என் மலர்
புதுச்சேரி
- தெற்கு ரெயில்வே அதிகாரிகள் சோதனை ஒட்டம் நடத்தினர்
- ரெயிலில் பயணம் செய்து வந்த அதிகாரிகள் புதுவை ரெயில் நிலையம் மற்றும் அங்கு நடைபெறும் பணிகளை பார்வையிட்டனர்.
புதுச்சேரி:
தெற்கு ரயில்வேயின், திருச்சி பொன் மலை, பெரம்பூர் கேரேஜ், ஆவடி பணி மனை இணைந்து, நீராவி ரெயில் என்ஜின் வடிவில், மின்சாரத்தில் இயங்கும் சுற்றுலா ரெயிலை வடிவமைத்துள்ளனர்.
இந்த ரெயிலை மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலை யத்தில், சமீபத்தில் பார்வையிட்டார்.
இந்த சுற்றுலா ரெயிலில் 3 சொகுசு ஏ.சி. பெட்டி, ஒரு பேன்டரி ஏ.சி. பெட்டியும் இருக்கும். சொகுசு இருக்கைகள், சுற்றுலா இடங்களை காணும் வகையில் கண்ணாடி மேற்கூரை ஆகியவையும் இருக்கும்.
அதிநவீன கழிப்பிட வசதி, பெரிய ஜன்னல்கள், மொபைல் போன் சார்ஜிங் வசதி, அவசரகால கதவுகள், வண்ண வண்ண நிறங்களில் உள்அலங்காரம், அடுத்த நிறுத்தம் மற்றும் ரெயிலின் வேகம் உள்ளிட்ட தகவல் அளிக்க டிஜிட்டல் திரைகள், ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு செல்லும் வசதி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
நீராவி புகை வெளியேறுவது போல், ஹாரன் ஒலித்தபடி, ஓடும் இந்த சுற்றுலா ரெயில், பயணியரிடம் எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த ரெயிலின் சோதனை ஒட்டம் சென்னை - புதுவை இடையே இன்று நடத்தது.
சென்னை எழும்பூரில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்ட ரெயிலில் தெற்கு ரெயில்வே பொது மேலா ளர் ஆர்.என்.சிங் உள் ளிட்ட அதிகாரிகள் பயணம் செய்தனர். மதியம் 12.30 மணியளவில் புதுவை ரெயில்வே நிலையத்தை வந்தடைந்தது. அங்கு பொதுமேலாளர் ஆர்.என். சிங்கை புதுவை ரெயில்வே அதிகாரிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து ரெயிலில் பயணம் செய்து வந்த அதிகாரிகள் புதுவை ரெயில் நிலையம் மற்றும் அங்கு நடைபெறும் பணிகளை பார்வையிட்டனர்.
புதுவை ரெயில் நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். மதிய உணவிற்கு பிறகு மீண்டும் 2.30 மணிக்கு சுற்றுலா ரெயிலில் சென்னை திரும்ப புறப்பட்டனர்.
சோதனை ஒட்டத்தில் சுற்றுலா ரெயிலின் வேகம், ரெயில் நிறுத்தங்களை தேர்வு செய்வது, எவ்வளவு நேரத்தில் புதுவைக்கு செல்கிறது உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப் பட்டுள்ளது. சென்னை - புதுவை தடத்தில் சுற்றுலா ரெயில் இயக்குவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுச்சேரி:
தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் காமராஜரின் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் எழிலரசி தலமை தாங்கினார். பள்ளியின் மேலாண் இயக்குனர் டாக்டர் கிரண்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், வில்லியம் ரிச்சர்ட், பா.ஜனதா ஓ.பி.சி. அணி கிருஷ்ணராஜ், தொழிலதிபர் முருகன், சீனிவாச மூர்த்தி, சமூக சேவகி பிரியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர்.
விழாவினை முன்னிட்டு மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள் நடத்தப் பட்டது. வெற்றி பெற்றவர்க ளுக்கு சிறப்பு விருந்தி னர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.முடிவில் தலைமை ஆசிரியை உமா நன்றி கூறினார்.
விழா விற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்தி ருந்தனர்.
- தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
- வம்பா கீரப்பாளையத்தை சேர்ந்த திவ்யகுமரன் 32 என்பவரை ரெட்டியார் பாளையம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை மேட்டுப்பாளையத்தில் தனியார் மதுபானக்கடை அருகே ஒரு வாலிபர் குடிபோதையில் நின்று கொண்டு அவ்வழியே செல்லும் பொதுமக்களுக்கு இடையூராக அறுவரு க்கத்தக்க வார்த்தைகளால் பேசி ரகளை செய்து கொண்டிருந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் தமிழ்நாடு மேல்மருவத்தூர் பகுதியை சேர்ந்த ஹரிதாஸ் வயது 33 என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் பூமியான் பேட்டை நடேசன் நகர் பகுதியில் பொது இடத்தில் ரகளை செய்த வம்பா கீரப்பாளையத்தை சேர்ந்த திவ்யகுமரன் 32 என்பவரை ரெட்டியார் பாளையம் போலீசார் கைது செய்தனர்.
