என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மகப்பேறு நிகழ்வுகள் மற்றும் நச்சுத்தன்மை ஆகியவை 50% இறப்புகளுக்கு காரணமாகின்றன.
    • இந்த திட்டத்தில் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

    புதுச்சேரி:

    இந்தியாவில் தற்செயலான காயங்கள் அல்லது அதிர்ச்சி, இருதய, சுவாசம், மகப்பேறு நிகழ்வுகள் மற்றும் நச்சுத்தன்மை ஆகியவை 50% இறப்புகளுக்கு காரணமாகின்றன.

    இதனை தவிர்க்க ஆரம்ப காலத்திலே ஏற்படும் பிரச்சினைகளை முறையாக கையால தேசிய மருத்துவ ஆணையம் பதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

    அதன்படி அனைத்து இந்திய மருத்துவ பட்டதாரிக ளும் முதன்மை பராமரிப்பு மருத்துவர்களாகவும் முதலில் தொடர்பு கொள்ளும் மருத்துவர்க ளாகவும் பணியாற்ற அவசர மருத்துவ சிகிச்சையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    இதற்கென மத்திய அரசு ஜீவ ரக்ஷா விரிவான அவசர சிகிச்சை மற்றும் வாழ்க்கை உதவி எனும் திட்டத்தை உருவாக்கப்பட்டது.

    இந்த பயிற்சியானது பொதுவான அவசரகால பராமரிப்பு சூழ்நிலை அடிப் படையிலான அணுகு முறையை உள்ளடக்கியது. இப்பயிற்சியில் இருதய மற்றும் சுவாச அவசர நிலைகள், அதிர்ச்சி, தீக்கா யங்கள், விஷம், மகப்பேறு, குழந்தைகளுக்கான அவசரநிலைகள் மற்றும் பிறந்த குழந்தைகளின் உயிர்த்தெழுதல் ஆகிய வற்றைக் கையாள்கிறது. இந்த திட்டத்தில் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

    இதற்கான பயிற்சி திட்டத்தை டீன் டாக்டர். ராகேஷ் சேகல் தலைமை தாங்கி தொடங்கிவைத்து, பங்கேற்பாளர்கள் சமூகத்திற்கு சேவை குறித்து பாராட்டி பேசினார். ஹெல்த் ப்ரொபெஷன்ஸ் எஜுகேஷன், டீன். டாக்டர் மகாலட்சுமி மற்றும் ஸ்கில்ஸ் லேப் டீம், டாக்டர் ராஜ்குமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பலர் ஏற்பாடு செய்தனர்

    இதுகுறித்து ஹெல்த் ப்ரொபெஷன்ஸ் கல்வி மற்றும் ஜீவரக்ஷா திட்டத்தின் தலைமை அமைப்பாளரான டாக்டர் மகாலட்சுமி கூறியதாவது:-

    புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி, புதுச்சேரி ஜீவரக்ஷா அறக்கட்டளையுடன் 2022 டிசம்பரில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தப் பயிற்சியை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடங்கும் முதல் மருத்து வக் கல்லூரி இதுவாகும். பயிற்சியாளர்கள் மற்றும் முதுகலை மாணவர்க ளுக்கான திட்டம். முதல் கட்டமாக, 4 நாட்கள் 32 வல்லுநர்களை கொண்டு பாட நெறிமுறைகளை கொண்டு பயிற்சி அளித்தனர்.

    இதனை ஜீவரக்ஷா அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ராம் நாயர் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து 11 உதவியாளர்கள் குழு இந்த திட்டத்தை வழிநடத்துகிறது என்று தெரிவித்தார்.

