என் மலர்
புதுச்சேரி
- வீடுகள் மீதும் மின் கம்பி மீதும் உராய்வதால் விபத்து ஏற்படும் சூழல் அடிக்கடி நிலவுகிறது.
- ரமேஷ் ,சேவியர், ஜெகதீசன், சரவணன், அர்ஜுனன், வெங்கடேசன், ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் தி.மு.க.வினர் புதுவை வனத்துறை துணை இயக்குனரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட கஸ்தூரிபாய் நகர், கிணற்று வீதியில் உள்ள மரங்களில் மரக்கிளைகள் வளர்ந்து இப்பகுதிகளில் உள்ள வீடுகள் மீதும் மின் கம்பி மீதும் உராய்வதால் விபத்து ஏற்படும் சூழல் அடிக்கடி நிலவுகிறது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகி றார்கள். எனவே அப்பகுதி பொது மக்களின் நலன் கருதி மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் போது தொகுதி செயலாளர் நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் வேலவன், அருண், தொண்டரணி கருணா, கஸ்தூரிபாய் நகர் கிளை தலைவர் கலிய பெருமாள், செயலாளர் பிரான்சிஸ்,ஆதி, ரமேஷ் ,சேவியர், ஜெகதீசன், சரவணன், அர்ஜுனன், வெங்கடேசன், ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.
- புதுவையில் தேசிய ஜனநாயக கூட்ட ணிக்கு தலைமை வகிக்கும் என்ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- என்ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்- அமைச்சருமான ரங்கசாமி இந்த கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.
புதுச்சேரி:
அடுத்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மத்திய பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.
ஏற்கனவே பாட்னாவில் எதிர்கட்சிகளின் முதல் கூட்டம் நடந்தது. பெங்களூருவில் 2-வது கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடக்கிறது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க., லோக்ஜனசக்தி, ஷிண்டே தலைமையிலான சிவசேனா, இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு கட்சியின் தலைவர் நட்டா அழைப்பு விடுத்துள்ளார்.
இதேபோல புதுவையில் தேசிய ஜனநாயக கூட்ட ணிக்கு தலைமை வகிக்கும் என்ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
என்ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்- அமைச்சருமான ரங்கசாமி இந்த கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் நாளை டெல்லி செல்கிறார். நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்ற பின் அவர் புதுவை திரும்பு கிறார்.
முதல்-அமைச்சர் ரங்கசாமியை பொறுத்த வரை விமானத்தில் ஏறும்வரை அவரின் பயணத்தை உறுதிசெய்ய முடியாது. இருப்பினும் முதல்- அமைச்சர் அலு வலக வட்டாரங்கள் அவர் நாளை டெல்லிசெல்ல உள்ளதை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- சைவ உணவுகளை மட்டுமே வழங்குவதால் இந்த நிறுவனம் முட்டை வழங்குவதில்லை.
- மதிய உணவு வழங்கி வந்த மத்திய உணவு சமையல்கூடங்கள் மூலம் முட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசின் கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசின் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வாரத்திற்கு 3 முட்டை வழங்கப்பட்டு வருகிறது.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 14-ந் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் கடந்த ஒரு மாதமாக மாணவர்களுக்கு முட்டை விநியோகம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் முதல் மாணவர்களுக்கு முட்டை விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அக்ஷயா பாத்திரம் என்ற தொண்டு அமைப்பு மதிய உணவை வழங்கி வருகிறது. சைவ உணவுகளை மட்டுமே வழங்குவதால் இந்த நிறுவனம் முட்டை வழங்குவதில்லை.
