என் மலர்
நீங்கள் தேடியது "Students afraid"
- புதுச்சேரி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
- விஷபூச்சிகளின் நடமாட்டத்தால் விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பு தன்மையற்ற இடமாக இந்த மைதானம் உள்ளது.
புதுச்சேரி:
திருபுவனை தொகுதி மதகடிப்பட்டில் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். 10 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த பள்ளியில் 6 ஏக்கர் பரப்பில் பள்ளி கட்டிடங்களும், 4 ஏக்கர் பரப்பில் விளையாட்டு மைதானமும் அமை யப்பெற்ற பள்ளியாகும்.
கிராமப்புற பள்ளிகளில் அதிக நிலப்பரப்பை கொண்டு செயல்படும் இந்த பள்ளியில் ஆண்டு தோறும் புதுச்சேரி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானம் தற்போது புதர் மண்டி மைதானம் முழுவதும் குப்பைகள் நிரம்பி அகற்றப்படாமல் உள்ளதால் விஷ பாம்புகள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளது.
மைதானத்தில் விளையாடும் பள்ளி மாண வர்கள் சில நேரங்களில் பாம்புகளை கண்டு அஞ்சு நடுங்கி ஓட்டம் பிடிக்கி றார்கள். இதனால் சில நேரங்களில் மாணவர்கள் விளையாட ஆர்வம் இல்லாமல் உள்ளனர். மேலும் இந்த மைதானத்தில் தினந்தோறும் காலை, மாலையும் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்கின்ற னர்.
அதோடு பல்வேறு விளையாட்டு துறைகளை சேர்ந்த இளைஞர்கள் முழுநேர பயிற்சியிலும் ஈடுபடுகின்றனர். ஆனால் விஷபூச்சிகளின் நடமாட்டத்தால் விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பு தன்மையற்ற இடமாக இந்த மைதானம் உள்ளது.
இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு அங்குள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்க ளின் பெற்றோர்கள், விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






