என் மலர்
புதுச்சேரி
- மாவட்ட தலைவர்கள் கலியபெருமாள், தமிழ்மணி, பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- திருக்கனூர் லயன்ஸ் சங்கத் தலைவர் அசார் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் உள்ள தேருக்கு புதிதாக மேற்கூரை அமைக்க திருக்கனூர் லயன்ஸ் சங்கம் சார்பில் ரூ.75 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு திருக்கனூர் லயன்ஸ் சங்கத் தலைவர் அசார் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர்கள் கலியபெருமாள், தமிழ்மணி, பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திருக்கனூர் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சையது, ரங்கநாதன், கோவிந்தன், தெய்வகுமார், லோகேஸ்வரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
- பொதுப் பணித்துறை மூலம் சீரமைக்கப்பட்ட உள்ளது.
- உதவி பொறியாளர் பார்த்தசாரதி, இளநிலை பொறியாளர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி முதலியார்பேட்டை உழந்தை குடியிருப்பில் உள்ள டைப் 2 மற்றும் டைப் 3 வகை குடியிருப்பு கழிப்பறைகளில் கதவுகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் பழுதடைந்துள்ளது.
இதனை ரூ.14.99 லட்சம் மதிப்பில் பொதுப் பணித்துறை மூலம் சீரமைக்கப்பட்ட உள்ளது. இப்பணிகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தனது மனைவி ஜெசிந்தாவுடன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை செற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பார்த்தசாரதி, இளநிலை பொறியாளர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
- அனைத்து படிப்புக்குமான கல்வி கட்டண விவரங்களை சென்டாக் இணையதளத்தில் வெளியிட ஆவண செய்திட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில மாணவர்-பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா கவர்னருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய அளவிலான எம்.பி.பி.எஸ். கலந்தாய்வுக்கான தேதிகளை மருத்துவ கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது. ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் நிகர்நிலை பல்க லைக்கழகங்களில் உள்ள இடங்களுக்கு புதுவை மாநில மாணவர்கள் தாங்கள் பெற்ற நீட் மதிப்பெ ண் அடிப்படையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.
தற்போது சென்டாக் நிர்வாகம் மாணவர் சேர்க்கை க்கான விண்ணப்பங்களை பெற்று வரும் நிலையில் விண்ணப்பித்த அனை த்து மாணவர்களின் இருப்பிட, சாதி மற்றும் அனைத்து சான்றுகளையும் சரிபார்த்து மருத்துவம், பல்மருத்துவம், கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு இணையதள கலந்தாய்வினை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நடத்த வேண்டும்.
மேலும் புதுவை சுகாதாரத்துறை சென்டாக் மாணவர் சேர்க்கைக்கான இட விவரங்கள், அனைத்து படிப்புக்குமான கல்வி கட்டண விவரங்களை சென்டாக் இணையதளத்தில் வெளியிட ஆவண செய்திட வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
- இளைஞர் பாசறை மாநிலத்தலைவர் ஞானபிரகாசம், தொழிலாளர் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் ரமேஷ், செய்தி தொடர்பாளர் திருமுருகன் ஆகியோர் உரையாற்றினர்.
- எம்.எல்.ஏ.க்களை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி:
காமராஜர் நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் அவ்வை திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தொகுதி தலைவர் திவாகர், செயலாளர் ஜெகதீஷ் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், தமிழ் தேசியப் பேரியக்கத்தின் துணை பொதுச்செயலாளர் அருணாபாரதி, புதுவை மாநில செயலாளர் வேல்சாமி, கைவினைஞர்கள் வாழ்வுரிமை கட்சி பொதுச்செயலாளர் தனாளன், தமிழர்களம் அழகர், நாம் தமிழ் கட்சி பொருளாளர் இளங்கோ வன், மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவுரி, இளைஞர் பாசறை மாநிலத்தலைவர் ஞானபிரகாசம், தொழிலாளர் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் ரமேஷ், செய்தி தொடர்பாளர் திருமுருகன் ஆகியோர் உரையாற்றினர்.
