என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A.I.U.T.U.C."

    • பெண் தொழிலாளர்கள் சங்கத்தில் சேர்ந்தால் வேலை தர மாட்டோம் என நிர்வாகத்தால் மிரட்டப்படுகின்றனர்.
    • மதுபான ஆலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு சட்டப்படி அளிக்க வேண்டிய பாதுகாப்பை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில ஏ.ஐ.யூ.டி.யூ.சி தலைவர் சங்கரன், செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் பெண் தொழிலாளர்களுக்கு ஆலை நிர்வாகம் சட்டபூர்வ பாதுகாப்பை அளிப்பதில்லை. குறிப்பாக மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் பெண் தொழிலாளர்களுக்கு நிர்வாகம் தொழிலாளர் நல சட்டங்களில் கண்டுள்ள சலுகைகளை, உரிமைகளை அளிப்பதில்லை. பெண் தொழிலாளர்கள் சங்கத்தில் சேர்ந்தால் வேலை தர மாட்டோம் என நிர்வாகத்தால் மிரட்டப்படுகின்றனர்.

    இந்த ஆலைகள் மீது புகார் கூறினால் தொழிலாளர் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளது. தொழிற்சாலை வாகனங்களில் ஆய்வுக்கு செல்வதால் அதிகாரிகளின் மீதான நம்பக்தன்மை கேள்விக் குறியாகிறது.

    இந்த நிலையில் மேலும் 5 மதுபான ஆலைகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளது. இந்த ஆலைகளில் சட்டப்படி வசதிகளை செய்துதர எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் பெற வேண்டும். மதுபான ஆலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு சட்டப்படி அளிக்க வேண்டிய பாதுகாப்பை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    ×