இதனால் ஏற்கனவே மதிய உணவு வழங்கி வந்த மத்திய உணவு சமையல்கூடங்கள் மூலம் முட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுவையில் குருசுகுப்பம், ஏம்பலம், கலிதீர்த்தாள்குப்பம் ஆகியவற்றில் உள்ள 3 மத்திய சமையல்கூடங்கள் மூலம் முட்டைகள் அவிக்கப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முட்டை சுழற்சி முறையில் வாரம் 3 நாட்கள் வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கு வழங்கும் முட்டையை பரிசோதித்து முத்திரையும் இடப்பட்டுள்ளது. புதுவை குருசுகுப்பத்தில் மத்திய சமையல்கூடத்திலிருந்து பள்ளிகளுக்கு வாகனங்களில் முட்டை ஏற்றிச்செல்லும் பணியை கல்வித்துறை துணை இயக்குனர் கொஞ்சுமொழி குமரன் பார்வையிட்டார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறும்போது, புதுவையில் உள்ள 293 பள்ளிகளுக்கு வாரம் ஒரு லட்சத்து 56 ஆயிரம் முட்டைகள் விநியோகம் செய்யப்படஉள்ளது. சுழற்சி அடிப்படையில் பள்ளிக ளுக்கு முட்டைகள் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்தார்.
- வீட்டில் தங்களுக்கு தேவையான உணவை கீர்த்தனா தாயார் செய்து கொண்டு இருந்தார்.
- கொட்டகையில் உள்ள இரும்பு பைப்பில் தனது தாயாரின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் அருகே மூர்த்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். கட்டிட தொழிலாளி.இவரது ஜெயப்பிரதா. இவர்களது மகள் கீர்த்தனா (வயது 17).
இவர் 12-ம் வகுப்பு படித்து பொது தேர்வில் தோல்வி அடைந்தார். பெற்றோர்கள் தொடந்து படிக்க ஆசைப்பட்டு கீர்த்தனாவின் 10-ம் வகுப்பு தேர்ச்சியை கொண்டு தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படிக்க ஏற்பாடு செய்து இருந்தனர்.
ஆனால் கீர்த்தனா கல்லூரிக்கு சென்று படிக்க விருப்பபடவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அவரது வீடு கட்டுமான பணி நடந்து வருவதால் உறவினர் வீட்டில் தங்களுக்கு தேவையான உணவை கீர்த்தனா தாயார் செய்து கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த கீர்த்தனா அங்கிருந்த கொட்டகையில் உள்ள இரும்பு பைப்பில் தனது தாயாரின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் ஏட்டு ராதா கிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- சந்தேகமடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்திய போது போலீசாரை கொலை செய்து விடுவதாக செல்வம் மிரட்டினார்.
- பெட்ரோல் டேங்க் கவரில் 2 கூர்மையான கத்திகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கத்திகளை பறிமுதல் செய்து செல்வத்தை கைது செய்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் அரசங்குளம் பகுதியை சேர்ந்தவர் தாடி அய்யனார். இவர் பிரபல ரவுடி ஆவார். இவரது தம்பி ராஜேஷ். இவரும் ரவுடி செயலில் ஈடுபட்டு வந்தார். இவர்கள் 2 பேர் மீதும் புதுவை மற்றும் தமிழக பகுதிகளில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் புதுவை காவல் துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கண்காணிக்கும் பணியில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் நேற்று அதிகாலை ஈடுபட்டனர்.
அப்போது தாடி அய்யனார் மற்றும் அவரது தம்பி ராஜேஷ் ஆகியோரை கண்காணிக்க அவர்கள் வசிக்கும் பகுதிக்கு போலீசார் சென்றனர். ஆனால் அங்கு இருவரும் இல்லை.
அதே வேளையில் அவர்களின் தந்தையான செல்வம் என்பவர் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சுற்றிக்கொண்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்திய போது போலீசாரை கொலை செய்து விடுவதாக செல்வம் மிரட்டினார். இதனை தொடர்ந்து அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை சோதனை நடத்திய போது பெட்ரோல் டேங்க் கவரில் 2 கூர்மையான கத்திகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கத்திகளை பறிமுதல் செய்து செல்வத்தை கைது செய்தனர்.
இதுபோல் கோர்க்காடு பகுதியில் ரவுடிகளின் செயல்களை கண்காணிக்க கரிக்கலாம்பாக்கம் போலீசார் சென்ற போது அங்குள்ள சுடுகாட்டில் ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றார். உடனே போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அப்போது அவர் சட்டையின் முதுகு பகுதியில் கத்தி ஒன்றை மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டனர்.