காமாட்சியம்மன் கோவில் நிலத்தை போலி ஆவணங்களின் மூலம் அபகரித்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், மற்றும் மோசடிக்கு துணைநின்ற அரசு அதிகாரிகளை கைதுசெய்து சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்.
எம்.எல்.ஏ.க்களை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
- லதாவுடன் வந்த அவரது மதுவையும் கொலை செய்து விடுவதாக ஜெயக்குமார் மிரட்டினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை வம்பாகீரப் பாளையம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மது. இவரது மனைவி லதா (வயது36). இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் ஜெயக்குமாரு க்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் லதா தனது கணவருடன் அப்பகுதியில் உள்ள தனது தந்தைக்கு சாப்பாடு கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள மீன்மார்க்கெட் அருகே நின்றுக்கொண்டு மது குடித்துக்கொண்டிருந்த ஜெயக்குமார் திடீரென லதாவை வழிமறித்து உன்னை இங்கேயே அடித்து கொலை செய்து விடுவேன்.
மேலும் வெடிகுண்டும் வீசுவேன் என்று மிரட்டினார். அதோடு லதாவுடன் வந்த அவரது மதுவையும் கொலை செய்து விடுவதாக ஜெயக்குமார் மிரட்டினார்.
இதுகுறித்து லதா ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை தேடி வருகிறார்கள்.
- கடற்கரையில் 30 நிமிடம் நடந்த வாண வேடிக்கையை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
- வாண வெடிகள் குறைந்த உயரத்தில் வெடித்ததால் அதன் தீப்பொறிகள் அருகில் நின்றிருந்த பொது மக்கள் மீது விழுந்தது.
புதுச்சேரி:
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள பிரஞ்சு துணை துாதரகத்தில் தேசிய தின விழா கொண்டாடப்பட்டது.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரிக்கான பிரான்ஸ் துணை துாதர் லீஸ் தல்போ பரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவைத் தொடர்ந்து, இரவு வாண வெடி நிகழ்ச்சி நடந்தது. கடற்கரையில் 30 நிமிடம் நடந்த வாண வேடிக்கையை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
அப்போது, வாண வெடிகள் குறைந்த உயரத்தில் வெடித்ததால் அதன் தீப்பொறிகள் அருகில் நின்றிருந்த பொது மக்கள் மீது விழுந்தது. அதில் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் ஓம்கார் (வயது21) பூர்னடா(22) உப்பளம் நேதாஜி நகர் கணபதி(38) மற்றும் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ஆகிய 4 பேர்மீது வாணவெடி தீப்பொறி விழுந்ததில் அவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த 4 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இச்சம்பவத்தினால், கடற்கரை சாலையில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
- இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் ஓட்டல் அறையில் சோதனை நடத்தினர்
- குறிப்பிட்ட இடத்தில் ரகசிய கேமராவுடன் இணைந்த கேபிள் துண்டிக்கப்பட்டு இருந்தது.
புதுச்சேரி:
புதுவை 100 அடி சாலை ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள தனியார் ஓட்டலில், மூலக்குளத்தை சேர்ந்த வாலிபர், தனது காதலியுடன் அறை எடுத்து தங்கினார்.
அப்போது தங்கியிருந்த அறையில் எலக்ட்ரிக்கல் சுவிட்ச் பாக்ஸில், இன்டர்காம் தொலைபேசியை இணைக்கும் பிளக்பாயிண்டில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த ரகசிய கேமராவை கழற்றி எடுத்த ஜோடி, உடனடியாக அறையை காலி செய்தது. இது குறித்து ரெசிடென்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, சரியான பதில் கிடைக்காததால் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் ஓட்டல் அறையில் சோதனை நடத்தினர்.
