என் மலர்
புதுச்சேரி
- மத்திய நிதி மந்திரியிடம் அரசு சார்பில் வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த கவர்னர் மாளிகைக்கு வந்திருந்தார்.
- புதுச்சேரி வளர்ச்சிக்கு எந்த கோரிக்கைகளை முன்வைக்கலாம் என இருவரும் பேசி முடிவு செய்தனர்.
புதுச்சேரி:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் புதுவைக்கு வந்தார்.
மத்திய நிதி மந்திரி புதுவை வருகை தலைமை செயலகத்தில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், அதிகாரிகளோடு புதுவையின் நிதி நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார்.
மத்திய நிதிமந்திரி வருகையையொட்டி சென்னையிலிருந்து நேற்று இரவு கவர்னர் தமிழிசை புதுவைக்கு காரில் வந்தார். அவர் வரும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அவர் புதுவைக்கு வர காலதாமதம் ஏற்பட்டது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி, மத்திய நிதி மந்திரியிடம் அரசு சார்பில் வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த கவர்னர் மாளிகைக்கு வந்திருந்தார்.
அவரிடம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கவர்னர் வர தாமதம் ஆவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் முதல்-அமைச்சர் ரங்கசாமி கவர்னர் மாளிகையில் காத்திருந்தார்.
நள்ளிரவு 12.30 மணிக்கு வந்த கவர்னர் தமிழிசையுடன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.
அப்போது மத்திய நிதி மந்திரியிடம் புதுச்சேரி வளர்ச்சிக்கு எந்த கோரிக்கைகளை முன்வைக்கலாம் என இருவரும் பேசி முடிவு செய்தனர்.
- மத்திய சுகாதார அமைச்சகம் 2 மாதம் புகையிலை இல்லாத இளைய தலைமுறை என்ற விழிப்புணர்வை தொடங்கியுள்ளது.
- புகையிலை பொருட்கள் பயன்படுத்துவது தெரிந்தால் யாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்ற தகவலும் அறிவிப்பு பலகையில் இடம்பெற வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.
புதுச்சேரி:
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, புற்றுநோய், நுரையீரல் நோய், இருதயநோய், பக்கவாதம் உட்பட நாள்பட்ட நோய்களுக்கு புகையிலை முக்கிய ஆபத்து காரணியாகும்.
உலக சுகாதார அமைப்பின் தரவின்படி இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சத்து 35 ஆயிரம் பேர் புகையிலையால் இறக்கின்றனர். இதையடுத்து மத்திய சுகாதார அமைச்சகம் 2 மாதம் புகையிலை இல்லாத இளைய தலைமுறை என்ற விழிப்புணர்வை தொடங்கியுள்ளது.
வருகிற 31-ந் தேதியுடன் விழிப்புணர்வு முடிவடைய உள்ளது. இதையொட்டி புதுவை மாநிலத்திலும் புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள அரசு கட்டிடங்கள் அனைத்தும் புகையிலை பயன்பாடு இல்லாத பகுதிகளாக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி அரசு அலுவலகங்களில் புகையிலை பொருட்களை பயன்படுத்தவும், கொண்டு செல்லவும் அனுமதியில்லை. இதுகுறித்த அறிவிப்பு பலகை நுழைவுவாயில், காத்திருப்பு இடங்களில் வைக்கப்படும். புகையிலை பொருட்கள் பயன்படுத்துவது தெரிந்தால் யாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்ற தகவலும் அறிவிப்பு பலகையில் இடம்பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.
- கஞ்சா விற்பனை செய்யப்ப டுவதாக கோரிமேடு மற்றும் சேதராப்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து சிறு சிறு பொட்ட லங்களாக கட்டி விற்று வந்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் கஞ்சா நடமாட்டத்தை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடிய வில்லை. இந்த நிலையில் சேதராப்பட்டு மற்றும் துத்திப்பட்டு தொழிற் போட்டை பகுதியில் வட மாநில தொழிலா ளர்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்ப டுவதாக கோரிமேடு மற்றும் சேதராப்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், வெங்கடாசலபதி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ், கோவிந்தராஜ், மற்றும் போலீசார் துத்துப்பட்டு பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தனர். விசாரணையில் அவர்கள் விழுப்புரத்தை சேர்ந்த அப்பாஸ் 37) வில்லியனூர் பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் 20 என்பதும் இவர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.