குற்றசெயல்களில் ஈடுபடும் நோக்கில் அவர் கத்தியுடன் திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து கத்தியை பறிமுதல் செய்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கோர்க்காடு காலனி நடுத்தெருவை சேர்ந்த யோகானந்தம் என்பது தெரியவந்தது. இதைத்தொ டர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன் தலைமையில் துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. எனவே என்.எஸ்.பி. போர்டலை முறைப்படுத்தி துரிதப்படுத்த வேண்டும்.
புதுச்சேரி:
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே அரசு முறை பயணமாக நேற்று புதுச்சேரி வந்தார்.
அவருக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன் தலைமையில் துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் முதல்- அமைச்சர் ரங்கசாமியை ராம்தாஸ் அத்வாலே சந்தித்து பேசினார்.
அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் இயக்குனர் சாய்-இளங்கோவன் சில கோரிக்கைகளை வைத்தார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவி தொகை வழங்கப்பட்ட தற்கான தகவல் அறிய என்.எஸ்.பி. என்ற போர்டல் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
ஆனால் தற்போது அது சரிவர இயங்காததால் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. எனவே என்.எஸ்.பி. போர்டலை முறைப்படுத்தி துரிதப்படுத்த வேண்டும்.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு உடனுக்குடன் வழங்க வேண்டும். ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ரூ.100 கோடியை உடனே வழங்கினால் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு உதவிகரமாக இருக்கும் என கேட்டுக்கொண்டார்.
பின்னர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இயக்கங்களை சார்ந்த பிரதிநிதிகளை சந்தித்த ராம்தாஸ் அத்வாலே அவர்களுடைய கோரிக்கை களை மனுவாக பெற்றுக் கொண்டார். முன்னதாக மத்திய இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலேவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட போது சமூக நலத்துறை இயக்குனர் குமரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆய்வாளர்கள் கலைச்செல்வி, புவனா, ராஜா மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.
- மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு, கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படும்.
- நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்-ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே திருவண்டார் கோவில் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டா டப்பட்டது.பள்ளி தலைவர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் மிஸ்டிகன் ஆண்டோ ரிச்சர்ட் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ரமேஷ் வரவேற்றார்.
விவிழாவையொட்டி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு, கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்-ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- திருமணம் நின்று போனதால் அதனை ஏற்க முடியாமல் பாஸ்கரன் மனவேதனையடைந்தார்.
- திருமணம் நின்று போனதால் வாலிபர் ரெயில் முன் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதகடிப்பட்டு:
வில்லியனூர் அருகே பங்கூர் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது28). இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்தனர். மேலும் திருமண நாளும் குறிக்கப்பட்டது.
இந்த நிலையில் திருமணம் திடீரென நின்று போனதாக கூறப்படுகிறது. இதனால் பாஸ்கரன் மன விரக்தியில் இருந்து வந்தார். அவருக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.
ஆனாலும் திருமணம் நின்று போனதால் அதனை ஏற்க முடியாமல் பாஸ்கரன் மனவேதனையடைந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த பாஸ்கரன் நேற்று இரவு கண்டமங்கலம் சின்னபாபு சமுத்திரம் அருகே கெண்டியான்குப்பம் ரெயில்வே கேட்டுக்கு சென்றார். அப்போது புதுவையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற பயணிகள் ரெயில் முன் பாஸ்கரன் பாய்ந்தார். இதில் தூக்கிவீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த பாஸ்கரன் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தி அதே ரெயிலில் பாஸ்கரனை மீட்டு கண்டமங்கலம் ரெயில் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக பாஸ்கரனை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாஸ்கரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் விழுப்புரம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணம் நின்று போனதால் வாலிபர் ரெயில் முன் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கேரளாவில் ஆடி அமாவாசையை 'கர்கடக வவுபலி' என்று அழைக்கின்றனர்.
- பூமியில் ஒரு ஆண்டு என்பது முன்னோர்களுக்கு ஒரு நாள்.
ஆடி அமாவாசையை மிக புனித நாளாக கருதி முன்னோர்களுக்கு புண்ணிய ஸ்தலம், கடற்கரை மற்றும் நதிக்கரையில் சிறப்பு பூஜை செய்து தர்ப்பணம் செய்வது இந்துக்களின் வழக்கம்.