- தங்கசாமி படகில் ஓரம் நின்றிருந்த போது தவறி கடலில் விழுந்து விட்டார்.
- மீனவர்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணி தொடர்கிறது.
புதுச்சேரி:
காரைக்கால் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14-ந்தேதி பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 15 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது, நாகப்பட்டினம் நம்பியார் நகரை சேர்ந்த தங்க சாமி என்பவர், படகில் ஓரம் நின்றிருந்த போது தவறி கடலில் விழுந்து விட்டார்.
சக மீனவர்கள் கடலில் குதித்து தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து படகில் இருந்தவர்கள் பிற மீனவர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக கூடுதல் படகுகளில் மீனவர்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணி தொடர்கிறது.
- 'ஆபரேஷன் விடியல்' என்கிற அதிரடி சோதனையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
- 10-க்கும் மேற்பட்ட வீச்சரிவாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
சேதராப்பட்டு:
புதுச்சேரியில் கஞ்சா விற்பனை மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 'ஆபரேஷன் விடியல்' என்கிற அதிரடி சோதனையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வில்லியனூர் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கொலை, கொள்ளை, திருட்டு வழிப்பறி, கஞ்சா விற்பனை போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.
அதனை தடுக்க போலீசார் பல்வேறு வழிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குற்ற சம்பவங்களில் ஈடுபட பதுங்கி இருந்த பல்வேறு குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுவை சட்டம் ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரசைதன்யா தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு வம்சீரதரெட்டி, வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலயன், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் வில்லியனூர், மங்கலம் போலீசார் இன்று அதிகாலை கரிக் கலாம்பாக்கம், கோர்க்காடு உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளின் வீடுகளில் அதிரடி சோதனை மேற் கொண்டனர்.
மேலும் குற்றவாளிகளின் வீடுகளில் கஞ்சா, ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை செய்தனர். அப்போது ரவுடிகளின் வீடுகள் மற்றும் வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வீச்சரிவாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து சென்றனர்.
- புதுவை விவசாயிகள் தவிப்பு
- இதில் விவசாயிகள் அறுவடை செய்யும் காய்கறி, கீரை உள்ளிட்ட விளை பொருட்களை நகரப் பகுதிக்கு கொண்டு செல்ல வசதியாக இருந்தது.
புதுச்சேரி:
புதுவை அரசின் பி.ஆர்.டி.சி., பஸ்கள் நகரம் மட்டு மின்றி கிராமங்களுக்கு இயக்கப்படுகின்றன.
சமீபகாலமாக பி.ஆர்.டி.சி.யின் கிராமப்புற பஸ்களின் எண்ணிக்கை குறைந்துள்ள தோடு, அதிகாலையில் கிராமங்களில் இருந்து புதுச்சேரி நகருக்கு வரும் சேவை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
திருக்கனுார், கரையாம்புத்துார், மடுகரை, பாகூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் வரும் பி.ஆர்.டி.சி., பஸ்கள் அங்கேயே தங்கிவிடும். அதிகாலை 4 மணி முதல் கிராமங்களில் இருந்து புதுவை நகரப் பகுதிக்கு பஸ்கள் புற ப்படும். இதில் விவசாயிகள் அறுவடை செய்யும் காய்கறி, கீரை உள்ளிட்ட விளை பொருட்களை நகரப் பகுதிக்கு கொண்டு செல்ல வசதியாக இருந்தது.
தற்போது, பி.ஆர்.டி.சி.பஸ்களின் அதிகாலை சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேறு வழியின்றி விளை பொருட்களை வேன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் நகரப் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
பி.ஆர்.டி.சி. பஸ்கள் இயக்கப்படா தது விவசாயிகளுக்கு சிரமமாக உள்ளது. மீண்டும் கிராமங்களில் இருந்து நகரப் பகுதிக்கு பி.ஆர்.டி.சி., பஸ்களை இயக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விடுதியில் விபசார தொழில் நடப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
- விபசார தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை ரெயின்போ நகரில் சமீபத்தில் ஒரு வீட்டை தங்கும் விடுதியாக மாற்றப்பட்டு இருந்தது.
அந்த விடுதிக்கு பெண்களும், ஆண்களும் வந்து போவதுமாக இருந்தனர். இதனால் அந்த விடுதியில் விபச்சாரம் நடக்கலாம் என அப்பகுதி மக்கள் பெரிய கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று இரவு அந்த விடுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த விடுதியில் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் இருந்தனர்.