மேலும் இவர்களுடன் துத்திப்பட்டை சேர்ந்த பிரதாப் ராஜ் என்ற வெரி பிரதாப் 24, பிலோ என்ற பிலோ மின்தாஸ், சுரேஷ் என்ற சுமன் 23, சுபாஷ் 23 ஆகியோரும் கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது.
மேலும் விசார ணையில் இவர்கள் ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து சிறு சிறு பொட்ட லங்களாக கட்டி விற்று வந்துள்ளனர்.
இதை தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களி டமிருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 3 ½ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபோல் புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் மீன் மார்க்கெட் அருகே கஞ்சா விற்ற ஜான்பிலிக்ஸ் 21, ராம்கி 25, மோகன் தாஸ் 23, யோகேஷ் 23 மற்றும் பாலாஜி 22 ஆகிய 5 பேரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 12 ஆயிரம் மதிப்புள்ள 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கவர்னர் வர தாமதம் ஆவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
- புதுச்சேரி வளர்ச்சிக்கு எந்த கோரிக்கைகளை முன்வைக்கலாம் என இருவரும் பேசி முடிவு செய்தனர்.
புதுச்சேரி:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் இன்று புதுவைக்கு வந்தார்.
தலைமை செயலகத்தில் கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், அதிகாரிகளோடு புதுவையின் நிதி நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார்.
மத்திய நிதிமந்திரி வருகையையொட்டி சென்னையிலிருந்து நேற்று இரவு கவர்னர் தமிழிசை புதுவைக்கு காரில் வந்தார். அவர் வரும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அவர் புதுவைக்கு வர காலதாமதம் ஏற்பட்டது.
முதலமைச்சர் ரங்கசாமி, மத்திய நிதி மந்திரியிடம் அரசு சார்பில் வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த கவர்னர் மாளிகைக்கு வந்திருந்தார்.
அவரிடம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கவர்னர் வர தாமதம் ஆவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் மாளிகையில் காத்திருந்தார்.
நள்ளிரவு 12.30 மணிக்கு வந்த கவர்னர் தமிழிசையுடன், முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.
அப்போது மத்திய நிதி மந்திரியிடம் புதுச்சேரி வளர்ச்சிக்கு எந்த கோரிக்கைகளை முன்வைக்கலாம் என இருவரும் பேசி முடிவு செய்தனர்.
- கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
- மழையால் பாதிக்கப்பட்ட ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு நேரில் சென்று சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி பாரதி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் இவ ரது சிமெண்ட் ஓடுபோட்ட வீடு சேதமடைந்து சுவர் இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மழையால் பாதிக்கப்பட்ட ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு நேரில் சென்று சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தார்.
அப்போது அந்த குடும்பத்தினருக்கு வீட்டை சீரமைக்க கென்னடி எம்.எல்.ஏ ரூ.10 ஆயிரம் மற்றும் தார்பாய் ஆகியவற்றை நிவாரணமாக வழங்கி ஆறுதல் கூறினார்.
நிகழ்ச்சியின் போது தி.மு.க கிளை செயலாளர்கள் பஸ்கல், விநாயகமூர்த்தி, இருதயராஜ், ரகேஷ், கவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் சாவி மற்றும் செல்போனை காணாமல் இருவரும் திடுக்கிட்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை வீராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் வயது 63) இவர் மீனவ அமைப்பின் முக்கியஸ்தராக இருந்து வருகிறார். இவரும் அப்பகுதியில் மீன் பிடி தொழில் செய்துவரும் மீனவர்களும் தேங்காய் திட்டு மீன் பிடி துறைமுக வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அதன் சாவி மற்றும் சில உபகரணங்களை அங்குள்ள ஒரு இடத்தில் வைத்து விட்டு மீன் பிடி படகு மற்றும் வலைகளை சீர் செய்வது வழக்கம்.