    • மத்திய ஜவுளி அமைச்சகம் மற்றும் நேஷனல் பேஷன் டெக்னாலஜி தொழில்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
    • ஆலை வளாகத்தில் ஜவுளி பூங்கா அமைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஏ.எப்.டி. ஆலையில் ஜவுளி பூங்கா அமைக்க மத்திய ஜவுளி அமைச்சகம் மற்றும் நேஷனல் பேஷன் டெக்னாலஜி தொழில்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    இந்த குழுவினர் சமீபத்தில் புதுவைக்கு வந்து அதிகாரிகளுடன் கலந்துரை யாடினர். தொடர்ந்து ஜவுளி அமைச்சகத்தின் கூடுதல் ஆணையர் எஸ்.பி.வர்மா தலைமையிலான குழுவினர் புதுவையில் உள்ள அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தி, ஆலை வளாகத்தில் ஜவுளி பூங்கா அமைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    திருப்பூரில் பேஷன் டெக்லானஜி நிறுவனம் அமைக்கப்பட்டது போல புதுவையில் ஆடை வடிவமைப்பு மையம் அமைக்கலாம் என அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். மத்திய ஜவுளித்துறை உறுதியான முன்மொழிவு வந்தால் பூங்கா, வடிவமைப்பு மைய கட்டுமான பணியை தொடங்க தயாராக உள்ள தாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • கடை வாடகையை 50 மடங்கு அதிகப்படுத்தி வருவாய்த்துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டது.
    • இதுகுறித்து சின்ன மணிகூண்டு வியாபாரிகள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை சின்னமணி கூண்டு வியாபாரிகளுக்கு கடை வாடகையை 50 மடங்கு அதிகப்படுத்தி வருவாய்த்துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டது.

    இதுகுறித்து சின்ன மணிகூண்டு வியாபாரிகள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர்.

    இதைத்தொடர்ந்து கென்னடி எம்.எல்.ஏ. வியாபாரிகளை அழைத்து சென்று வருவாய்த்துறை அதிகாரி பிரபாகரனை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் ஏற்கனவே சின்னமணிகூண்டு வியாபாரிகள் வியாபா ரமின்றி கஷ்டநிலையில் இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடை வாடகையை 50 மடங்கு உயர்த்தி உள்ள தால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே உயர்த்தப்பட்ட கட்டணத்தை முற்றிலும் தவிர்த்து பழைய கட்டணத்தையே வசூலிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டி கிழக்குகடற்கரை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • சங்கத்தலைவர் டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கமும் யங் இந்தியன் இணைந்து யோகாசனா பாரத் தலைமையில் மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டி கிழக்குகடற்கரை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியினை சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கத்தலைவர் டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    சங்க பொதுச்செயலாளர் தயாநிதி யோகாசன செயல்முறை குறித்து விளக்கினார்.

    முதன்மை விருந்தினராக நேரு எம்.எல்.ஏ. , ஒலிம்பிக் விளையாட்டு சங்க பொதுச்செயலாளர் தனசேகர், எங் இந்தியன் அமைப்பு தலைவர் திலீப் அனிருத், துணைத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டு மாணவ- மாணவிகளை பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினர்.

    சிறப்பு விருந்தினராக சங்க துணைத் தலைவர் தேவசேனா பவனானி, சங்கப் பொருளாளர் சண்முகம், சங்க உறுப்பினர்கள் செந்தில் குமார், அன்பழகன் மற்றும் லலிதா சண்முகம் ஆகியோர் மாணவ-மாணவிகளை வாழ்த்தினர்.

    யோகா நடுவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர்.முடிவில் சங்க துணை செயலாளர் டாக்டர் பாலாஜி நன்றி கூறினார்.

    • சிற்ப துறையில் படிக்கும் மாணவர்கள் பயனற்ற இரும்பு, நட்டு, போல்ட் போன்றவற்றை கொண்டு உருவாக்கிய நடராஜர் சிலை உள்ளது.
    • ஊழியர் ஒருவர் பத்திரமாக பாம்பை மீட்டு அடர்ந்த தோட்டப்பகுதியில் விடுவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பத்தில் பாரதியார் பல்கலைக்கூடம் உள்ளது.