அப்போது குறிப்பிட்ட இடத்தில் ரகசிய கேமராவுடன் இணைந்த கேபிள் துண்டிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், ஓட்டல் மேலாளர் தேங்காய்த்திட்டு வசந்த்நகரை சேர்ந்த ஆனந்த் (வயது25) மற்றும் ஓட்டல் ஊழியர் அரியாங்குப்பம் ஓடை வெளியை சேர்ந்த ரூம் பாய் ஆப்ரகாம் (22) ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 354 (சி)பெண்களை ஆபாசமாக படம் பிடித்தல், தகவல் தொழில் நுட்ப பிரிவு 66 (இ) ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்தல், கேபிள் மூலம் அனுப்புதல், தடயங்களை மறைத்தல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
மேலும் ஓட்டல் அறையில் தங்குபவர்களை ஆபாசமாக வீடியோ எடுக்க கேமரா மறைத்து வைத்துள்ளனரா அல்லது ரகசிய கேமரா காட்சிகளை நேரடியாக இணையதளம் வழியாக கண்டு ரசித்து வந்தனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- செய்முறை தேர்வில் மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
- பொறுத்துக்கொள்ள முடியாத மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்தவர் குமரன் (வயது 45). இவர் அப்பகுதியில் ஜெயபாலகோகுலம் வித்யாலயா மேல் நிலைப்பள்ளி என்ற பெயரில் பள்ளி நடத்தி வருகிறார்.
இந்த பள்ளியில் தொண்டமாநத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அப்பள்ளியில் பயிலும் பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு, சிறப்பு வகுப்பு என்ற பெயரில் பாலியல் ரீதியாக பள்ளி நிர்வாகி குமரன் தொடர்ந்து சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால் செய்முறை தேர்வில் மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு சிறப்பு வகுப்பின் போது பள்ளி நிறுவனர் குமரன், அம்மாணவிக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
இதையடுத்து அவரது பெற்றோர் வில்லியனூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வேலய்யன் போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து தலைமறைவான பள்ளி நிறுவனர் குமரனை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பெற்றோர்கள், அந்த பள்ளியில் தங்கள் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாக கூறி வேறு பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கிராமப்புறத்தில் பள்ளி நிறுவனரே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மூதாட்டியிடம் சென்று நாங்கள் ஆட்டின் அருகில் நின்று செல்பி எடுக்க விரும்புவதாக வாலிபர்கள் தெரிவித்தனர்.
- அதிர்ச்சி அடைந்த அந்த மூதாட்டி, திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரியை அடுத்த தமிழகப்பகுதியான கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு மெயின்ரோடு அருகே மூதாட்டி ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ஆட்டோவில் சென்ற வாலிபர்கள், அந்த மூதாட்டியிடம் சென்று, 'நாங்கள் ஆட்டின் அருகில் நின்று செல்பி எடுக்க விரும்புவதாக தெரிவித்தனர்.
அதற்கு அந்த மூதாட்டி ஒப்புக்கொண்டார். பின்னர் அந்த வாலிபர்கள் ஆட்டின் அருகில் நின்று செல்போனில் செல்பி எடுத்தனர்.
திடீரென்று அந்த வாலிபர்கள் ஒரு ஆட்டை திருடி ஆட்டோவில் கடத்திச்சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மூதாட்டி, திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
அவர்கள் ஆட்டோவை சிறிது தூரம் துரத்திச்சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் கோட்டக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் ஆடு திருடிய வாலிபர்களை பொதுமக்கள் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது27), ராகேஷ் பாபு (22). சந்தோஷ் (21), ஆனந்த் (22) உள்பட 5 பேர் என்பது தெரியவந்தது.
இவர்கள் ஆட்டோவில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து விட்டு மது போதையில் சென்னை திரும்பி செல்லும்போது செல்பி எடுப்பதுபோல் நடித்து ஆட்டை திருடியுள்ளனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் கடலூர் சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் இருந்து ஆட்டை மீட்ட போலீசார், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
- தேரோட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி சம்பத் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
- விழாவையொட்டி தினந்தோறும் சாமி வீதிவுலா இன்னிசை கச்சேரி மற்றும் தெருக்கூத்து நிகழ்ச்சிகள் நடக்கிறது.