அதுபோல் சம்பவத்தன்று கஜேந்திரன் தனது மோட்டார் சைக்கிள் சாவியையும், வடிவேல் என்பவர் அவரது செல்போனையும் வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்து விட்டு படகினை சீர் செய்தனர். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் சாவி மற்றும் செல்போனை காணாமல் இருவரும் திடுக்கிட்டனர்.
மேலும் கஜேந்திரனின் மோட்டார் சைக்கிளும் மாயமாகி இருந்தது. மர்ம நபர் யாரோ நோட்டமிட்டு செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடியிருப்பது தெரியவந்தது.
இது குறித்து கஜேந்திரன் முதலியார் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது சிதம்பரம் முடசல் ஓடை மீனவ கிராமத்தை சேர்ந்த சிவா (34) என்பது தெரியவந்தது.
அவரை பிடித்து போலீசார் விசாணை நடத்தி வருகிறார்கள்.
- மன்னர் மன்னன் 3-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வாக அலங்கரித்து வைக்கப்பட்ட அவரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி
- முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளி நிர்வாகி கராத்தே சுந்தரராஜன் வாழ்த்திப் பேசினார்.
புதுச்சேரி:
பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா புதுச்சேரி பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது.
புரட்சிக்கவிஞரும் புகழ் மைந்தரும் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாத விழாவில் முதுபெரும் தமிழறிஞர் மன்னர் மன்னன் 3-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வாக அலங்கரித்து வைக்கப்பட்ட அவரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சந்திரப்பிரியங்கா, துணைசபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பிரகாஷ்குமார், வி.பி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. இளங்கோ, கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள், அறக்கட்டளச் செயலர் வள்ளி,தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து, கம்பன் கழகத் துணைத்தலைவர் ஜனார்த்தனன், திருக்குறள் மன்றத் தலைவர் சுந்தர லட்சுமிநாராயணன், ரெவேய் சொசியால் சங்கத் தலைவர் துபாய் குழந்தை, பாவலர் பயிற்சிப்பட்டறை மன்றத் தலைவர் இலக்கியன், தமிழ்மாமணி ஆதிகேசவன், துரைமாலிறையன், கல்லாடன், மதாம்திரு, தன்னுரிமைக் கழகம் சடகோபன், டாக்டர் வனஜா வைத்தியநாதன், வரலாற்றுச் சங்கத் தலைவர் ராசசெல்வம், தமிழறிஞர்கள் கோவிந்தராசு, ஆறு செல்வன், ரமேஷ்பைரவி, விதிருவளவன், கிருஷ்ணகுமார், இளங்கோவன், புதுவைக்குமார், மீனாட்சிதேவி கணேஷ், து.சசிகுமார் உட்பட எழுத்தாளர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செய்தனர்.
இதனை தொடந்து மன்னர்மன்னன் கவிதை வரியான "அறிவாற்றல் வளர்த்திடுவோம்!" என்ற தலைப்பில் மாணவர்களுக்கு கவிதைப் போட்டி நடத்தப்பட்டது.
இதில் 140 மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு மன்னர் மன்னன் மகனும் அறக்கட்டளைத் தலைவருமான கோ.பாரதி தலைமை தாங்கினார்.
முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளி நிர்வாகி கராத்தே சுந்தரராஜன் வாழ்த்திப் பேசினார்.
இதில் உசேன், அசோகா சுப்பிரமணியன், சீனு.வேணுகோபால், அவ்வை நிர்மலா, கிருஷ்ணமூர்த்தி, விஜயலட்சுமி, செல்வதுரை நீஸ், சரசுவதி வைத்திய நாதன், ராஜஸ்ரீமகேஷ் , வெற்றிவேந்தன், ராஜி ராமன் ஜெயலட்சுமிசங்கர், தமிழரசன், பிரமீளாமேரி கலந்து கொண்டு பேசினர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் ரொக்கப் பரிசு வழங்க ப்பட்டது.
