என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம்
    • 100 அடி ரோடு இந்திராகாந்தி சிக்னல் அருகில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம் முன்பு பெருந்திரள் போராட்டம்

    புதுச்சேரி:

    புதுவை மாநில அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் முதலியார் பேட்டையில் உள்ள சி.ஐ.டி.யூ. புதுவை மாநில குழு அலுவலகத்தில் நடந்தது.

    மாநில பொதுச் செயலாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தலைவர் பிரபுராஜ், துணைத்தலைவர் கொளஞ்சியப்பன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா. பொருளாளர் அந்தோணி. ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர் ஞானசேகரன், துணை தலைவர் சொக்கலிங்கம் ஏ.ஐ.சி.சி.டி.யு. மாநில தலைவர் மோதிலால். பொதுச் செயலாளர் புருஷோத்தமன் எல்.எல்.எப். தொழிற்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் செந்தில, எம்எல்எப் துணைத் தலைவர் மாசிலாமணி. என்டிஎல்எப் மாநில தலைவர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், மத்திய அரசை கண்டித்து ஆகஸ்ட் மாதம் 9-ந் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்க நாளில் 100 அடி ரோடு இந்திராகாந்தி சிக்னல் அருகில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம் முன்பு பெருந்திரள் போராட்டம் நடத்துவது என்றும் புதுவை மின்சார துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவினை முழுக்க கைவிடும் படியும், அரசின் மின்துறை சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தியும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆக்கப்பூர்வமான தீர்வு கண்டிட கோரியும் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.

    • தனியார் விடுதி அறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ பதிவு செய்த வழக்கில் காவல் துறை கடமைக்கு 2 பேரை கைது செய்தனர்.
    • சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற செயல்களை செய்வோர் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா போலீஸ் டி.ஜி.பிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவைக்கு சுற்றுலா வருபவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு தனியார் விடுதி அறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ பதிவு செய்த வழக்கில் காவல் துறை கடமைக்கு 2 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களுக்கு பின்னணியில் யார் உள்ளார்கள்.? இவர்கள் புதுவையில் வேறு எங்காவது விடுதிகள் லீசுக்கு எடுத்து ரகசிய கேமரா வைத்து பதிவு செய்துள்ளனாரா என்பது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற செயல்களை செய்வோர் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவை மக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் இளம் பெண்களை சீர்குலைக்கும் வேலைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • பழுதடைந்த பழையதார் சாலைகளை மாற்றி புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • ஆய்வின்போது சிமெண்ட் சாலைகள் தரமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட மறைமலை அடிகள் சாலை யில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு மூலம் பழுதடைந்த பழைய தார் சாலையை மாற்றி புதிய தார் சாலை அமைக்கும் பணி மற்றும் காங்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளையும் மேலும் இளங்கோ நகர் வார்டு பகுதியான கென்னடி நகர் பகுதியில் உள்ள லயன்ஸ்கிளப் வீதியில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு மூலம் பழுதடைந்த பழையதார் சாலைகளை மாற்றி புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் வாய்க்கால் கட்டும் பணி மற்றும் மழை காலங்களில் மழைநீர் பகுதியில் தேங்காதவாறு எளிதாக வெளியேறும் வகையில் வாட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது சிமெண்ட் சாலைகள் தரமான முறையில் அமைக்கப்பட்டு ள்ளதா? என்பதை குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பன்னீர்செல்வம், இளநிலை பொறியாளர் சிவப்பிரகாசம், நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம், நகராட்சி இளநிலை பொறியாளர் குப்புசாமி மற்றும் அரசு அதிகாரிகள், மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிள் பலர் உடனிருந்தனர்.

    • கவர்னர் தமிழிசை, கல்வித்துறை அதிகாரிகளை அழைத்து புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.
    • அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் 70 பேர் தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது அறிவித்தார்.

    அதன்மூலம் ஆண்டு தோறும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக் கல்லுரிகளில் அதிக அளவில் இடங்களை பெற்று வருகின்றனர்.