    இங்கு சிற்ப துறையில் படிக்கும் மாணவர்கள் பயனற்ற இரும்பு, நட்டு, போல்ட் போன்றவற்றை கொண்டு உருவாக்கிய நடராஜர் சிலை உள்ளது.

    இதன் தலைமீது 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பு அமர்ந்து இருந்தது. இதனை ஊழியர்கள் கண்டதும் நாகம் படம் எடுத்து ஆடியது.

    இதைக் கண்ட ஊழியர்கள் வியந்து பார்த்தனர். பின்னர் ஊழியர் ஒருவர் பத்திரமாக பாம்பை மீட்டு அடர்ந்த தோட்டப்பகுதியில் விடுவித்தார்.

    • சக்திவேல், லோகுஐயப்பன், தேவமணி ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
    • ஆஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தல் வழக்கு புதுவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.

    புதுச்சேரி:

    2010-ம் ஆண்டு இலங்கை அகதிகள் 15 பேரை புதுவை தேங்காய்த்திட்டு துறைமுகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மீன்பிடி படகு மூலம் அனுப்ப சிலர் முயன்றனர்.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீராம்பட்டினத்தை சேர்ந்த திராவிடர் விடுதலைக்கழக தலைவர் லோகு.ஐயப்பன், தி.மு.க.வை சேர்ந்த சக்திவேல், காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இதில் 3 பேர் தலைமறைவாகினர். 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர். இதற்கிடையே சக்திவேல், லோகுஐயப்பன், தேவமணி ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இதிலிருந்து விடுவிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அவர்கள் கடிதம் எழுதினர்.

    இதன்பின் 3 பேரும் அந்த சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தல் வழக்கு புதுவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், ஆட்கடத்தல் வழக்கு நிரூபிக்கப்படாததால், அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார்.

    வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தேவமணி 2021-ல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மர்மநபர் டாக்டர் வெங்கடரமண்யாவிடம் அவரது பாஸ்போர்ட், முகவரி உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட தகவல்களை கேட்டுள்ளார்.
    • அதிர்ச்சியடைந்த வெங்கடரமண்யா சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கோலாஸ் நகரை சேர்ந்தவர் வெங்கடரமண்யா (வயது36). டாக்டரான இவர், ஜிப்மரில் முதுகலை மருத்துவம் படித்து வருகிறார்.

    அவரது டுவிட்டர் கணக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அறிமுகம் ஆனார்.

    அப்போது அந்த நபர், டாக்டர் வெங்கடரமண்யாவிடம் அவரது பாஸ்போர்ட், முகவரி உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட தகவல்களை கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், டுவிட்டரில் இருந்த வெங்கடரமண்யா மற்றும் அவரது மனைவியின் புகைப்படங்களை எடுத்து ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடரமண்யா இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் வெங்கடரமண்யாவுக்கு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணத்திற்கும், சொத்திற்கும், வாரிசுகளுக்கும் என தனி, தனியாக ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு முறை உண்டு.
    • பொது சிவில் சட்டத்திற்கு நாங்கள் எல்லா வகையிலும் எதிர்த்து நிற்போம்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொது கூட்டம் வில்லியனூரில் நடந்தது.

    பொதுகூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி, புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கென்னடி, செந்தில்குமார், சம்பத் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேசியதாவது:-

    ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு சட்டம் உண்டு. திருமணத்திற்கும், சொத்திற்கும், வாரிசுகளுக்கும் என தனி, தனியாக ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு முறை உண்டு.

    ஆனால் இது எல்லாவற்றையும் ஒன்றாக மாற்றி பொதுசிவில் சட்டம் என மாற்றினால் அதில் குழப்பம் வரும். சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் என்பது எங்களது கடமைகளில் முக்கியமான ஒன்று.

    அதனால் தான் யார் இது தொடர்பாக மனு கொடுத்தாலும் டெல்லியில் தி.மு.க. இருக்கும் வரை யாரும் அஞ்ச வேண்டாம். கவலை கொள்ள வேண்டாம் என கூறுவேன்.