கேரளாவில் ஆடி அமாவாசையை 'கர்கடக வவுபலி' என்று அழைக்கின்றனர். கேரள மாநிலத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் 'கர்கடக வவுபலி' என்ற பெயரில் புண்ணிய நாளாக கருதுகின்றனர். பூமியில் ஒரு ஆண்டு என்பது முன்னோர்களுக்கு ஒரு நாள். தட்சிணாயனத்தில் பித்ருக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த முதல் அமாவாசை கர்கடகம். அதனால் தான் 'கர்கடக வவுபலி' முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனையொட்டி கேரள சமாஜம் சார்பில் ஆடி அமாவாசையான இன்று புதுவை கடற்கரை சுற்றுலா வளர்ச்சி கழகம் விடுதி அருகே சிறப்பு புண்ணிய நாள் கடைபிடிக்கப்பட்டது. கேரள நம்பூதிரிகளை கொண்டு நடந்த பூஜையில் தமிழகம் மற்றும் புதுவையை சார்ந்த 400-க்கும் மேற்பட்ட கேரள மக்கள் பங்கேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
ஆண்டுதோறும் புதுவையில் இந்த புண்ணிய நாளை கேரள சமாஜம் கொண்டாடுவதாக புதுச்சேரி கேரள சமாஜம் தலைவர் சங்கர் தெரிவித்தார்.
இதேபோல இந்துக்களும் புதுவை கடற்கரை சாலையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் மோடியையே மட்டுமே மீண்டும் பிரதமர் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்.
- ரங்கசாமி பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவையில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2014 முதல் பிரதமர் நரேந்திர மோடியின் பல்வேறு நலத்திட்டங்களால் அனைத்துத் தரப்பினரும் பயனடைந்துள்ளனர். முத்ரா கடனுதவித் திட்டம், மருத்துவ காப்பீடுத் திட்டங்களால் கோடிக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர். மத்திய அரசின் திட்டங்களால் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என அனைத்துத் தரப்பினரும் பயனடைந்து வருவதால் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வே அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராவார்.
உலக அளவில் புகழ் பெற்ற தலைவராக அவர் உள்ளார். அவருக்கு நிகரான தலைவராக ராகுல்காந்தி இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் மோடியையே மட்டுமே மீண்டும் பிரதமர் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்.
அவரை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளில் அனைத்துக்கட்சித் தலைவர்களுமே தங்களை பிரதமராக எண்ணிக்கொள்கின்றனர்.
புதுச்சேரியில் இலவச கியாஸ் இணைப்பு திட்டம், காப்பீடு திட்டங்களில் தலா 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். பா.ஜ.க.வுடன் இணைந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த ஏராளமானோர் கோரிக்கை வைக்கின்றனர். தமிழகத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். நாட்டில் பலரும் கோரி வருகின்றனர்.
எனவே அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. அந்த சட்டம் அனைவருக்கும் பொதுவானது.
எனவே அச்சட்டம் குறித்து இஸ்லாமியர்கள் உட்பட யாரும் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையிலிருந்து இயக்கப்படும் ரெயில்கள் திண்டிவனம், வில்லியனூர், கடலூர் வழியாகச் செல்லும் நிலை ஏற்படும்.
- ஆய்வுக்குப் பிறகு ரெயில்வே அமைச்சகத்திடம் திட்டத்தை விளக்கி செயல்படுத்தப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரி ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், அவர்கள் சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்தித்துப் பேசினர். அப்போது, புதுச்சேரி-கடலூர் ரெயில் பாதைத் திட்டம் குறித்து முதலமைச்சரிடம் ரெயில்வே அதிகாரிகள் விளக்கினர்.
பின்னர் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி ரெயில் நிலையத்தை அவர். ரூ.72 கோடியில் நவீனப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் பணிகள் 2 ½ ஆண்டுகளில் நிறைவடையும்.
புதுச்சேரி-திண்டிவனம்-கடலூர் இடையேயான ரெயில் பாதைத் திட்டத்தில் புதுச்சேரி ரெயில் நிலைய அமைவிடத்தால் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.