- வெளிச்சந்தை கடன் வட்டியை கட்ட நிதியுதவி வழங்க வேண்டும். வீண்செலவுகளை தவிர்க்க புதுவை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.
- புதுவையின் வருவாய் மற்றும் செலவுக்கு இடையிலான இடைவெளி பெருகி வருகிறது.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வரும் நிதி மந்திரியை வரவேற்கிறேன். அவரின் வருகை புதுவை நிதி பிரச்சினைகளை தீர்த்து ஒரு சுமூகமான நிலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறேன். புதுவையின் வருவாய் மற்றும் செலவுக்கு இடையிலான இடைவெளி பெருகி வருகிறது.
பெரும் நிதி நெருக்கடியில் புதுவை சிக்கியுள்ளது. இந்த நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு புதுவையை மாநிலமாக தரம் உயர்த்துவதுதான். இப்போது அது சாத்தியப்படக்கூடியது அல்ல. மாற்றாக நிதி மந்திரி புதுவையை நிதிக்குழுவின் வரம்பில் கொண்டவர நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் யூனியன் பிரதேச வருவாயில் குறைந்தபட்சம் 30 சதவீதம் மானியம் வழங்க வேண்டும்.
மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்களை 100 சதவீத நிதியோடு செலவு செய்ய முன்வர வேண்டும். புதுவை மாநில கடன் தொகை ரூ.11 ஆயிரத்து 556 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும். வெளிச்சந்தை கடன் வட்டியை கட்ட நிதியுதவி வழங்க வேண்டும். வீண்செலவுகளை தவிர்க்க புதுவை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.
நிதி பொறுப்பு, பட்ஜெட் மேலாண்மை சட்டத்தை உடனடியாக இயற்றும்படி சொல்ல வேண்டும். புதுவைக்கு உதவி செய்வதோடு பல நல்ல ஆலோசனைகளையும் மத்திய மந்திரி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த 2022-23-ல் ஆண்டில் மட்டும் ரூ.2 ஆயிரத்து 370 கோடி அளவிற்கு ஜி.எஸ்.டி. நிதி வசூலாகி உள்ளது.
- திட்டங்களை செயல்படுத்த நிதி உதவியும் மத்திய அரசின் ஒத்திசையான அணுகு முறையும் தேவைப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலில் புதுவையில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு பிரச்சாரம் செய்த மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் தற்போது அடுத்த தேர்தலுக்காக வந்துள்ளார்.
அவரின் அறிவிப்புகள் ஏதும் நிறைவேற வில்லை. தற்போதும் அவரது வருகை யையொட்டி ஆரவார அறிவிப்புகள் ஏராளமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி, மகாத்மாகாந்தி பல் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, கே.வி.கே. உள்ளிட்ட சொசைட்டி கல்லூரிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி உதவி சுமார் ரூ. 3 ஆயிரத்து 800 கோடி நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த 2022-23-ல் ஆண்டில் மட்டும் ரூ.2 ஆயிரத்து 370 கோடி அளவிற்கு ஜி.எஸ்.டி. நிதி வசூலாகி உள்ளது.
ஜி.எஸ்.டி. தொகையில் தர வேண்டிய 41 சதவீதத்தில் 23 சதவீதம் மட்டுமே புதுவைக்கு வழங்கப்படுகிறது. இப்படி பல திட்டங்களில் புதுவை புறக்கணிக்கப்படுகிறது
என்.ஆர். காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த நிதி உதவியும் மத்திய அரசின் ஒத்திசையான அணுகு முறையும் தேவைப்படுகிறது.
எனவே, நிதி மந்திரி புதுவை அரசின் சுமார் 11 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்து சட்டசபையுடன் கூடிய புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கி நிதிக் குழுவில் இணைக்க வேண்டும்.
மாநில சிறப்பு நிதியுதவி திட்டத்தில் புதுவையை இணைத்து ரூ.2 ஆயிரத்து 328 கோடி வழங்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களுக்கு 100 சதவீத நிதியை வழங்க வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றம் மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார்.
