என் மலர்
புதுச்சேரி

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம் அ.தி.மு.க.வினர் மனு அளித்த காட்சி.
கடன் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்
- மத்திய நிதி மந்திரியிடம் அ.தி.மு.க. மனு
- அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க சுமார் ரூ.500 கோடி அளவிற்கு கூடுதல் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். தனி கணக்கு தொடங்கப்பட்ட கடந்த 2007-ம் ஆண்டுக்கு முன் வழங்கப்பட்ட கடன் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். 15-வது மத்திய நிதி குழுவிலோ, அல்லது அடுத்து வரும் 16-வது மத்திய நிதி குழுவிலோ புதுவையை சேர்க்க வேண்டும்.
இதனால் புதுவைக்கு கூடுதலாக சுமார் ரூ.1500 கோடி மத்திய அரசின் நிதி சட்டப்படி கிடைக்கும். சுற்றுலாவை மேம்படுத்தவும், மாநி லத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசு ரூ.3 ஆயிரம் கோடி சிறப்பு நிதியை வழங்க வேண்டும்.
அரசு சார்பு நிறுவனங்கள் மீண்டும் செயல்படவும், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க சுமார் ரூ.500 கோடி அளவிற்கு கூடுதல் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
10 ஆண்டுகள் நடத்தப்படாத உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்
நஷ்டமில்லாமல் இயங்கும் மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை முழுமையாக கைவிட வேண்டும். ஒவ்வொரு நிதி யாண்டிலும் 10 சதவீதம் அளவிற்கு கூடுதலாக மத்திய அரசு புதுவை மாநிலத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும். வேலை வாய்ப்பை பெருக்க ராணுவ தளவாட உற்பத்தி தொழி ற்சாலை, மற்றும் மத்திய அரசின் தொழிற்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும்
இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
சந்திப்பின் போது அ.தி.மு.க. மாநில இணைசெயலாளர்கள் திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன், மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன் ஆகியோர் உடனிருந்தனர்.