எனவே, சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக ரெயில்களை இயக்க முடியாத நிலை உள்ளது.
புதுச்சேரி-திண்டிவனத்தை இணைக்கும் ரெயில் திட்டத்தில்புதுச்சேரி நகருக்குள் ரெயில் பாதை வராமல், வில்லியனூர். வழியாக கடலூருக்குச் செல்லும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, சென்னை யிலிருந்து இயக்கப்படும் ரெயில்கள் திண்டிவனம், வில்லியனூர், கடலூர் வழியாகச் செல்லும் நிலை ஏற்படும். அதற்கான ஆய்வுப் பணிகள் 2 மாதங்களில் நிறைவுபெறும்.
இந்தத் திட்டம் குறித்து புதுவை முதல்-அமைச்சரிடம் விளக்கி, அதற்கான வரைபடத்தையும் காட்டியுள்ளோம். ஆய்வுக்குப் பிறகு ரெயில்வே அமைச்சகத்திடம் திட்டத்தை விளக்கி செயல்படுத்தப்படும்.
காரைக்கால்-பேரளம் புதிய ரெயில் பாதைத் திட்டம் குறித்தும் முதலமைச்சரிடம் விளக்கினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருவாயை பெருக்க அதிரடி முடிவு
- அதேநேரத்தில் வெளி மாநிலங்களின் மது விற்பனை விலையை புதுவை விலை நெருங்கி விட்டதாக கருதப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை அரசு சுயசார்பு டன் இருக்க கொள்கை நடவடிக்கைகளை தொடங்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
மத்திய நிதித்துறை துணைச் செயலர் ரத்னகோஷ் கிஷோர் சவுரே சமீபத்தில் அனுப்பிய குறிப்பில் வருவாய் வளங்களை புதுவை அரசு பெருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் நலத் திட்டங்களுக்கு சொந்த வளங்களில் இருந்து நிதியை திரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிதி ஆண்டில் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் மத்திய அரசு நிதி உதவியை கூடுதலாக ஒதுக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சொத்து வரி, ஜி.எல்.ஆர். மதிப்பு மற்றும் பிற கட்ட ணங்களை அதிகரிக்க புதுவை அரசின் பரிசீலனைக்கான முன்மொழிவுகளைத் தொடங்க வருவாய் ஈட்டும் துறைகளுக்கு கவர்னர் தமிழிசை அறிவுறுத்தி உள்ளார்.
அத்துடன் பொதுப்பணி, உள்ளாட்சி, வருவாய், வணிகவரி ஆகிய துறை களில் வருவாயை பெருக்கும் திட்டங்களை தொடங்கவும் மத்திய அரசு அறிவுறுத்தி யுள்ளது. புதுவை அரசின் வரி வருவாயில் கலால் வரி வசூல் முக்கிய வருவாய் ஆதாரமாக இருக்கிறது.
2022-23-ம் ஆண்டில், கலால் துறை ரூ.1,400 கோடி வருவாய் ஈட்டியது. இது முந்தைய ஆண்டை விட சுமார் ரூ.300 கோடி அதிக மாகும்.
இந்த நிதி ஆண்டின் கடந்த 3 மாதங்களில் கலால் வரி வசூல் சுமார் ரூ.476 கோடியை தொட்டுள்ளது. முந்தைய ஆண்டை விட அதிகமாக வசூலாகியுள்ளது.
கலால்துறையில் அதிக வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ளது. இதனால் கலால் வரியை இன்னும் கூடுதலாக உயர்த்தலாமா? என்ற ஆலோசனையும் அரசிடம் உள்ளது. அதேநேரத்தில் வெளி மாநிலங்களின் மது விற்பனை விலையை புதுவை விலை நெருங்கி விட்டதாக கருதப்படுகிறது.
இதனால் கலால் வரி உயர்வினால் புதுவைக்கு வரும் மது பிரியர்களின் எண்ணிக்கை குறையவும் வாய்ப்பு உள்ளது.
அதுபோல் நேரடியாக மக்களை பாதிக்கும் வகையில் வரியை உயர்த்தவும் அரசிடம் தயக்கம் உள்ளது. இருப்பி னும் வருவாயை பெருக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.






