search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seizure of weapons"

    • 'ஆபரேஷன் விடியல்' என்கிற அதிரடி சோதனையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
    • 10-க்கும் மேற்பட்ட வீச்சரிவாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    சேதராப்பட்டு:

    புதுச்சேரியில் கஞ்சா விற்பனை மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 'ஆபரேஷன் விடியல்' என்கிற அதிரடி சோதனையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக வில்லியனூர் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கொலை, கொள்ளை, திருட்டு வழிப்பறி, கஞ்சா விற்பனை போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

    அதனை தடுக்க போலீசார் பல்வேறு வழிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குற்ற சம்பவங்களில் ஈடுபட பதுங்கி இருந்த பல்வேறு குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் புதுவை சட்டம் ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரசைதன்யா தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு வம்சீரதரெட்டி, வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலயன், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் வில்லியனூர், மங்கலம் போலீசார் இன்று அதிகாலை கரிக் கலாம்பாக்கம், கோர்க்காடு உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளின் வீடுகளில் அதிரடி சோதனை மேற் கொண்டனர்.

    மேலும் குற்றவாளிகளின் வீடுகளில் கஞ்சா, ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை செய்தனர். அப்போது ரவுடிகளின் வீடுகள் மற்றும் வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வீச்சரிவாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    இதனை தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து சென்றனர்.

    ×