என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நண்பனை கத்தியால் வெட்டிய வாலிபர்
    X

    கோப்பு படம்.

    நண்பனை கத்தியால் வெட்டிய வாலிபர்

    • ஸ்டீபன் முத்தியால்பேட்டையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
    • அந்த பெண்ணிடம் சதீஷ்குமார் பேசிவந்ததாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை அவ்வைநகர் 19-வது குறுக்கு வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஜான்சிராணி என்ற மனைவி உள்ளார். சதிஷ்குமாரும் கென்னடி நகரை சேர்ந்த ஸ்டீபன் என்பவரும் நண்பர்கள். இதற்கிடையே ஸ்டீபன் முத்தியால்பேட்டையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணிடம் சதீஷ்குமார் பேசிவந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அறிந்த ஸ்டீபன் சதீஷ்குமாரை கண்டித்துள்ளார். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் சதீஷ்குமார் மீண்டும் அந்த பெண்ணிடம் பேசிவந்ததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்டீபன் நேற்று அதிகாலை சதீஷ்குமார் வீட்டிற்கு சென்றார். அவருடன் மற்றொருவரும் சென்றார். அவர்கள் இருவரும் சதீஷ்குமார் வீட்டு கதவை தட்டி அவரை வெளியே அழைத்தனர். வீட்டை விட்டு வெளியே வந்த சதீஷ்குமாரை என் காதலியுடன் பேசுகிறாய் என கேட்டு கையில் வைத்திருந்த கத்தியால் சதீஷ்குமாரை ஸ்டீபன் வெட்டினார்.

    இதனை தடுக்க வந்த சதீஷ்குமாரின் தந்தை மாரியப்பனை, ஸ்டீபனுடன் வந்தவர் வெட்டினார். பின்னர் அவர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்ட னர். இதில் படுகாயமடைந்த சதீஷ்குமார் மற்றும் அவரது தந்தை மாரியப்பன் ஆகிய இருவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இரு வரையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×