என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
    X

    லாஸ்பேட்டை விவேகானந்த மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.

    விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா

    • சிறப்பு விருந்தினராக பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா கலந்துகொண்டனர்.
    • விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் காமராஜரின் வாழக்கை தத்துவத்தை வெளிப்படுத்தும் வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை செல்லபெரு மாள் பேட்டையில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் கர்ம வீரர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கீதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா கலந்துகொண்டு காமராஜரின் திருஉருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.

    விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் காமராஜரின் வாழக்கை தத்துவத்தை வெளிப்படுத்தும் வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது.

    Next Story
    ×