    பொது சிவில் சட்டத்திற்கு நாங்கள் எல்லா வகையிலும் எதிர்த்து நிற்போம். எங்களை விட வேகமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார். பொது சிவில் சட்டம் வரக்கூடாது என்பதற்கான எல்லா முயற்சிகளையம் எடுக்க வேண்டும் என எங்களிடம் கூறியுள்ளார்.

    பொது சிவில் சட்டத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். 8 மாதத்தில் வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்துங்கள். நாம் எல்லாரும் ஒன்றாக வாழ வேண்டும் என்றால் எல்லாரையும் ஒன்றாக நடத்துகின்ற அரசாங்கம் வர வேண்டும்

    இவ்வாறு திருச்சி சிவா எம்.பி. பேசினார்.

    இதன்பின்னர் திருச்சி சிவா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடந்த சில காலமாகவே அதிகார மையங்களை வைத்து பா.ஜனதா அச்சுறுத்தும் போக்கு நடைபெற்று வருகிறது.

    தற்போது தமிழகத்தில் ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்தில் நடைபெற்று வரும் சோதனையின் காரணமாக எந்த வகையிலும் தி.மு.க.வுக்கு பின்னடைவு கிடையாது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பணி எளிதாகும்.

    அதன் மூலம் தி.மு.க. வெற்றி நிச்சயமாக கிடைக்கும். மக்கள் அனைத்தையும் உணர்ந்துள்ளனர். மத்திய அரசு சோதனை செய்வதற்கான நோக்கங்களையும், காரணங்களையும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து நாங்கள் எந்த வகையிலும் அச்சமடையவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதுவை அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு உருவாக்கப்பட்டது.
    • போராட்டத்துக்கு கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்.

    புதுச்சேரி:

    புதுவையில் பாசிக், பாப்ஸ்கோ, அமுதசுரபி உட்பட அரசு சார்பு நிறுவனங்களுக்கு ஆண்டுக்கணக்கில் சம்பளம் வழங்கப்படவில்லை.

    தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இதையடுத்து புதுவை அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவினர் கோரிக்கை மாநாடு நடத்தினர்.

    மாநாட்டில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக அரசு முத்தரப்பு குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.

    தொடர்ந்து மாபெரும் கோரிக்கை பேரணியை தொழிலாளர்கள் நடத்தி முதலமைச்சரிடம் மனு அளித்தனர்.

    இந்த நிலையில் போராட்டத்தின் அடுத்த கட்டமாக பெருந்திரள் காத்திருப்பு போராட்டத்தை கூட்டு போராட்டக்குழு வினர் இன்று நடத்தினர்.சட்டசபை அருகே மிஷன் வீதி மாதாகோவில் எதிரே இந்த போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்துக்கு கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்.

