என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
சைக்கிளில் திரிந்த பிரபல ரவுடியின் தந்தை கைது
- சந்தேகமடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்திய போது போலீசாரை கொலை செய்து விடுவதாக செல்வம் மிரட்டினார்.
- பெட்ரோல் டேங்க் கவரில் 2 கூர்மையான கத்திகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கத்திகளை பறிமுதல் செய்து செல்வத்தை கைது செய்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் அரசங்குளம் பகுதியை சேர்ந்தவர் தாடி அய்யனார். இவர் பிரபல ரவுடி ஆவார். இவரது தம்பி ராஜேஷ். இவரும் ரவுடி செயலில் ஈடுபட்டு வந்தார். இவர்கள் 2 பேர் மீதும் புதுவை மற்றும் தமிழக பகுதிகளில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் புதுவை காவல் துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கண்காணிக்கும் பணியில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் நேற்று அதிகாலை ஈடுபட்டனர்.
அப்போது தாடி அய்யனார் மற்றும் அவரது தம்பி ராஜேஷ் ஆகியோரை கண்காணிக்க அவர்கள் வசிக்கும் பகுதிக்கு போலீசார் சென்றனர். ஆனால் அங்கு இருவரும் இல்லை.
அதே வேளையில் அவர்களின் தந்தையான செல்வம் என்பவர் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சுற்றிக்கொண்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்திய போது போலீசாரை கொலை செய்து விடுவதாக செல்வம் மிரட்டினார். இதனை தொடர்ந்து அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை சோதனை நடத்திய போது பெட்ரோல் டேங்க் கவரில் 2 கூர்மையான கத்திகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கத்திகளை பறிமுதல் செய்து செல்வத்தை கைது செய்தனர்.
இதுபோல் கோர்க்காடு பகுதியில் ரவுடிகளின் செயல்களை கண்காணிக்க கரிக்கலாம்பாக்கம் போலீசார் சென்ற போது அங்குள்ள சுடுகாட்டில் ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றார். உடனே போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அப்போது அவர் சட்டையின் முதுகு பகுதியில் கத்தி ஒன்றை மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டனர்.
குற்றசெயல்களில் ஈடுபடும் நோக்கில் அவர் கத்தியுடன் திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து கத்தியை பறிமுதல் செய்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கோர்க்காடு காலனி நடுத்தெருவை சேர்ந்த யோகானந்தம் என்பது தெரியவந்தது. இதைத்தொ டர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.






