என் மலர்
புதுச்சேரி
- பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
- புதுச்சேரி மாநில கோஜுரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினர்களாக பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் பாரதி, பேரவை அமைப்பாளரும் கவியரசு கண்ணதாசன் மற்றும் இலக்கிய கழக நிறுவனரும், தீந்தமிழ் தென்றல், வக்கீல் கோவிந்தராசு ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.
இதில் சிறப்பு விருந் தினராக டாக்டர் ரத்தினவேல் காமராஜ் கலந்துகொண்டு மாணவர்களின் கலை நிகழ்ச் சிகளை கண்டு களித்தார். புதுச்சேரி மாநில கோஜுரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், துணை முதல்வர் வினோலியா டேனியல் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் கள் செய்திருந்தனர்.
- தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 குறித்தான ஒரு நாள் பயிற்சி வகுப்பு மனித உரிமைகள் படிப்பகத்தில் நடைபெற்றது.
- பங்கேற்பாளர்களாக பல்வேறு இயக்கங்கள், கட்சிகளின் சார்பில் பலர் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சோசியல் விஷன் இணைந்து தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 குறித்தான ஒரு நாள் பயிற்சி வகுப்பு மனித உரிமைகள் படிப்பகத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்து பயிற்சிகளும், குடிமகன்கள் அனைவரும் அதிகாரம் படைத்தவர்கள் மற்றும் ஆர்.டி.ஐ. சட்டம் குறித்தான சிறப்பு வகுப்பு அளிக்கப்பட்டது.
இப்பயிற்சி வகுப்புக்கு பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். சோசியல் விஷன் தலைவர் ஆசீர் ஆர்.டி.ஐ. சட்டம் குறித்தான பயிற்சிகளை அளித்தார். பங்கேற்பாளர்களாக பல்வேறு இயக்கங்கள், கட்சிகளின் சார்பில் பலர் பங்கேற்றனர்.
மேலும் மனித உரிமைகள் மற்றும் நுகர்வேர் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கோபிநாதன், கண்ணன், ராஜா, சிவா, செல்வம் மோரிஸ், கந்தசாமி, சிவபாலன், சூரியமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
- லட்சுமி மற்றும் கோவிந்தம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
- விபத்து குறித்து கோட்டகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதராப்பட்டு:
புதுச்சேரி அடுத்த தமிழகப்பகுதியான கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலையையொட்டி புதுக்குப்பம் மீனவ கிராமம் உள்ளது.
இப்பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரம் செய்யும் மீனவ பெண்கள் புதுச்சேரியில் மீன்களை மொத்தமாக வாங்கி வந்து கிராமப் பகுதியில் விற்பனை செய்வது வழக்கம்.
அதுபோல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீன்கள் அதிகம் விற்பனையாகும் என்பதால் புதுச்சேரிக்கு மீன் வாங்க அதிகாலை புதுக்குப்பம் மீனவ பெண்கள் லட்சுமி(45), கோவிந்தம்மாள்(50) நாயகம், கமலம், கெங்கையம்மாள்,பிரேமா ஆகிய 6 பேர் ஆட்டோவுக்காக கிழக்கு கடற்கரை சாலையோரம் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வேகமாக வந்த சொகுசு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த 6 பெண்கள் மீது மோதியது.
இதில் லட்சுமி மற்றும் கோவிந்தம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மற்ற 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கனக செட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கெங்கையம்மாள் (வயது 45) பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. காயமடைந்த மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் கார் கவிழ்ந்து நொறுங்கியது. காரை ஓட்டிவந்த சென்னையை சேர்ந்த டிரைவர் விக்னேஸ்வரன், மற்றும் காரில் பயணம் செய்த கவுதம், சேது, பிரசாந்த், திரிஷா,ஆகிய 5 பேர் புதுச்சேரி தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து கோட்டகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
+2
- நான் எனக்கு விருப்பமானதை சொல்வேன். கேட்டால் கேட்கட்டும். கேட்காமல் போகட்டும் என்றார்.
- படிப்பதற்கு யார் உதவி செய்தாலும் அதை நான் பாராட்டுவேன்.
புதுச்சேரி:
புதுவை கல்வித்துறை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா மாணவர் தின விழாவாக கொண்டாடப்பட்டது.
காமராஜர் கல்வி வளாகத்தில் நடந்த விழாவில் கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பேசுகையில், நடிப்பவர்கள் கூட படிப்பை சொல்லி கொடுத்தால் தான் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற முடியும் என உணர்ந்து இருப்பது பாராட்டுக்குரியது என்றார்.
