என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாநில அந்தஸ்து  போராட்டத்தை முன்னெடுத்து நடத்த வேண்டும்
    X

    கோப்பு படம்.

    மாநில அந்தஸ்து போராட்டத்தை முன்னெடுத்து நடத்த வேண்டும்

    மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்

    புதுச்சேரி:

    மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் ஜெகன்நாதன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான மாநில அந்தஸ்து கோரிக்கை என்பது, புதுவை மக்களின் நீண்ட நாள் வலியுறுத்தல் ஆகும்.

    ஆனால் மாநில தகுதி கோரிக்கை என்பது கானல் நீர்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில தகுதி கிடைக்க வேண்டுமெனில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், வெகுமக்கள் அமைப்புகளும் ஒன்றிணைந்து மாநில தகுதி கோரிக்கையை கையில் எடுத்து மத்திய அரசுக்கு அனைத்து வகையிலும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×