்போதுள்ள நிலங்கள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செய்லாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவில் சொத்து அபகரிப்பு வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. மற்றும் அவனது மகன் உள்ளிட்டோரிடம் விசாரணை செய்ய போலீஸ்துறை தயக்கம் காட்டுகிறது. தற்போது பத்திர பதிவுத் துறையில் கடந்த 3 ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் மாயமாகி உள்ளது.
இதனை அதிகார பின்புலம் இல்லாமல் செய்திட முடியாது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் ஆவணங்களை அரசு மீட்டெடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
நில மோசடியில் பொதுமக்கள் அளித்த புகார்கள் மீது அரசின் நடவடிக்கை விவரத்தை வெளியிட வேண்டும். அதிகார பீடத்தில் உள்ளவர்கள் நில வணிகர்கள் என்பதால் மோசடிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
எனவே மாநில முதல்வர் 2011 முதல் 2023 வரையில் பத்திரப்பதிவு துறையில் நடந்துள்ள மோசடிகள் குறித்தும், விடுதலைக்கு பிறகு மாநில அரசிடம் இருந்த மொத்த அரசு புறம்போக்கு நிலங்கள், தற்போதுள்ள நிலங்கள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நடுத்தர மக்களின் சொத்துக்கள் பாதுகாக்க நிலமோசடிக்கு எதிரான உறுதியாக போராட மாநில மக்கள் முன் வரவேண்டும். வரும் 11-ந் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட்டு அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.
- தேசிய அளவிலான தேக்வோண்டோ போட்டி நடைபெற்றது.
- அமிர்தா ஆச்சார்யா பொறியியல் கல்லூரி, மற்றும் சிராக் ராகவேந்திரா ஆகியோர் தேர்வாகி தேசிய போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
புதுச்சேரி:
40-வது தேசிய ஜூனியர் தேக்வோண்டோ குறுகி மற்றும் 13-வது தேசிய பூம்சே போட்டிகள் கர்நாடக மாநிலம் சிமோகாவில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் 3 நாட்கள் நடைபெறுகிறது.
இப்போட்டி புதுவை விளையாட்டு நலத்துறை மற்றும் பாண்டிச்சேரி ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதுவை தேக்வோண்டோ விளையாட்டு சங்கத்தால் நடந்து முடிந்த மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற ஜூனியர் மாணவ-மாணவிகள் முறையே தேர்ந்தெடுக்கப்பட்ட சிவபிரசாத் அமலோற்பவம் பள்ளி, ரமணன் சங்கர வித்யாலயா பள்ளி, பீஷ்மர் மற்றும் பிரவீன் குமார் வாசவி இண்டர்நேஷனல் பள்ளி, மனோஜ் வித்யா நிகேதன் பள்ளி, ஹேமச்சந்திரன் மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரி, அகல்யா மற்றும் வைஷ்ணவி சவராயலு நாயக்கர் பள்ளி, பிருந்தா செவன்த்டே பள்ளி, மிஸ்ரா சுசிலாபாய் பள்ளி, அமிர்தா ஆச்சார்யா பொறியியல் கல்லூரி, மற்றும் சிராக் ராகவேந்திரா ஆகியோர் தேர்வாகி தேசிய போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
சர்வதேச பயிற்சியாளர் பகவத்சிங் தலைமை பயிற்சியாளராகவும், கீர்த்தனா மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் பயிற்சியாளர்களாகவும் தக்ஷிணபிரியா அரவிந்த் செல்வன் ஆகியோர் தேசிய நடுவர்களாகவும் உடன் செல்கின்றனர்.
புதுவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற வழி அனுப்பும் விழாவில் புதுவை தேக்வோண்டோ விளையாட்டு சங்கத்தின் நிறுவனத் தலைவர் மாஸ்டர் ஸ்டாலின் கலந்துகொண்டு வீரர்களை வாழ்த்தி பேசி உபகரணங்கள் வழங்கி வழி அனுப்பி வைத்தார் உடன் பொதுச் செயலாளர் மஞ்சுநாதன் பொருளாளர் அரவிந்த், அமைப்பு செயலாளர் நந்தகுமார், மற்றும் சங்க நிர்வாகி மதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- இதுதொடர்பாக இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
- இரு தரப்பினரும் தனித்தனியே மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர்.
புதுச்சேரி:
புதுவை முத்திரையர்பாளையம் வழுதாவூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஹரிதேவ். இவரது மனைவி ராணி. இவர் அப்பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடை அருகே அதே பகுதியை சேர்ந்த குணவதி என்பவரும் ஜூஸ் கடை நடத்தி வருகிறார்.
இருவருக்கும் தொழில் போட்டி இருந்து வந்தது. இதனால் அடிக்கடி இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இதுதொடர்பாக இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. குணவதி மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்கள் ராணி மற்றும் அவரது சம்பந்தி சாந்தி ஆகியோரை கத்தியால் வெட்டியும், கல்லாலும் தாக்கினர்.
இதுபோல் ராணி தரப்பினர் குணவதி மற்றும் அவரது உறவினர் பிரவீன்குமார் ஆகியோரை தாக்கினர்.
இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவைக்கு கார் மூலம் வந்த அவரை கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை பூங்கொத்து அளித்து வரவேற்றார்.
- போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ் ஆகியோரும் பூங்கொத்து அளித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமனை வரவேற்றனர்.
புதுச்சேரி:
புதுவைக்கு அரசு முறை பயணமாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் இன்று வந்தார்.
சென்னையில் இருந்து புதுவைக்கு கார் மூலம் வந்த அவரை கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை பூங்கொத்து அளித்து வரவேற்றார்.
தொடர்ந்து முதல்- அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ. ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய்.ஜெ. சரவணன்குமார், தலைமைச் செயலர் ராஜீவ்வர்மா, போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ் ஆகியோரும் பூங்கொத்து அளித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமனை வரவேற்றனர்.
- தனியார் மருத்துவமனையுடன் அரசு ஒப்பந்தம்
- மத்தியதிட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன், டாக்டர் முத்துக்குமரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவச இருதய சிகிச்சை திட்டத்தை சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையுடன் இணைந்து வழங்க புதுவை அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பல்லோ அதிகாரிகள் கையெழுத்திட்டு ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், அரசு செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் ஸ்ரீராமுலு, மத்தியதிட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன், டாக்டர் முத்துக்குமரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