விழா முடிவில் கவர்னர் தமிழிசையிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது கவர்னர் பதவியை ராஜினாமா செய்து அரசியல் செய்யுங்கள் என புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் கூறியுள்ளாரே? என கேட்டதற்கு, பேச்சு உரிமை என்பது அனைவருக்கும் உண்டு. நான் எவ்வளவு பேச வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் முடிவு செய்ய முடியாது.
அவர் சொல்வதை அவரது கட்சிக்காரர்களே கேட்கமாட்டார்கள். நான் எனக்கு விருப்பமானதை சொல்வேன். கேட்டால் கேட்கட்டும். கேட்காமல் போகட்டும் என்றார்.
மாணவர்களுக்கு நடிகர் விஜய் உதவி செய்கிறாரே. இதை அரசியலில் எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டதற்கு, இதை அரசியலாக பார்க்கவில்லை. படிப்பதற்கு யார் உதவி செய்தாலும் அதை நான் பாராட்டுவேன். நடிப்பவர்கள் கூட படிப்பவர்களுக்கு படிப்பை சொல்லிக் கொடுத்தால் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற முடியும் என நினைக்கிறார்கள்.
சமுதாயத்தில் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதை நான் பாராட்டுகிறேன். யாராக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் எதிர் கொள்கையில் உள்ளவர்களாக இருந்தாலும் படிப்புக்கு உதவி செய்தால் பாராட்டுவேன். அதில் உள்நோக்கம் இல்லை என்றார்.
- இருதய அறுவை சிகிச்சை தொழில்நுட்பவியலாளர் ஸ்ரீ வர்த்தினி பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினர்.
- கருத்தரங்கின்போது கரு ரத்த ஓட்ட சுழற்சி குறித்த விழிப்புணர்வு காணொளியும் வெளியிடப்பட்டது.
புதுச்சேரி:
விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி வளாகம் மற்றும் சென்னை ஆறுபடைவீடு தொழில் நுட்பக் கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளின் இருதய சிகிச்சை மற்றும் இருதய அறுவை சிகிச்சை தொழில்நுட்ப பிரிவின் மூலம் "இருதய அறுவை சிகிச்சை தொழில்நுட்ப முறைகள்" என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடத்தப்பட்டது.
கருத்தரங்கிற்கு துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக விநாயகாமிஷன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர். சுதீர் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக பெங்களூரு பி.ஜி. எஸ் குளோபல் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் மூத்த விரிவுரையாளர் ஜினோவா ஜேம்ஸ், சப்தகிரி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மூத்த விரிவுரையாளர் ஜான் பீட்டர் பேட்ரிக், அபுதாபின் அல் ஹலி மருத்துவமனை மூத்த இருதய சிகிச்சை பிரிவு தொழில்நுட்பவியலாளர் பசலர் ரஹ்மான், சென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விரிவுரையாளர் பிரியங்கா மற்றும் பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை தொழில்நுட்பவியலாளர் ஸ்ரீ வர்த்தினி பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து செயல்முறை விளக்கப் பயிற்சியும் நடத்தப்பட்டது மேலும் மாணவர்களுக்கிடையே படவிளக்க காட்சி ஆராய்ச்சி கட்டுரை விளக்கம் சார்ந்த போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் முடிவில் இருதய சிகிச்சை பிரிவு மற்றும் இருதய அறுவை சிகிச்சை பிரிவை சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து துறையின் நுன்கலை அமைப்பிற்கு அன்பளிப்பினை வழங்கினர். மேலும் கருத்தரங்கின்போது கரு ரத்த ஓட்ட சுழற்சி குறித்த விழிப்புணர்வு காணொளியும் வெளியிடப்பட்டது
இதற்கான ஏற்பாட்டிகளை துறையின் இருதய சிகிச்சை பிரிவு மற்றும் இருதய அறுவை சிகிச்சை பிரிவு உதவி பேராசிரியர்கள் சுபாஷினி, அட்சயா, சுஷ்மிதா, தாமினி, சிவரஞ்சனி, ராகுல், ஆயிஷா ஆகியோர் செய்திருந்தனர்.
- பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், அசோக்பாபு மற்றும் நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.
