என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வியாபாரி தூக்கிட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்

    வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

    • திருபுவனை அருகே கலித்தீர்த்தாள் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் குமார்.
    • சம்பத் குமார் உளுந்தூர் பேட்டையில் டைல்ஸ் கடை நடத்தி வந்தார்.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே கலித்தீர்த்தாள் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் குமார். இவருக்கு திருமணமாகி பிரேமாவதி என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். சம்பத் குமார் உளுந்தூர் பேட்டையில் டைல்ஸ் கடை நடத்தி வந்தார்.

    ஆனால் இத்தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சம்பத் குமார் அத்தொழிலை கைவிட்டுவிட்டார். இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி சம்பத் குமாரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு மனமுடைந்து இருந்து நிலையில் மனைவியும் பிரிந்து சென்றதால் சம்பத் குமார் வேதனையை மறக்க மது குடிக்க தொடங்கினார்.

    படிப்படியாக போதைக்கு அடிமையான அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்றுவீட்டின் தோட்டத்தில் உள்ள மரத்தில் கேபிள் ஒயரில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×