search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சின்னமணிகூண்டு வியாபாரிகளுக்கு  கடை வாடகையை குறைக்க வேண்டும்
    X

    அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.

    சின்னமணிகூண்டு வியாபாரிகளுக்கு கடை வாடகையை குறைக்க வேண்டும்

    • கடை வாடகையை 50 மடங்கு அதிகப்படுத்தி வருவாய்த்துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டது.
    • இதுகுறித்து சின்ன மணிகூண்டு வியாபாரிகள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை சின்னமணி கூண்டு வியாபாரிகளுக்கு கடை வாடகையை 50 மடங்கு அதிகப்படுத்தி வருவாய்த்துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டது.

    இதுகுறித்து சின்ன மணிகூண்டு வியாபாரிகள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர்.

    இதைத்தொடர்ந்து கென்னடி எம்.எல்.ஏ. வியாபாரிகளை அழைத்து சென்று வருவாய்த்துறை அதிகாரி பிரபாகரனை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் ஏற்கனவே சின்னமணிகூண்டு வியாபாரிகள் வியாபா ரமின்றி கஷ்டநிலையில் இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடை வாடகையை 50 மடங்கு உயர்த்தி உள்ள தால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே உயர்த்தப்பட்ட கட்டணத்தை முற்றிலும் தவிர்த்து பழைய கட்டணத்தையே வசூலிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×