விடுதி அறைகளில் விபசார தொழிலுக்கு பயன்படுத்தும் காண்டங்களும் இருந்தன. இதனால் அந்த விடுதியில் விபசார தொழில் நடப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து அங்கிருந்த 2 ஆண்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்களில் ஒருவர் திண்டிவனம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (62) விடுதி மேலாளராகவும் மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண் என்ற அருண்குமார் விபசார புரோக்கராக இருந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் விபசார தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் கல்வித் துறை சார்பில் காமராஜர் பிறந்த நாள் மாணவர் தினமாக கொண்டாடப்படுகிறது.
புதுவை கிழக்கு கடற்கலை சாலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தில் மாணவர் தினம் நடத்தப்பட்டது.
இந்த அரங்கிற்கு 6 ஏ.சி. எந்திரங்களில் 3 மட்டுமே இயங்கியது. ஏற்கனவே, வெயில் அதிகமாக இருந்ததாலும் அரங்கத்தில் புழுக்கம் அதிகமாகியது. மேடையில் இருந்த கவர்னர், முதல்-அமைச்சர், சபாநாயகர், கல்வி அமைச்சர் ஆகியோர் புழக்கத்தில் அவதிப்பட்டனர்.
அவர்களுக்கு புழுக்கத்தை சமாளிக்க மின்விசிறி வைக்கப்பட்டது. ஆனால் அரங்கத்தில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும், கலை நிகழ்ச்சிக்காக அலங்கார உடையுடன் பங்கேற்ற குழந்தைகளும் இருந்தனர்.
குளிரூட்டப்பட்ட அரங்கம் என்பதால் வெளியில் இருந்து காற்று உள்ளே வர முடியாதபடி அமைக்கப்பட்டிருந்தது. இதனால் விழாவில் பங்கேற்ற அனைவரும் 2 மணி நேரமாக கடுமையான புழுக்கத்தில் அவதிப்பட்டனர்.
இதனை பார்த்த முதல்-அமைச்சர் உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரியை வரும்படி தனது பாதுகாப்பு அதிகாரி மூலம் அழைத்தார். உடனடியாக அங்கு வந்த பொதுபணிதுறை அதிகாரியிடம் முதல் -அமைச்சர் ரங்கசாமி அரசு விழாவிற்கு முன்னதாக இதெல்லாம் சோதனை செய்ய மாட்டீர்களா..? என கடிந்து கொண்டார்.
புதுவையை பொறுத்தவரை கவர்னர், முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழாக்களில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்பாகவே வந்து அரங்கத்தை சோதனை செயவது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டலில் ஒவ்வொரு அறையாக சோதித்தனர்.
- இருவரும் வீடியோ பதிவான ஹார்டிஸ்க்கை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது
அழகான கடற்கரையை கொண்ட புதுச்சேரி சுற்றுலாவுக்கு பெயர் போனது. வார இறுதி நாட்களில் சென்னை, பெங்களூர் உள்பட தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் சுற்றுலாவுக்கு வருவது வழக்கம்.
அவர்கள் ஓட்டலில் அறை எடுத்து தங்கி பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று வருவார்கள்.
புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள தங்கும் விடுதிக்கு அதே ஊரை சேர்ந்த இளம் ஜோடி ஒன்று சென்றுள்ளது. கடந்த வாரம் காலை 11 மணிக்கு அறை எடுத்து தங்கி உள்ளனர்.
அப்போது ஓட்டல் அறையில் சிவப்பு நிற விளக்கு ஒன்று மின்னி மறைவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
படுக்கைக்கு எதிரில் இருந்த டி.வி.க்கு அருகில் கேபிள் இணைப்புக்கான பிளக் பாயிண்டில் இருந்து இந்த சிவப்பு லைட் எரிவதை கண்டு பிடித்தனர்.
இதையடுத்து வெளியில் சென்று ஸ்குரூடிரைவர் வாங்கி வந்து அந்த பிளக் போர்டை கழட்டி பார்த்தனர். அப்போது அதன் உள்ளே சிறிய அளவிலான ரகசிய கேமிரா மறைத்து வைக்கப்பட்டிருந்த தெரியவந்தது.
அது இயங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜோடி இதனை வீடியோவாக பதிவு செய்து ஓட்டல் நிர்வாகத்திடம் கூறினர்.
ஆனால் அவர்கள் இதனை கண்டு கொள்ளாததால் தங்கள் வீடுகளுக்கு சென்று நடந்ததை உறவினர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் உருளையன் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டலில் ஒவ்வொரு அறையாக சோதித்தனர். அப்போது மேலும் 3 அறைகளில் இது போன்று கேமிரா வைக்கப்பட்டி ருந்தது தெரியவந்தது.
