என் மலர்
புதுச்சேரி

கோவில் தேருக்கு மேற்கூரை அமைக்க நிதியை திருக்கனூர் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் வழங்கிய காட்சி.
கோவில் தேருக்கு மேற்கூரை அமைக்க நிதி-திருக்கனூர் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் வழங்கினர்
- மாவட்ட தலைவர்கள் கலியபெருமாள், தமிழ்மணி, பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- திருக்கனூர் லயன்ஸ் சங்கத் தலைவர் அசார் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் உள்ள தேருக்கு புதிதாக மேற்கூரை அமைக்க திருக்கனூர் லயன்ஸ் சங்கம் சார்பில் ரூ.75 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு திருக்கனூர் லயன்ஸ் சங்கத் தலைவர் அசார் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர்கள் கலியபெருமாள், தமிழ்மணி, பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திருக்கனூர் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சையது, ரங்கநாதன், கோவிந்தன், தெய்வகுமார், லோகேஸ்வரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story






