என் மலர்
புதுச்சேரி

கியாஸ் சிலிண்டர் மற்றும் காய்கறிகளுக்கு மாலை அணிவித்து இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
புதுவை இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
- உருளையன்பேட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாநில, மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
- மண்ணெண்ண விலையோ மரண அடி கொடுக்கிறது” என்று அவ பேசிய ஆடியோவை ஒளிபரப்பினர்.
புதுச்சேரி:
புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராஜா திரையரங்கம் அருகே விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது காய்கறிக ளுக்கும் சிலிண்டருக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செய்து நூதன போராட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தி ற்கு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ஆனந்தபாபு நடராஜன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்தியலிங்கம் எம்.பி, சீனிய்ர் தலைவர் தேவதாஸ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஷாஜகான் முன்னாள் துணை சபாநாயகர் பாலன், மாநில பொதுச்செயலாளர் திருமுருகன், வழக்கறிஞர் பிரிவு தலைவர் மருது பாண்டியன், உருளையன்பேட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாநில, மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் புதுவை கவர்னர் தமிழிசை சில வருடங்களுக்கு முன்பு விலை ஏற்றம் பற்றி பேசிய ஆடியோ "டீசல் விலை திடுக்கிட வைக்கிறது பெட்ரோல் விலை பயமுறுத்துகிறது கியாஸ் விலை கவலைப்பட வைக்கிறது. மண்ணெண்ண விலையோ மரண அடி கொடுக்கிறது" என்று அவ பேசிய ஆடியோவை ஒளிபரப்பினர்.