    இதேபோல் புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.) படிப்பதற்கு உள் இடஒதுக்கீடு வழங்க முதலமைச்சர் ரங்கசாமியிடம் அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

    இதைத்தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கல்வித்துறை அதிகாரிகளை அழைத்து புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். மேலும் முதலமைச்சர் ரங்கசாமியிடமும் அவர் ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கிடு வழங்க அனுமதிக்குமாறு முதலமைச்சர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பரிந்துரை செய்து அதற்கான கோப்பை அனுப்பி வைத்துள்ளார்.

    அதே போல் 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி, அதை உடனடியாக நடைமுறைப்படுத்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் இந்த கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இந்த இடஒதுக்கீட்டு முறை அமலுக்கு வந்தால் இந்த ஆண்டில் இருந்தே அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் 37 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பிலும், 14 பேர் பல் மருத்துவ படிப்பிலும் சேர்ந்து பயனடையும் வாய்ப்பு உள்ளது. அரசுப்பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் 70 பேர் தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங்கை சந்தித்தார்
    • பாராளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவிப்பதாகவும் துணைவேந்தர் கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் முன்னாள் அமைச்சர் ஷாஜகான், வைத்தியநாதன் எம்.எல்.ஏ. , மாணவர் காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ வர்தன், ஊடகப்பிரிவு சேர்மன் சேகர் ஆகியோர் பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங்கை சந்தித்தனர்.

    அப்போது புதுவை மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து பாடபிரிவு களிலும் 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க கோரி மனு அளிக்கப்பட்டது. இதற்காக ஆட்சி மன்ற குழுவில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தினார்.

    இது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர், பாராளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவிப்பதாகவும் துணைவேந்தர் கூறினார்.

    • திருபுவனை அருகே கலித்தீர்த்தாள் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் குமார்.
    • சம்பத் குமார் உளுந்தூர் பேட்டையில் டைல்ஸ் கடை நடத்தி வந்தார்.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே கலித்தீர்த்தாள் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் குமார்.  இவருக்கு திருமணமாகி பிரேமாவதி என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். சம்பத் குமார் உளுந்தூர் பேட்டையில் டைல்ஸ் கடை நடத்தி வந்தார்.

    ஆனால் இத்தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சம்பத் குமார் அத்தொழிலை கைவிட்டுவிட்டார். இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி சம்பத் குமாரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு மனமுடைந்து இருந்து நிலையில் மனைவியும் பிரிந்து சென்றதால் சம்பத் குமார் வேதனையை மறக்க மது குடிக்க தொடங்கினார்.

    படிப்படியாக போதைக்கு அடிமையான அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்றுவீட்டின் தோட்டத்தில் உள்ள மரத்தில் கேபிள் ஒயரில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஸ்டீபன் முத்தியால்பேட்டையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
    • அந்த பெண்ணிடம் சதீஷ்குமார் பேசிவந்ததாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை அவ்வைநகர் 19-வது குறுக்கு வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஜான்சிராணி என்ற மனைவி உள்ளார். சதிஷ்குமாரும் கென்னடி நகரை சேர்ந்த ஸ்டீபன் என்பவரும் நண்பர்கள். இதற்கிடையே ஸ்டீபன் முத்தியால்பேட்டையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணிடம் சதீஷ்குமார் பேசிவந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அறிந்த ஸ்டீபன் சதீஷ்குமாரை கண்டித்துள்ளார். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் சதீஷ்குமார் மீண்டும் அந்த பெண்ணிடம் பேசிவந்ததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்டீபன் நேற்று அதிகாலை சதீஷ்குமார் வீட்டிற்கு சென்றார். அவருடன் மற்றொருவரும் சென்றார். அவர்கள் இருவரும் சதீஷ்குமார் வீட்டு கதவை தட்டி அவரை வெளியே அழைத்தனர். வீட்டை விட்டு வெளியே வந்த சதீஷ்குமாரை என் காதலியுடன் பேசுகிறாய் என கேட்டு கையில் வைத்திருந்த கத்தியால் சதீஷ்குமாரை ஸ்டீபன் வெட்டினார்.

    இதனை தடுக்க வந்த சதீஷ்குமாரின் தந்தை மாரியப்பனை, ஸ்டீபனுடன் வந்தவர் வெட்டினார். பின்னர் அவர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்ட னர். இதில் படுகாயமடைந்த சதீஷ்குமார் மற்றும் அவரது தந்தை மாரியப்பன் ஆகிய இருவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இரு வரையும் தேடி வருகின்றனர்.

    • தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • மோட்டார் சைக்கிளை யாரோ திருடிச் சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    புதுச்சேரி:

    மடுகரை அருகே சிறுவந்தாடு மோட்சகுளம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவர் கலிதீர்த்தாள் குப்பத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று தான் வேலை பார்க்கும் நிறுவ னத்தின் நுழைவுவாயிலில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பணியில் ஈடுபட்டார். பின்னர் பணி முடிந்து வந்து பார்த்த போது தனது மோட்டார் சைக்கிளை யாரோ திருடிச் சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பெருமாள் திருபுவனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியை தொடங்கி வைக்க செல்லும் போது அங்கு பொதுமக்களிடம் பேசி ஏதாவது ஒரு சலசலப்பை ஏற்படுத்துவார்.
    • ஒவ்வொரு பகுதியிலும் மத்திய அரசு திட்டம் மற்றும் மோடி குறித்து கேள்வி எழுப்பினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் விவகா ரங்கள் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கிராமப் பகுதிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியை தொடங்கி வைக்க செல்லும் போது அங்கு பொதுமக்களிடம் பேசி ஏதாவது ஒரு சலசலப்பை ஏற்படுத்துவார்.

    குறிப்பாக பணியை தொடங்கி வைக்கும் முன் நடக்கும் பூஜையின் போது சமஸ்கிருத மொழியில் மந்திரம் சொல்வதும், பொதுமக்களின் வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் கொட்டும் என்று சொன்னது, பாகூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சரிடம் பொதுமக்கள் சிலிண்டர் விலை ஏற்றம் குறித்து கேள்வி எழுப்பியது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இன்று புதுவை மணவெளி தொகுதி டி.என்.பாளையம், ஆண்டியார்பாளையம் நோனாங்குப்பம், தவளக்குப்பம் ஆகிய பகுதி களில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை யில் நடந்தது. இதில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் 100 நாள் வேலை வாய்ப்பு பணியை தொடங்கி வைத்தார். அப்போது 100 நாள் பணிக்கு வந்த பெண்களிடம் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் ஒவ்வொரு பகுதியிலும் மத்திய அரசு திட்டம் மற்றும் மோடி குறித்து கேள்வி எழுப்பினார்.

    அதில் மோடி அரசு கொண்டு வந்த 5 லட்ச ரூபாய் காப்பீட்டு திட்டத்தின் பெயர் என்ன என்று கேட்டார், யாருக்கும் பதில் சரியாக தெரியாததால் ஒரு பெண் ஆயுஸ்மான் என்று கூறிய உடனே அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ரூபாய் ஆயிரம் பரிசுத்தொகை வழங்கினார்.

    கிராமப்புற பகுதிகளுக்கு மத்திய அரசு அமைக்கும் சாலை திட்டத்தின் பெயர் என்ன என கேட்டார், அதற்கு பிரதான் மந்திரி சடக் யோஜனா என ஒரு பெண் பதிலளித்தார் அவருக்கு ரூபாய் ஆயிரம் வழங்கினார்.

    மோடியின் பிறந்தநாள் என்றைக்கு என அமைச்சர் கேள்வி எழுப்பிய போது, எங்கள் பிறந்த நாள் தேதியே எங்களுக்கு தெரிய வில்லை என பெண்கள் பதில் அளித்ததால் அங்கு சிரிப்பலை எழுந்தது. உடனே அங்கிருந்த ஒரு ஆண் மோடி பிறந்தநாள் செப்டம்பர் 17 என கூறியதால் அவருக்கும் அமைச்சர் பரிசுத்தொகை வழங்கினார். இதேபோல் பிரதமர் மோடி பங்கேற்கும் மனதின் குரல் நிகழ்ச்சி மாதத்தின் எந்த வாரம் நடக்கும் என்ற கேள்விக்கு கடைசி வாரம் எனக் கூறிய பெண்ணுக்கு ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

    பா.ஜனதா அமைச்சர் 100 நாள் வேலை திட்டப் பணியை தொடங்கி வைக்க செல்லும் இடத்தில் மத்திய அரசு திட்டம் மற்றும் மோடி குறித்து கேள்வி எழுப்பி பதில் அளித்தது அவர்க ளுக்கு தலா ரூபாய் 1000 பரிசு வழங்கியதால் பெண்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டது.