- முதுகலை கணினித் துறைத் தலைவர் ராமலிங்கம் மற்றும் பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோரின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதுச்சேரி:
புதுவை, மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியுடன் ஹட்டுஸா ஐ.டி. சொல்யூஷன்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து எம்.சி.ஏ. மற்றும் பி.டெக் மாணவர்களுக்கு மேம்பட்ட மென்பொருள் திறன் அறிவு பயிற்சி மற்றும் ேவலைவாய்ப்பிற்காக கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தக்ஷஷீலா பல்கலைக்கழத்தின் வேந்தரும், மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றம் மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஹட்டுஸா ஐ.டி. ெசால்யூஷன்ஸ் நிறுவனத்தின் மேலாளர் சீனுவாசன், மூத்த மென்பொருள் யூசர் இன்டர்பேஸ் டிசைனர் பாலாஜி, கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் டாக்டர் வெங்கடாசலபதி ஆகியோர் கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், ேதர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகடாமி டீன்கள் அன்புமலர் மற்றும் அறிவழகர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் டீன் வேல்முருகன் வேலைவாய்ப்புத் துறை அதிகாரிகள் கைலாசம் மற்றும் மதுசூதனன், முதுகலை கணினித் துறைத் தலைவர் ராமலிங்கம் மற்றும் பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோரின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- கூலித்தொழிலாளியான செல்வராஜ் தினமும் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை கொம்பாக்கம் மாதாகோவில் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 54) இவர் தனது மனைவி கோமதி மற்றும் 2 மகன்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். கூலித்தொழிலாளியான செல்வராஜ் தினமும் சம்பாதிக்கும் பணத்தை மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அது போல் செல்வராஜ் மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்தார். அப்போது செல்வராஜை அவரது மகன்கள் மற்றும் மனைவி கண்டித்து விட்டு வேலைக்கு சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து பக்கத்து வீட்டை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் செல்வராஜின் மகன்களுக்கு போன் செய்து உனது தந்தை வீட்டில் தூக்கு போட்டு தொங்குவதாக கூறினார்.
உடனே செல்வராஜின் மகன்கள் வீட்டுக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தூக்கில் இருந்து செல்வராஜை மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செல்வராஜின் மூத்த மகன் ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குற்றவாளிகள் யாராக இருந்தா லும் பாரபட்சமற்ற முறை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கவர்னர்கள் அரசியல் செய்யக் கூடாது என்பது அ.தி.மு.க.வின் நிலைபாடு.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை காமாட்சியம்மன் கோவில் நில அபகரிப்பில் தி.மு.க. அமைப்பாளர் சிவா சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது சி.பி.ஐ. விசாரணை தேவை என கூறியுள்ளார்.
ஆனால் தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் எம்.எல்.ஏ. குற்றவாளிகளுக்கு ஆதரவாக கோர்ட்டில் ஜாமீன் பெற்றுள்ளார். இது தி.மு.க.வின் இரட்டை வேடம்.
நிலம் காமாட்சியம்மன் கோவில் சொத்து தானா.? என்பதை அரசு தெளிவு படுத்த வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தா லும் பாரபட்சமற்ற முறை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை மாநிலத்தில் உள்ள கோவில் சொத்துக்களை பாதுகாக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் கமிட்டி அமைக்க வேண்டும்.
கோவில் சொத்துக்கள் குறித்த விளக்க குறிப்பேட்டை அரசு வெளியிட வேண்டும். காமாட்சியம்மன் கோவில் நில பிரச்சினையில் கோடி களில் பந்தயம் கட்டு பவர்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது.? என அமலா க்கத்துறை விசாரணை நடத்த வேண்டும்.
கவர்னர்கள் அரசியல் செய்யக் கூடாது என்பது அ.தி.மு.க.வின் நிலைபாடு. தமிழகத்தில் கடந்த 26 மாதகால தி.மு.க. ஆட்சியின் செயல்படாத தன்மை, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, அமைச்சர்களின் குற்றப்பின்னணி செயல்பாடுகள் போன்ற வற்றை மூடி மறைக்க தமிழக கவர்னரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






