என் மலர்
நீங்கள் தேடியது "threaten tourists"
- தனியார் விடுதி அறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ பதிவு செய்த வழக்கில் காவல் துறை கடமைக்கு 2 பேரை கைது செய்தனர்.
- சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற செயல்களை செய்வோர் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா போலீஸ் டி.ஜி.பிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவைக்கு சுற்றுலா வருபவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு தனியார் விடுதி அறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ பதிவு செய்த வழக்கில் காவல் துறை கடமைக்கு 2 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு பின்னணியில் யார் உள்ளார்கள்.? இவர்கள் புதுவையில் வேறு எங்காவது விடுதிகள் லீசுக்கு எடுத்து ரகசிய கேமரா வைத்து பதிவு செய்துள்ளனாரா என்பது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற செயல்களை செய்வோர் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை மக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் இளம் பெண்களை சீர்குலைக்கும் வேலைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.