- திராவிடர் கழக தலைவர் சிவவீரமணி தலைமையிலும் நிர்வாகிகள் காமராஜ் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி:
மறைந்த தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அண்ணாசாலை-காமராஜர் சாலை சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி. ரமேஷ், ஏ.கேடி. ஆறுமுகம், பாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவ ருமான ரங்கசாமி அலங்க ரித்து வைக்கப்பட்ட உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் எம்.எல்.ஏ.க் கள் ஜான்குமார், அசோக்பாபு மற்றும் நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் காங்கிரசார் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் முன்னனாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திநாதன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீலகங்காதரன், அனந்த ராமன், பொதுச்செயலாளர் தனுஷ், சாமிநாதன், கருணா நிதி, மகிளா காங்கிரஸ் தலைவி பஞ்சகாந்தி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன், சேவாதள தலைவர் குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமையிலும், புதிய நீதி கட்சி மாநில தலைவர் பொன்னுரங்கம் தலைமையிலும், திராவிடர் கழக தலைவர் சிவவீரமணி தலைமையிலும் நிர்வாகிகள் காமராஜ் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.
- வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- செந்தில் என்ற குமாரவேலு மற்றும் மூர்த்தி, மோகன், லூர்து சாமி, ழிபேர், உமா, சரளா, மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
காமராஜர் பிறந்தநாளையொட்டி புதுவை அ.ம.மு.க.சார்பில் அவரது சிலைக்கு தெற்கு மாநில செயலாளர் யூ.சி.ஆறுமுகம் மற்றும் வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், மாநில இணைச்செயலாளர் லாவண்யா, முத்தியால் பேட்டை பூக்கடை ராஜா, தொழிற்சங்கம் சுரேஷ், ஜெ.பேரவை காண்டீபன், எம்.ஜி.ஆர். மன்றம் சீத்தாராமன், இலக்கிய அணி செயலாளர் பாலு, சிறுபான்மை அணி செயலாளர் ஜான்சன், மாணவர் அணி செயலாளர் ஜெகதீஷ், மற்றும் தொகுதி செயலாளர்கள் தனவேல், செல்லா என்ற தமிழ்ச்செல்வன், பருதிமான் கலைஞர் கலியபெருமாள், ஏம்பலம் முருகன், ராமச்சந்திரன், செந்தில் என்ற குமாரவேலு மற்றும் மூர்த்தி, மோகன், லூர்து சாமி, ழிபேர், உமா, சரளா, மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிறப்பு விருந்தினராக பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா கலந்துகொண்டனர்.
- விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் காமராஜரின் வாழக்கை தத்துவத்தை வெளிப்படுத்தும் வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை செல்லபெரு மாள் பேட்டையில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் கர்ம வீரர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கீதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா கலந்துகொண்டு காமராஜரின் திருஉருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.
விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் காமராஜரின் வாழக்கை தத்துவத்தை வெளிப்படுத்தும் வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது.
- இந்திய ஜனநாயகம் காப்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? மன்னர் ஆட்சியா? என தெரியவில்லை.
- எடப்பாடியார் தலைமையில் அமையும் கூட்டணி புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உப்பளம் கட்சி அலுவலகத்தில் நடந்தது
மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தரன். கூட்டத்தில் அன்பழகன் பேசியதாவது:-
பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு அமலாக்கதுறை செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுத்தது சரி என உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்மூலம் இந்திய ஜனநாயகம் காப்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? மன்னர் ஆட்சியா? என தெரியவில்லை.
இவர்களுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை புகுந்துவார்கள். எடப்பாடியார் தலைமையில் அமையும் கூட்டணி புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில இணை செயலாளர் கணேசன், துணை தலைவர் ராஜாராமன், மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், துணைச் செயலாளர்கள் நாகமணி, கிருஷ்ணமூர்த்தி, காந்தி, மாநில மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலர் பாப்புசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம், நகர தலைவர்கள் செல்வகுமார், சிவா, கணேஷ், தொகுதி செயலா ளர்கள் பொன்னுசாமி, பாஸ்கர், கருணாநிதி, ராஜா, சிவகுமார், ஆறுமுகம், கிருஷ்ணன், கமல்தாஸ், வேலவன், கோபால், குணசேகரன், சண்முகதாஸ், மாநில எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் மோகன்தாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- நீச்சல் குளத்தில் குளித்தபோது பிரபாகரனுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது.