    பல்வேறு அரசு சார்பு நிறுவன சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் முத்து ராமன், ரமேஷ், ஜெயசங்கர், பிரபு, தரணிராஜன், தணிகை மலை, செங்குட்டுவன், துரை செல்வம், பாஸ்கர பாண்டி யன்கண்ணன், சண்முகம், யோகேஷ், கதிரேசன், முருகானந்தம், பிரேம் ஆனந்த், ராஜேந்திரன், திருக்குமரன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தை தொடங்கி வைத்து மாநில காங்கிரஸ் தலைவர் வைத்தி லிங்கம் எம்பி, எதிர்கட்சித்தலைவர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் ஆகியோர் பேசினர். ஏ.ஐ.டி.யூ.சி. கவுரவ தலைவர் அபிஷேகம், தலைவர் தினேஷ் பொன்னையா அரசு ஊழியர் சம்மேளனம் ஆனந்தராசன், மாதர்சங்கம் ஆசைத்தம்பி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    அரசு சார்பு நிறுவனங்க ளுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும். நிறுவ னங்களை திறந்து நடத்தி அரசு சார்பு நிறுவன ஊழி யர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    • பைக்கில் வந்த வாலிபர் திடீரென சிந்தியா வைத்திருந்த கைபையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை தென்னஞ்சாலை ரோடு சஞ்சய்காந்தி நகரை அடுத்த டாக்டர் காலனியை சேர்ந்தவர் பீட்டர். இவரது மனைவி சிந்தியா(வயது70). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் இவரும் துபாயில் வசித்து வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பீட்டர் இறந்து விட்டார். இதனால் சிந்தியா தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில்  சிந்தியா புதுவை-கடலூர் சாலையில் உள்ள தேவாலயத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். தென்னஞ்சாலை ரோட்டில் உள்ள ஏ.ஜி.சபை அருகே வந்த போது பின்னால் பைக்கில் வந்த வாலிபர் திடீரென சிந்தியா வைத்திருந்த கைபையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார். சிந்தியா அந்த கைபையில் ரூ.ஆயிரம் ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் வீட்டு சாவியை வைத்திருந்தார்.

    இதுகுறித்து சிந்தியா உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 17 வயது சிறுவன் கைபையை பறித்து சென்றது பதிவாகியிருந்தது.

    இதனை வைத்து அந்த சிறுவனை போலீசார் பிடித்தனர்.

    அவனிடம் இருந்து கைபை மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்

    புதுச்சேரி:

    மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் ஜெகன்நாதன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான மாநில அந்தஸ்து கோரிக்கை என்பது, புதுவை மக்களின் நீண்ட நாள் வலியுறுத்தல் ஆகும்.

    ஆனால் மாநில தகுதி கோரிக்கை என்பது கானல் நீர்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில தகுதி கிடைக்க வேண்டுமெனில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், வெகுமக்கள் அமைப்புகளும் ஒன்றிணைந்து மாநில தகுதி கோரிக்கையை கையில் எடுத்து மத்திய அரசுக்கு அனைத்து வகையிலும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெறும் பிரிவுக்கு வரும் புறநோயாளிகள் பயன்பெறும் விதமாக அதனருகில் உணவகம் செயல்பட்டு வந்தது.
    • நோயாளிகள் வெகு தொலைவில் சென்று அவர்களுக்கு தேவையான உணவுகளை பெற நேரிடுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு ஜிப்மர் இயக்குனருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

    அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் நீரிழிவு நோயால் கிட்னி பாதிக்கப்பட்டு ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெறும் பிரிவுக்கு வரும் புறநோயாளிகள் பயன்பெறும் விதமாக அதனருகில் உணவகம் செயல்பட்டு வந்தது. தற்போது அந்த உணவகம் கடந்த மூன்று மாதமாக செயல்படாமல் மூடப்பட்டுள்ளது. இதனால் நீரிழிவால் கிட்னி பாதிக்கப்பட்டு ரத்த சுத்திகரிப்பு செய்யும் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் உடல் சோர்வு ஏற்பட்டவுடன் அவர்களுக்கு உடனடியாக உணவோ, பருக உகந்த பானமோ உடனடியாக கிடைக்க செய்ய வேண்டும்.

    ஆனால் அந்த உணவகம் மூடப்பட்டிருப்பதால் நோயாளிகள் வெகு தொலைவில் சென்று அவர்களுக்கு தேவையான உணவுகளை பெற நேரிடுகிறது. இதனால் அவர்கள் மிகவும் சோர்வடைந்து மயங்கி விழும் நிலை உள்ளது.

    ஆகையால் மேற்கண்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு நீரிழிவு நோயால் கிட்னி பாதிக்கப்பட்டு ரத்த சுத்திகரிப்பு செய்ய வரும் நூற்றக்கணக்கான நோயாளிகளுக்கு உதவும் விதமாக அங்கு செயல்பட்டு வந்த உணவகத்தை உடனடியாக திறக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×