என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PRTC buses"

    • புதுவை விவசாயிகள் தவிப்பு
    • இதில் விவசாயிகள் அறுவடை செய்யும் காய்கறி, கீரை உள்ளிட்ட விளை பொருட்களை நகரப் பகுதிக்கு கொண்டு செல்ல வசதியாக இருந்தது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் பி.ஆர்.டி.சி., பஸ்கள் நகரம் மட்டு மின்றி கிராமங்களுக்கு இயக்கப்படுகின்றன.

     சமீபகாலமாக பி.ஆர்.டி.சி.யின் கிராமப்புற பஸ்களின் எண்ணிக்கை குறைந்துள்ள தோடு, அதிகாலையில் கிராமங்களில் இருந்து புதுச்சேரி நகருக்கு வரும் சேவை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.

    திருக்கனுார், கரையாம்புத்துார், மடுகரை, பாகூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் வரும் பி.ஆர்.டி.சி., பஸ்கள் அங்கேயே தங்கிவிடும். அதிகாலை 4 மணி முதல் கிராமங்களில் இருந்து புதுவை நகரப் பகுதிக்கு பஸ்கள் புற ப்படும். இதில் விவசாயிகள் அறுவடை செய்யும் காய்கறி, கீரை உள்ளிட்ட விளை பொருட்களை நகரப் பகுதிக்கு கொண்டு செல்ல வசதியாக இருந்தது.

    தற்போது, பி.ஆர்.டி.சி.பஸ்களின் அதிகாலை சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேறு வழியின்றி விளை பொருட்களை வேன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் நகரப் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

    பி.ஆர்.டி.சி. பஸ்கள் இயக்கப்படா தது விவசாயிகளுக்கு சிரமமாக உள்ளது. மீண்டும் கிராமங்களில் இருந்து நகரப் பகுதிக்கு பி.ஆர்.டி.சி., பஸ்களை இயக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×