என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teenager attacked"

    • இளம்பெண் காந்திபுரத்தில் உள்ள அழகுநிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • காதலனும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    கோவை,

    கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் காந்திபுரத்தில் உள்ள அழகுநிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இளம்பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பு 80 அடி ரோடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர். பின்னர் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

    இதனையடுத்து இளம்பெண் வேறு ஒரு வாலிபரை திருமணம் செய்தார். அவரது காதலனும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் வாலிபரின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்றார். இதனால் அவர் தனியாக வசித்து வந்தார்.

    இதனையடுத்து அவர் செல்போன் மூலமாக தனது முன்னாள் காதலிக்கு தன்னிடம் பேசி பழகுமாறு அடிக்கடி மெசேஜ் அனுப்பி வந்தார். ஆனால் இதனை இளம்பெண் கண்டுகொள்ளவில்லை.

    சம்பவத்தன்று இளம்பெண் அழகு நிலையத்துக்கு வேலைக்கு சென்று விட்டு 80 அடி ரோடு வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற அவரது முன்னாள் காதலன் தன்னிடம் பேசி பழகுமாறு கூறினார். அதற்கு இளம்பெண் பதில் அளிக்காமல் நடந்து சென்றார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அவரது முன்னாள் காதலன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இதுகுறித்து இளம்பெண் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தன்னுடன் பழக மறுத்த முன்னாள் காதலியை நடுரோட்டில் வைத்து தாக்கிய வாலிபரை தேடி வருகிறார்கள். 

    • அதே பகுதியை சேர்ந்த வாலிபர் சரத்பாபு என்பவர் வெங்கடேசனை மது குடிக்க அழைத்தார்.
    • இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை உடையார் தோட்டம் ஏழை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது55). பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஆரோக்கியமேரி. இவர் கடந்த 3 ஆண்டுகளாக பிரான்சில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    இவர்கள் வில்லியனூர் பெரியபேட்டில் உள்ள வெங்கடேசனின் மாமியார் வீட்டில் தங்கி வசித்து வருகிறார்கள். வெங்கடேசன் தனது தாய் அஞ்சலையுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை வெங்கடேசன் அங்குள்ள கோவில் அருகே நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் சரத்பாபு என்பவர் வெங்கடேசனை மது குடிக்க அழைத்தார். அதற்கு வெங்கடேசன் மறுத்துவிட்டார்.

    இதையடுத்து சரத்பாபு மது குடிக்க வரவில்லை என்றால் தனக்கு மது குடிக்க பணம் தரவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். ஆனால் வெங்கடேசன் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சரத்பாபு அங்கு கிடந்த தடியை எடுத்து வெங்கடேசனை சரமாரியாக தாக்கினார். அதோடு கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் திரண்டு வரவே சரத்பாபு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்பாபுவை தேடி வருகிறார்கள்.

    • காதல் திருமணம் செய்து வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்ததை தட்டிக்கேட்ட மனைவி-மாமனாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • புதுவை வம்பாகீரப் பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி.

    புதுச்சேரி:

    காதல் திருமணம் செய்து வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்ததை தட்டிக்கேட்ட மனைவி-மாமனாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை வம்பாகீரப் பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. மீனவர். இவரது இளைய மகள் மகேஸ்வரி(வயது25). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த நாகராஜ்(28) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். தற்போது மகேஸ்வரி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இதற்கிடையே மகேஸ்வரிக்கும் அவரது கணவர் நாகராஜிக்கும் அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்படும். அப்போ தெல்லாம் தகவல் அறிந்து சுப்பிரமணி இருவரையும் சமாதானம் செய்து வைத்து விட்டு செல்வார்.

    இந்த நிலையில் நாகராஜிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த மகேஸ்வரி கணவரை கண்டித்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுபற்றி மகேஸ்வரி தனது தந்தைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சுப்பிரமணி மகள் வீட்டுக்கு வந்தார். அப்போது மகேஸ்வரியை அவரது கணவர் நாகராஜ் பெல்டால் தாக்கி கொண்டிருந்தார். இதனை பார்த்ததும் சுப்பிரமணி மருமகனை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டார்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த மகேஸ்வரி ராஜீவ்காந்தி குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து சுப்பிரமணி ஓதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சாராயம் வாங்கி கொடுக்க மறுத்ததால் வாலிபரை மரக்கட்டையால் சரமாரியாக தாக்கிய தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார்.

    புதுச்சேரி:

    சாராயம் வாங்கி கொடுக்க மறுத்ததால் வாலிபரை மரக்கட்டையால் சரமாரியாக தாக்கிய தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுவை வேல்ராம்பட்டு முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது 2-வது மகன் ஆனந்த் (வயது35). இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். ஆனந்துக்கு அதிகம் குடி பழக்கம் இருந்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தை விட்டு பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அதுமுதல் ஆனந்த் தொடர்ந்து மது குடித்து விட்டு தனது சகோதரர் கோபி மற்றும் உறவினர்களிடம் தகராறு செய்து வந்ததால் அவரிடம் யாரும் அதிகமாக பேசுவதில்லை.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி ஆனந்த் கொம்பாக்கம் சாராயக்கடையில் சாராயம் குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கொம்பாக்கத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நாராயணன் என்பவர் ஆனந்திடம் சாராயம் வாங்கி கொடுக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் ஆனந்த் சாராயம் வாங்கி கொடுக்க மறுத்து விட்டார்.

    பின்னர் ஆனந்த் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே நின்றுக்கொண்டிருந்தார். அப்போது சாராயம் வாங்கி கொடுக்காததால் ஆத்திரமடைந்த நாராயணன் கீழே கிடந்த மரக்கட்டையை எடுத்து ஆனந்துவை சரமாரியாக தாக்கினார். மேலும் இனிமேல் என்கிட்ட வைத்துக்கொண்டால் உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று மிரட்டி விட்டு சென்றார்.

    இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்து ஆனந்த் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து ஆனந்த்தின் சகோதரர் கோபிக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து கோபி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆனந்தை மீட்டு ஆட்டோவில் புதுவை அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு ஆபத்தான நிலையில் ஆனந்த் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து ஆனந்தின் தாய் ராணி முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×