- புகாரின் பேரில் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வானூர்:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 35). சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணி செய்து வந்தார். இவரது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து புதுவைக்கு சுற்றுலா வந்தார். புதுவையை சுற்றிப்பார்த்துவிட்டு நேற்று இரவு வானூர் அடுத்த மொரட்டாண்டிக்கு வந்து தனியார் விடுதியில் தங்கினர்.
அங்கிருந்த நீச்சல் குளத்தில் குளித்தபோது பிரபாகரனுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதனால் பிரபாகரனை அவரது நண்பர்கள் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி பிரபாகரன் இறந்து போனார்.
இது குறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஒருவரிடம் ஏமாந்து, புகார் கொடுக்க சென்ற என்னிடம் சப்-இன்ஸ்பெக்டரே ஏமாற்றியதை எண்ணி மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன்.
- சென்னையில் உள்ளவருக்கு கொடுத்து ஏமாந்தது போல இல்லாமல், தன் மூலம் கொடுத்தால் பணம் உறுதியாக திரும்ப கிடைக்கும் என்றார்.
புதுச்சேரி:
புதுவை நெல்லித் தோப்பை சேர்ந்தவர் பாலாஜி( 54). இவர் போலீஸ்டி.ஜி.பி.யிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் பொதுப்பணி த்து றையில் வேலை செய்து வருகிறேன். என்னிடம் ரூ.5 லட்சம் பெற்று திருப்பித்தராமல் சென்னையை சேர்ந்தவர் ஏமாற்றி வந்தார். கடந்த மார்ச் மாதம் உருளை யன்பேட்டை போலீஸ் நிலையம் சென்று சப்-இன்ஸ்பெ க்டர் சந்திரசே கரிடம் புகார் கூறினேன். அவர் இந்த புகார் குறித்து விசாரித்த போது எனக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது சப்-இன்ஸ்பெ க்டர் சந்திரசேகர், தனக்கு இரிடியம் வியாபாரம் செய்யும் கும்ப லோடு பழக்கம் உள்ளது. அவர்கள் வியாபாரம் முடிந்து பெரும் தொகைக்கு காத்திரு க்கின்றனர். சென்னையில் உள்ளவருக்கு கொடுத்து ஏமாந்தது போல இல்லாமல், தன் மூலம் கொடுத்தால் பணம் உறுதியாக திரும்ப கிடைக்கும் என்றார்.
மேலும் ரூ.30 ஆயிரம் மட்டும் கொடுத்தால்போதும் என்றார். இதை நம்பி ரூ.30 ஆயிரம் கொடுத்தேன். சட்டசபை கூட்டத்தொடர் பணி இருப்பதால் அதன்பின் சென்னை சென்று பணத்தை பெற்று வரலாம் என தெரிவித்தார். ஆனால் சட்டசபை கூட்ட த்தொடருக்கு பின் என் அழைப்பை ஏற்கவில்லை.
சென்னை பண விவகாரத்தை நானே பார்த்துக்கொள்கிறேன். நான் அளித்த ரூ.30 ஆயிரத்தை திருப்பித்தரும்படி கேட்டேன். ஆனால் இன்றுவரை திருப்பித்தரவில்லை. ஒருவரிடம் ஏமாந்து, புகார் கொடுக்க சென்ற என்னிடம் சப்-இன்ஸ்பெக்டரே ஏமாற்றியதை எண்ணி மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன்.
இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் இதன் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திருப்பித்தர நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் குறித்து துறைரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- நிதி நெருக்கடியால் பெரியளவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.
- கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். மாநிலத்தில் 68 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
நிதி நெருக்கடியால் பெரியளவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.
இதனால் சிறியளவில் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. குஜராத் மாநிலம் பாவ் நகரில் உள்ள மத்திய உப்பு மற்றும் கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனத்துடன் புதுவை அரசு இணைந்து செயல்பட உள்ளது.
இந்த நிறுவனக் குழுவினர் விரைவில் புதுவைக்கு வந்து தொழில்நுட்ப சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் ஒரு எம்.எல்.டி. குடிநீர் கிடைக்கும். இந்த திட்டத்துக்கு ரூ.25 கோடி செலவாகும். புதுவை கடற்கரையோரம் 2 ½ ஏக்கர் பரப்பில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். மாநிலத்தில் 68 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் கிடைக்கும் நீர் முதல்கட்டமாக 24 சுத்திகரிப்பு நிலையம் மூலம் வழ ங்கப்படும். இதன்மூலம் ஒரு லட்சத்து 78 ஆயிரம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.