புதுச்சேரி:
புதுவை நைனார் மண்டபத்தில் பிரசித்தி பெற்ற நாகமுத்து மாரியம்மன் மற்றும் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில்களில் ஓவ்வொரு ஆண்டும் செடல் திருவிழா விமர்சியாக நடைபெறும். இந்த ஆண்டு செடல் திருவிழா நேற்று காலை சக்தி கரக ஊர்வலத்துடன் தொடங்கியது. தொடந்து கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அழகப்பன், துணை தலைவர் கார்த்திகேயன், செயலாளர் ஏழுமலை, பொருளாளர் சுந்தரன், உறுப்பினர் லட்சுமணன் மற்றும் விழா உபயதாரர்கள், ஊர் பிரமுகர்கள் பா.ஜனதா கட்சி கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம் பா.ஜனதா தொகுதி தலைவர் இன்பசேகர், பொதுச்செயலாளர் விஜயகுமார், கிளைத்தலைவர் மணிகண்டன்,கூட்டுறவு பிரிவு செயற்குழு தலைவர் அசோக் குமார் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விழா வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான செயல் திருவிழா வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது.
அன்றுமாலை 4.30 மணிக்கு செடல் ஊர்வலமும் மாலை 5 மணிக்கு தேர் பவனியும் நடைபெறுகிறது. தேரோட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி சம்பத் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
விழாவில் பக்தர்கள் செடல் அணிந்து கார், பஸ், டிராக்டர், பொக்லை எந்திரம் போன்ற வற்றை இழுத்து சென்று நேர்த்திகடன் செலுத்துவார்கள்
இக்காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும். விழாவையொட்டி தினந்தோறும் சாமி வீதிவுலா இன்னிசை கச்சேரி மற்றும் தெருக்கூத்து நிகழ்ச்சிகள் நடக்கிறது.
- தோழியுடன் வந்த வாலிபர் அதிர்ச்சி
- போலீசார் அந்த புகாரை ஏற்காமல் ஆதாரங்களை கொண்டுவரும் படி அவரை இழுத்தடித்தனர்.
புதுச்சேரி:
புதுவை 100-அடி சாலையில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்த விடுதியில் புதுவையைச்சேர்ந்த ஒரு நபர் தனது தோழியுடன் அறையெடுத்து தங்கியுள்ளார்.
அப்போது அந்த அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அந்த வாலிபர் விடுதி உரிமையார் மற்றும் ஊழியரிடம் கேட்ட போது அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை.
இதையடுத்து தோழியுடன் தங்கிய வாலிபர் இது குறித்து உருளையன் பேட்டை போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் அந்த புகாரை ஏற்காமல் ஆதாரங்களை கொண்டுவரும் படி அவரை இழுத்தடித்தனர்.
ஒருவழியாக அந்தவாலிபர் ஓட்டல் அறையில் கேமரா பொருத்தப்பட்டதற்கான ஆதாரங்களை கொடுத்தார். அதனை ஏற்று போலீசார் விடுதி உரிமையாளர் மற்றும் ஊழியர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
- பணிமுடிந்து வீடு திரும்பிய தனசெல்வி மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- ஐ.டி.ஐ. மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
திருபுவனை அருகே திருவண்டார் கோவில் புதுவை-விழுப்புரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வசிப்பவர் தன செல்வி.
இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். தன செல்வி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.
மகள் அதே பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். மகன் தரணிதரன் (17). எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று நெட்டப்பாக்கம் அரசு ஐ.டி.ஐ. பள்ளியில் முதலாம் ஆண்டு சேர விண்ணப்பித் துள்ளார். இந்த நிலையில் தரணி தரன் செல்போனில் எப்போதும் விளையாடிக்கொ ண்டிருந்தார். இதனை அவரது தாயார் கண்டித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த தரணிதரன் அந்த செல்போனை தரையில் வீசி உடைத்து விட்டார். தன செல்வியும் அவரது மகளும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த தரணிதரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டு தொங்கினார்.
பணிமுடிந்து வீடு திரும்பிய தனசெல்வி மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை தூக்கில் இருந்து மீட்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தரணிதரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தன செல்வி கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செல்போ னில் விளையா டியதை தாய் கண்டித்ததால் ஐ.டி.ஐ. மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






