என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    100 கோடியை உடனே வழங்க வேண்டும்-மத்திய மந்திரியிடம் ஆதிதிராவிடர் நலத்துறை வலியுறுத்தல்
    X

    புதுச்சேரி வந்த மத்திய இணை மந்திரி ராமதாஸ் அத்வாலேவுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி

    100 கோடியை உடனே வழங்க வேண்டும்-மத்திய மந்திரியிடம் ஆதிதிராவிடர் நலத்துறை வலியுறுத்தல்

    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன் தலைமையில் துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. எனவே என்.எஸ்.பி. போர்டலை முறைப்படுத்தி துரிதப்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே அரசு முறை பயணமாக நேற்று புதுச்சேரி வந்தார்.

    அவருக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன் தலைமையில் துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் முதல்- அமைச்சர் ரங்கசாமியை ராம்தாஸ் அத்வாலே சந்தித்து பேசினார்.

    அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் இயக்குனர் சாய்-இளங்கோவன் சில கோரிக்கைகளை வைத்தார்.

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவி தொகை வழங்கப்பட்ட தற்கான தகவல் அறிய என்.எஸ்.பி. என்ற போர்டல் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

    ஆனால் தற்போது அது சரிவர இயங்காததால் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. எனவே என்.எஸ்.பி. போர்டலை முறைப்படுத்தி துரிதப்படுத்த வேண்டும்.

    பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு உடனுக்குடன் வழங்க வேண்டும். ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ரூ.100 கோடியை உடனே வழங்கினால் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு உதவிகரமாக இருக்கும் என கேட்டுக்கொண்டார்.

    பின்னர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இயக்கங்களை சார்ந்த பிரதிநிதிகளை சந்தித்த ராம்தாஸ் அத்வாலே அவர்களுடைய கோரிக்கை களை மனுவாக பெற்றுக் கொண்டார். முன்னதாக மத்திய இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலேவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட போது சமூக நலத்துறை இயக்குனர் குமரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆய்வாளர்கள் கலைச்செல்வி, புவனா, ராஜா மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×