என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மனைவி-மாமனாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
    X

    கோப்பு படம்.

    மனைவி-மாமனாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

    • காதல் திருமணம் செய்து வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்ததை தட்டிக்கேட்ட மனைவி-மாமனாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • புதுவை வம்பாகீரப் பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி.

    புதுச்சேரி:

    காதல் திருமணம் செய்து வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்ததை தட்டிக்கேட்ட மனைவி-மாமனாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை வம்பாகீரப் பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. மீனவர். இவரது இளைய மகள் மகேஸ்வரி(வயது25). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த நாகராஜ்(28) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். தற்போது மகேஸ்வரி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இதற்கிடையே மகேஸ்வரிக்கும் அவரது கணவர் நாகராஜிக்கும் அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்படும். அப்போ தெல்லாம் தகவல் அறிந்து சுப்பிரமணி இருவரையும் சமாதானம் செய்து வைத்து விட்டு செல்வார்.

    இந்த நிலையில் நாகராஜிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த மகேஸ்வரி கணவரை கண்டித்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுபற்றி மகேஸ்வரி தனது தந்தைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சுப்பிரமணி மகள் வீட்டுக்கு வந்தார். அப்போது மகேஸ்வரியை அவரது கணவர் நாகராஜ் பெல்டால் தாக்கி கொண்டிருந்தார். இதனை பார்த்ததும் சுப்பிரமணி மருமகனை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டார்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த மகேஸ்வரி ராஜீவ்காந்தி குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து சுப்பிரமணி ஓதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×