தேங்காய்த்திட்டு மற்றும் அரியாங்குப்பத்தை சேர்ந்த 2 பேர் அங்கு வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்கள் 2 பேர்தான் இந்த விபரீத செயலில் ஈடுபட்ட தாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்கள் இருவரும் வீடியோ பதிவான ஹார்டிஸ்க்கை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது
இதையடுத்து விடுதியின் உரிமையாளர் இளைய ஆழ்வார், ஓட்டல் பொறுப்பாளர் இருதயராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் புதுச்சேரி ஓட்டல்களில் தங்குகின்ற சுற்றுலா பயணிகளிடம் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பத்மஸ்ரீ நிறுவனம் வழங்கியது
- பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பெயிண்டர்களின் குழந்தைகளை தேர்வு செய்து ஆண்டு தோறும் 12 பேருக்கு தலா 10 ஆயிரம் வீதம் ரொக்கப்பரிசு வழங்கி வருகிறது.
புதுச்சேரி:
மதுரையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பத்மஸ்ரீ என்ற நிறுவனம் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுவை மாநிலங்களில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் தரமான பெயிண்ட் பிரஷ், ரோலர், மற்றும் ஓவிய பிரஷ்களை விற்பனை செய்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிறுவனம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பெயிண்டர்களின் குழந்தைகளை தேர்வு செய்து ஆண்டு தோறும் 12 பேருக்கு தலா 10 ஆயிரம் வீதம் ரொக்கப்பரிசு வழங்கி வருகிறது.
அதுபோல் இந்த ஆண்டு பிளஸ் -2 தேர்வில் 600-க்கு559 மதிப்பெண் பெற்ற புதுவை முத்தியால் பேட்டையை சேர்ந்த பெயிண்டர் ரங்கநாதன் என்பவரின் மகள் விஜயலட்சுமிக்கு ரூ. 10 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
இத்தொகையை புதுவை முத்தியால் பேட்டையில் அமைந்துள்ள ப்ளூ எண்டர்பிரைசஸ் உரிமையாளர் கோபால கிருஷ்ணன், பத்மஸ்ரீ நிறுவனத்தின் மேலாளர் சீனுவாசன் மற்றும் புதுவை முகவர் சிவராமன் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட பெயிண்டர்கள் கலந்து கொண்டனர்.
- மக்கள் விரும்பும் திட்டங்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைக்க வில்லை என புகார்
- இது போல் பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்று தெரிவித்தார்.
புதுச்சேரி:
ஸ்மார்ட் சிட்டி திட்ட சிறப்பு ஆலோசனை கூட்டம் புதுவை கடற்கரை சாலை பழைய கோர்ட்டு வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரி மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற கென்னடி எம்.எல்.ஏ. தனது தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட வில்லை. ஆட்டுப்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டம் குறித்து கோப்புகள் அனுப்பப்பட்டிருந்த நிலையில் திடீரென அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது என கூறி வெளிநடப்பு செய்தார்.
உடனே அதிகாரிகள் அவரை சமாதானம் செய்தனர். இதனை தொடர்ந்து பேசிய கென்னடி எம்.எல்.ஏ. மக்கள் வேண்டும் என்று கேட்கும் திட்டங்களை கொண்டு வராமல் மக்கள் எதிர்க்கும் திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்துவது வேடிக்கையாக உள்ளது.
பிரான்சுவா தோப்பில் நவீன கழிவறை கட்ட பூமி பூஜை நடத்தப்பட்டும் அதற்கான பணிகள் நடைபெறவில்லை. அதுபோல் திப்புராயபேட்டையில் நவீன மின் தகன மையம் அமைக்கும் பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இது போல் பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்று தெரிவித்தார்.
இதனையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரி மணிகண்டன் பேசும் போது ஓட்டு போட்ட மக்களுக்கு பதில் அளிக்க வேண்டியதும் அவர்களுக்கு பணி செய்வதும் எம்.எல்.ஏ.க்களின் கடமையாகும். எனவே எம்.எல்.ஏ.க்கள் சுட்டிக்காட்டிய பணிகளை அதிகாரிகள் விரைந்து முடித்துத்தரவேண்டும் என்றார்.
- பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
- புதுச்சேரி மாநில கோஜுரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினர்களாக பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் பாரதி, பேரவை அமைப்பாளரும் கவியரசு கண்ணதாசன் மற்றும் இலக்கிய கழக நிறுவனரும், தீந்தமிழ் தென்றல், வக்கீல் கோவிந்தராசு ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.
இதில் சிறப்பு விருந் தினராக டாக்டர் ரத்தினவேல் காமராஜ் கலந்துகொண்டு மாணவர்களின் கலை நிகழ்ச் சிகளை கண்டு களித்தார். புதுச்சேரி மாநில கோஜுரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், துணை முதல்வர் வினோலியா டேனியல் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் கள் செய்திருந்தனர்.