    மேலும் இதே போல் ஒவ்வொரு முறையும் நான் வரும் பொழுது கேட்கும் உரிய பதிலளித்தால் பணம் வழங்கப்படும் என கூறி விட்டு அமைச்சர் சென்றார்.

    • ½ சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தை போல் புதுவையிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் அரசின் இடங்களில் 7½ சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அரசை வலியுறுத்தி ஜென்மராக்கினி கோவில் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொண்டு வரப்பட்ட சட்டத்தை புதுவையிலும் கொண்டுவர வேண்டும் என சட்டமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திய போது அரசியல் காழ்புணர்ச்சியால் அந்த சட்டத்தை தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமல்படுத்த வில்லை.

    புதுவையில் தேசிய ஜனநாயக முன்னணியில் புதிய ஆட்சி ஏற்பட்ட பிறகு கவர்னர், முதல் அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து மீண்டும் வலியுறுத்தி னோம்.அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு இல்லாததால் ஒன்று அல்லது 2 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

    இந்த ஆண்டு சுமார் 389 மருத்துவ இடங்கள் அரசு இடங்களாக கிடைத்துள்ளது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7½ சதவீத உள் ஒதுக்கீடு அளித்தால் சுமார் 30 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

    எனவே தான் உள்ஒதுக்கீடு கேட்கிறோம். ஆனால் தனியார் பள்ளிகளுக்கு சாதகமான நிலை பாட்டில் அரசு இருப்பதால் அரசு பள்ளி மாணவர்க ளுக்கு உள் ஒதுக்கீட்டை வழங்கவில்லை. புதுவை தி.மு.க.வுக்கு மாணவர்கள் பிரச்சனை உள்ளிட்ட எந்த பிரச்சனை களி லும் அக்கரை இல்லை. தங்களது தொழில் வளம் பாதிக்காத வகையில் அவ்வப்போது கவர்னர் பற்றி விமர்சனம் செய்தால் போதும் என்ற நிலைக்கு தி.மு.க. தள்ளப்பட்டுள்ளது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமையும் கூட்டணி புதுவை உள்ளிட்ட 40 இடங்களிலும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

    • 200-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வடை பாயாசத்துடன் அறு சுவை விருந்து வழங்கப்பட்டது.
    • பாரதி மற்றும் கோவில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ. வெங்கடேசனின் தாயார் பத்மாவதி அம்மாள் அறக்கட்டளை சார்பில் ஆடி அமாவாசையையொட்டி கீழ் புத்துப்பட்டில் அமைந்துள்ள பராசக்தி அம்மன் கோவிலில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வடை பாயாசத்துடன் அறு சுவை விருந்து வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. அவரது துணைவியார் சுபலட்சுமி வெங்கடேசன், தொழிலதிபர் வரதராஜ பெருமாள் குடும்பத்தினர் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் பிரியா, பாரதி மற்றும் கோவில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • திருக்கனூரை சேர்ந்த இளைஞர்கள் நேற்று கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்
    • அப்போது பந்து அங்குள்ள அம்சவள்ளி என்பவருடைய வீட்டில் விழுந்தது.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே உள்ள விநாயகம்பட்டு கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது பந்து அங்குள்ள அம்சவள்ளி  என்பவருடைய வீட்டில் விழுந்தது.

    இதனை அம்சவள்ளியும் அவரது கணவர் கனகராஜ் மற்றும் உறவினர்கள் முரளி, மூர்த்தி ஆகியோர் கண்டித்தனர். கைப்பந்து விளையாடிய இளைஞர்களுக்கு ஆதரவாக அதே ஊரைச் சேர்ந்த திருவண்ணாமலை பாதையில் வசிக்கும் வீரா சாமி  என்பவர் அம்சவள்ளி தரப்பினரிடம் கேட்டுள்ளார்.

    இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசி, கட்டையால் தாக்கி கொண்டனர். இதில் கனகராஜின் கார் தாக்கப்பட்டு சேதமடைந்தது.

    இதுகுறித்து இரு தரப்பினரும் திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீசார் இரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×