என் மலர்
புதுச்சேரி

பல்கலைக்கழகத்தின் அனைத்து பாடபிரிவுகளிலும் 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க கோரி மனு அளிக்கப்பட்ட காட்சி
புதுவை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு
- புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங்கை சந்தித்தார்
- பாராளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவிப்பதாகவும் துணைவேந்தர் கூறினார்.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் முன்னாள் அமைச்சர் ஷாஜகான், வைத்தியநாதன் எம்.எல்.ஏ. , மாணவர் காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ வர்தன், ஊடகப்பிரிவு சேர்மன் சேகர் ஆகியோர் பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங்கை சந்தித்தனர்.
அப்போது புதுவை மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து பாடபிரிவு களிலும் 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க கோரி மனு அளிக்கப்பட்டது. இதற்காக ஆட்சி மன்ற குழுவில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தினார்.
இது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர், பாராளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவிப்பதாகவும் துணைவேந்தர் கூறினார்.
Next Story






